ஞாயிறு, 24 ஜனவரி, 2010

கருப்பட்டியும் சென்னையும்!!!கருப்பட்டி... இந்த வார்த்தையை கேட்டால் அனைத்து தமிழர்களுக்கும் நாவில் எச்சில் ஊறும். ஆனால் இன்றோ அதன் நிலை என்ன? கீழ்க்கண்ட அனுபவங்களில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

இடம் 1: சரவணா ஸ்டோர்ஸ், பலசரக்கு பிரிவு, தி.நகர், சென்னை. நான் அவரிடம் கருப்பட்டி இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்று சொல்லியிருந்தால் கூட மனம் வெறுத்திருக்க மாட்டேன். ஆனால் அவர் என்ன கேட்டார் தெரியுமா? கருப்பட்டி என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? நான் பதில் பேச கூட தெம்பில்லாமல் அங்கிருந்து நகர்ந்து வந்து விட்டேன்.

இடம் 2: மளிகை கடை, அரும்பாக்கம், சென்னை. நான் கடைகாரரிடம் கருப்பட்டி இருக்கிறதா என்று கேட்டேன். அவரும் அது என்ன என்று கேட்டார். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத சக்திக்குமரன் [அதாங்க நாந்தேன்...] கருப்பட்டியை பற்றி விளக்க ஆரம்பித்தான். அது வெல்லம் போல இருக்கும், கருப்பாக இருக்கும் என்று காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பை போல அதன் அங்க அடையாளங்களை பற்றி விளக்க ஆரம்பித்தான். அவரும் நான் நாளைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். நானும் அடுத்த நாள் சென்றேன். அவரும் எடுத்து கொடுத்து விட்டு 100gm ரூ.20/- என்றார். நான் திடுக்கிட்டு மதுரையில் கிலோவே ரூ.90/- தானே. நீங்கள் சொல்வதை பார்த்தால் கிலோ ரூ.200/-க்கு சொல்கிறீர்களே என்றேன். அதற்கு அவர் என்ன கூறினார் தெரியுமா? கிடைக்காத பொருளென்றால் அப்படித்தான் என்றார்.

இதிலிருந்து எனக்கு விளங்குவது என்னவென்றால்,

1) கருப்பட்டியை தமிழர்கள் மறக்க தொடங்கி விட்டார்கள், அல்லது
2) சத்தமில்லாமல் இந்த உலகத்தை விட்டு கருப்பட்டியை ஒழிக்க தொடங்கி விட்டார்கள்

கருப்பட்டி... மிக சிறந்த இனிப்பு பலகாரங்களுக்கு உதவும் ஒரு பொருள் மட்டுமல்ல. அது மருத்துவ குணங்களும் நிறைந்தது.

1) சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்
2) அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

இப்பேர்ப்பட்ட கருப்பட்டியை நாம் மறந்து கொண்டிருக்கிறோம். அன்பர்களே நாம் இப்படி ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருந்தால் இறுதியில் நாம் நம் அடையாளத்தை இழந்து விடுவோம். நம் குழந்தைகளிடம் நமது உணவு முறைகளையும் அதன் மகிமைகளையும் எடுத்து கூறுங்கள். மக்கள் தொடர்ந்து கேட்டால்தான் கடைகாரர்களும் அதை வாங்கி வைப்பார்கள். நாம் வெறும் பெப்சியும் கோக்கும் மட்டும் கேட்டால் அவர்கள் அதை மட்டும்தான் மக்கள் பார்வையில் வைப்பார்கள். நாளடைவில் நமது உணவு பொருள்களும் கிடைக்காது, மறந்தும் போகும் நமது அடுத்த தலைமுறையினருக்கு.
மேலும் படிக்க......

சனி, 9 ஜனவரி, 2010

வட்டம் [Circle], அண்டம் [Galaxy], பேரண்டம் [Universe], வெற்றிடம் [Vacuum], சதாசிவம் [SathaSivam]


வட்ட வழிக்குள்ளே மருவும் சதாசிவத்தைக்
கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்?

இது பதினெண் சித்தர்களில் ஒருவரான பத்திரகிரியாரின் மெயஞானப்புலம்பலில் உள்ள 71வது பாடல்.

இதன் அர்த்தம் யாதெனில் நமது உலகம், அண்டம் மற்றும் பேரண்டம் அனைத்துமே வட்ட வடிவானவை. இது அனைத்திலுமே நிரம்பியவனே சதா சிவமயமானவன். இவனை நம் கிட்டத்தில் [அருகில்] பார்க்க எப்போது அருள் கிடைக்கும் என்பதே.

இதில் என்ன பேரதிசயம் என்கிறீர்களா?

நம் உலகம் வட்டம் என்று கண்டு பிடித்த ஒரு விஞ்ஞானியை முட்டாள் என்று சொன்ன உலகம் இது. ஆனால் அதன் பிறகு உணர்ந்த உலகம் இது. இந்த நிகழ்வுகள் அனைத்துமே தற்சமயத்தில் நடந்த விடயங்கள். ஆனால் இந்த சித்தர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்? இவர் பட்டினத்தாரின் சீடர் எனப்படுகிறது. பட்டினத்தார் கி.பி.11ம் நூற்றாண்டை சேர்ந்தவர். எனவே பத்திரகிரியாரின் காலமும் இதுவே எனப்படுகிறது. அப்படியானால் இந்த பேரண்டத்தில் உள்ள அனைத்துமே வட்ட வடிவானவை என்று எப்படி இவரால் கணித்திருக்க இயலும்? இச்சித்தர்களின் நுண்ணறிவை நாமும் ஆராய்தல் வேண்டும்.

மேலும் "வட்ட தேற்றம் [Circular Theory]" என்று ஒன்று உண்டு. இதன் படி பார்த்தால் இந்த உலகில் அனைத்தும் வட்ட வடிவானவையே [ஆதாரம்: