புதன், 2 ஜூன், 2010

விக்னேஷ் மற்றும் கற்பகம் - இம்மாணவச் செல்வங்களின் மேல் படிப்புக்கு உதவுங்கள்!!!


விக்னேஷ் - திருப்பூர் மாணவன் மற்றும் கற்பகம் - செய்யாமங்கலம், கமுதி. இவர்கள் ஏழ்மையான மாணவ செல்வங்கள். நம் தமிழ்நாட்டிலிருந்து. குடும்ப வறுமையின் காரணமாக தனது கல்லூரி படிப்பை தொடர முடியாத சூழ்நிலை இருவருக்கும். ஆனாலும் மனம் தளராமல் தினமலர் பத்திரிக்கையின் வாயிலாக நமது உதவியை நாடியுள்ளார்கள். ஆதாரம்: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=10790 (விக்னேஷ்), http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=182 (கற்பகம்)...

தங்களது உதவி இம்மாணவனின் வாழ்க்கையில் பிரகாச ஒளி ஏற்படுத்தட்டும்.

ஆம், ஏழைக்கு எழுத்தறிவித்தல் எனப்படும் சுப்ரமணிய பாரதியின் உணர்வு பூர்வமான பாடலை கேள்விபட்டிருப்பீர்கள். இது செயல்பட வேண்டிய தருணம் நண்பர்களே.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

- சுப்பிரமண்ய பாரதி

எடுங்கள் உங்கள் கைபேசியினை. அழையுங்கள் கொடுத்துள்ள கைபேசி எண்ணினை...

விக்னேஷ் - 93675 28737.
கற்பகம் - 95851-41566, 97867-83244.

தங்களுக்கு இவர்களை தொடர்பு கொள்ள சிரமம் நேர்ந்தால், தினமலர் பத்திரிக்கையை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க......

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

குழந்தைகளும், நம் தமிழ் புலமையும்! [Tamil Efficiency]


குழந்தைகள்... நாம் அவர்களுக்கு இந்த உலகத்தை பற்றி அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டுமாம். நாம்தான் அவர்களுக்கு நமது தாய் மொழியிலிருந்து அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டுமாம். அப்போது நமக்கு தெரிந்ததைதானே சொல்லிக்கொடுக்கமுடியும். நமக்கு தெரியுமா? ம்ம்ம்... அதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் ஒன்று... தயவு செய்து நமக்கு மற்றவர்களை விட அதிகம் தெரியும் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அதிலும் தத்தம் குழந்தைகளை விட... நான் என் குழந்தையிடம் தமிழில் தோற்றுப்போன ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்கிறேன்.

நிகழ்வு 1:

இடம்: சாமி அறை
நிகழ்வு: சாமி கும்பிட சொல்லிக்கொடுத்தல் [இங்கேதானே சிக்கினேன்...]
பாத்திரங்கள்: நானும் எனது 1 வயது குழந்தை சிவாத்மிகாவும் [செய்கையும் சில வார்த்தைகளும் மட்டுமே பேசுவார்கள்]

நான்: இதோ பாரம்மா, இவர்தான் முருகன்... இவர் புகைப்படத்தை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்ட பிறகுதான் சாமி கும்பிட வேண்டும்.
சிவாத்மிகாவின் செய்கை: எனது [அதாங்க என்னோட] கன்னத்தில் [சப்பென்று] போட்டு விட்டு அதன் பிறகு அவர் சாமி கும்பிட்டார்.

நான் ஒரு நிமிடம் நிலைகுலைந்து போனேன். ஏன் அவர் தப்பாக புரிந்து கொண்டார் என்று. எனது மனைவியிடம் பகிர்ந்து கொண்டேன். அவர் கூறிய பதில் சிந்திக்கும்படி இருந்தது. மீண்டும் சிவாத்மிகாவுக்கு சாமி கும்பிட சொல்லிக்கொடுக்க முனைந்தேன்.

நான்: இதோ பாரம்மா, இவர்தான் முருகன்... இவர் புகைப்படத்தை பார்த்து உன்னுடைய கன்னத்தில் போட்டுக்கொண்ட பிறகுதான் சாமி கும்பிட வேண்டும்.
சிவாத்மிகாவின் செய்கை: மிக அழகாக அவரது கன்னத்தில் [மெத்துக்கையால்] போட்டு விட்டு அதன் பிறகு அவர் சாமி கும்பிட்டார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது... மேலும் இதிலிருந்து நான் சில விடயங்களை கற்றுக்கொண்டேன் மற்றும் அவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. நமக்கு தமிழ் தெரியும். ஆனால் தெரியாது.
2. நமக்கு தமிழ் தெரியாதபோது அதை அடுத்தவர்களுக்கு அரைகுறையாக சொல்லி கொடுக்ககூடாது.
3. நாம் தமிழை படித்து விட்டுத்தான் நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும்.

நண்பர்களே மேலும்,

1. குழந்தைகளை குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள்.
2. அவர்களுக்கு நம்மை விட அதிகம் புரிந்து கொள்ளக்கூடிய திறன் உண்டு.
3. நீங்கள் அவர்களுக்கு கட்டம் கட்டாதீர்கள். நீங்கள் அவர்களுக்குண்டான தேவைகளை மட்டும் நிறைவேற்றுங்கள். மற்றபடி அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களிடம் விட்டு விடுங்கள். ஏனெனில் நமக்கு அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க தெரியாது.

இன்னும் சிலர் கூறுவது என் காதில் விழுகிறது.

1. அதற்காக குழந்தைகளை அப்படியே விட்டு விட முடியுமா என்று. எப்படிப்பட்ட கனவுகள் வைத்திருக்கிறேன் என்று.

நான் உங்களை விட்டுவிடச்சொல்லவில்லை. ஆனால் நீங்கள் அதற்கு சரியான வழிகாட்டியா என்பதை மட்டும் தீர்மானித்து கொள்ளுங்கள். நீங்கள் கூறியபடி உங்கள் குழந்தை உங்கள் கனவை அதன் கனவாக சுமந்து நனவாக்க விளைய வேண்டுமானால் உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பியுங்கள்.

நான் ஆரம்பித்து விட்டேன். நீங்களும் ஆரம்பித்தால் நலமே!
மேலும் படிக்க......

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

கருப்பட்டியும் சென்னையும்!!!கருப்பட்டி... இந்த வார்த்தையை கேட்டால் அனைத்து தமிழர்களுக்கும் நாவில் எச்சில் ஊறும். ஆனால் இன்றோ அதன் நிலை என்ன? கீழ்க்கண்ட அனுபவங்களில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

இடம் 1: சரவணா ஸ்டோர்ஸ், பலசரக்கு பிரிவு, தி.நகர், சென்னை. நான் அவரிடம் கருப்பட்டி இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்று சொல்லியிருந்தால் கூட மனம் வெறுத்திருக்க மாட்டேன். ஆனால் அவர் என்ன கேட்டார் தெரியுமா? கருப்பட்டி என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? நான் பதில் பேச கூட தெம்பில்லாமல் அங்கிருந்து நகர்ந்து வந்து விட்டேன்.

இடம் 2: மளிகை கடை, அரும்பாக்கம், சென்னை. நான் கடைகாரரிடம் கருப்பட்டி இருக்கிறதா என்று கேட்டேன். அவரும் அது என்ன என்று கேட்டார். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத சக்திக்குமரன் [அதாங்க நாந்தேன்...] கருப்பட்டியை பற்றி விளக்க ஆரம்பித்தான். அது வெல்லம் போல இருக்கும், கருப்பாக இருக்கும் என்று காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பை போல அதன் அங்க அடையாளங்களை பற்றி விளக்க ஆரம்பித்தான். அவரும் நான் நாளைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். நானும் அடுத்த நாள் சென்றேன். அவரும் எடுத்து கொடுத்து விட்டு 100gm ரூ.20/- என்றார். நான் திடுக்கிட்டு மதுரையில் கிலோவே ரூ.90/- தானே. நீங்கள் சொல்வதை பார்த்தால் கிலோ ரூ.200/-க்கு சொல்கிறீர்களே என்றேன். அதற்கு அவர் என்ன கூறினார் தெரியுமா? கிடைக்காத பொருளென்றால் அப்படித்தான் என்றார்.

இதிலிருந்து எனக்கு விளங்குவது என்னவென்றால்,

1) கருப்பட்டியை தமிழர்கள் மறக்க தொடங்கி விட்டார்கள், அல்லது
2) சத்தமில்லாமல் இந்த உலகத்தை விட்டு கருப்பட்டியை ஒழிக்க தொடங்கி விட்டார்கள்

கருப்பட்டி... மிக சிறந்த இனிப்பு பலகாரங்களுக்கு உதவும் ஒரு பொருள் மட்டுமல்ல. அது மருத்துவ குணங்களும் நிறைந்தது.

1) சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்
2) அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

இப்பேர்ப்பட்ட கருப்பட்டியை நாம் மறந்து கொண்டிருக்கிறோம். அன்பர்களே நாம் இப்படி ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருந்தால் இறுதியில் நாம் நம் அடையாளத்தை இழந்து விடுவோம். நம் குழந்தைகளிடம் நமது உணவு முறைகளையும் அதன் மகிமைகளையும் எடுத்து கூறுங்கள். மக்கள் தொடர்ந்து கேட்டால்தான் கடைகாரர்களும் அதை வாங்கி வைப்பார்கள். நாம் வெறும் பெப்சியும் கோக்கும் மட்டும் கேட்டால் அவர்கள் அதை மட்டும்தான் மக்கள் பார்வையில் வைப்பார்கள். நாளடைவில் நமது உணவு பொருள்களும் கிடைக்காது, மறந்தும் போகும் நமது அடுத்த தலைமுறையினருக்கு.
மேலும் படிக்க......

சனி, 9 ஜனவரி, 2010

வட்டம் [Circle], அண்டம் [Galaxy], பேரண்டம் [Universe], வெற்றிடம் [Vacuum], சதாசிவம் [SathaSivam]


வட்ட வழிக்குள்ளே மருவும் சதாசிவத்தைக்
கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்?

இது பதினெண் சித்தர்களில் ஒருவரான பத்திரகிரியாரின் மெயஞானப்புலம்பலில் உள்ள 71வது பாடல்.

இதன் அர்த்தம் யாதெனில் நமது உலகம், அண்டம் மற்றும் பேரண்டம் அனைத்துமே வட்ட வடிவானவை. இது அனைத்திலுமே நிரம்பியவனே சதா சிவமயமானவன். இவனை நம் கிட்டத்தில் [அருகில்] பார்க்க எப்போது அருள் கிடைக்கும் என்பதே.

இதில் என்ன பேரதிசயம் என்கிறீர்களா?

நம் உலகம் வட்டம் என்று கண்டு பிடித்த ஒரு விஞ்ஞானியை முட்டாள் என்று சொன்ன உலகம் இது. ஆனால் அதன் பிறகு உணர்ந்த உலகம் இது. இந்த நிகழ்வுகள் அனைத்துமே தற்சமயத்தில் நடந்த விடயங்கள். ஆனால் இந்த சித்தர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்? இவர் பட்டினத்தாரின் சீடர் எனப்படுகிறது. பட்டினத்தார் கி.பி.11ம் நூற்றாண்டை சேர்ந்தவர். எனவே பத்திரகிரியாரின் காலமும் இதுவே எனப்படுகிறது. அப்படியானால் இந்த பேரண்டத்தில் உள்ள அனைத்துமே வட்ட வடிவானவை என்று எப்படி இவரால் கணித்திருக்க இயலும்? இச்சித்தர்களின் நுண்ணறிவை நாமும் ஆராய்தல் வேண்டும்.

மேலும் "வட்ட தேற்றம் [Circular Theory]" என்று ஒன்று உண்டு. இதன் படி பார்த்தால் இந்த உலகில் அனைத்தும் வட்ட வடிவானவையே [ஆதாரம்: www.circular-theory.com]. இந்த வலைதளத்தை படித்துப்பாருங்கள். மிகவும் பயனுள்ள அதே சமயம் ஆச்சரியப்படத்தக்க வகையிலே அமைந்த ஒரு வலைத்தளம்.

இந்த தேற்றத்தின் படி,

1) காலம் [Time] வட்ட வடிவானவையே:

காலம். இந்த வார்த்தை மற்றும் இதன் தாத்பரியம் எல்லாம் எதனால் உருவானது? இந்த பேரண்டத்தில் உள்ள நிகழ்வுகளால் அல்லது மாற்றங்களால் அல்லது இட மாற்றத்தால் [Movements] உருவானது. இவை அனைத்துமே மறுபடியும் நடக்க கூடியது. அப்படியானால் இந்நிகழ்வுகள் அல்லது இம்மாற்றங்கள் அல்லது இவ்விடமாற்றங்கள் அனைத்துமே மறுபடியும் [Repeat] நடக்க கூடியவையே. மறுபடியும் என்ற நிகழ்வு நிகழும் போதே இது வட்ட வடிவானவை என்பது முடிவாகிறது.

2) சக்தி [Energy] வட்ட வடிவானவையே

சக்தி. இந்த வார்த்தை மற்றும் இதன் தாத்பரியம் எல்லாம் எதனால் உருவானது? இந்த பேரண்டத்தில் உள்ள நிகழ்வுகளால் அல்லது மாற்றங்களால் அல்லது இட மாற்றத்தால் [Movements] உருவானது. ஏனெனில் ஒரு இயக்கம் இல்லாமல் எதுவும் நகராது. இயக்கம் வேண்டுமெனில் சக்தி வேண்டும். காலம் வட்ட வடிவானவையாக இருக்கும்போது அதை அடிப்படையாக கொண்டு இயங்கும் சக்தியும் வட்ட வடிவானவையாகவே இருக்கும்.

3) வெளி [Space] வட்ட வடிவானவையே

ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Shape_of_the_Universe#Spherical_universe

வட்டம். இந்த வடிவத்தை நம் குழந்தைகள் ஆராய்ந்தால் [முனைவர் பட்டத்துக்காக] மேலும் நமக்கு விவரங்கள் கிடைக்கலாம். அதைதான் நாம் எதிர்பார்க்கவேண்டும்.
மேலும் படிக்க......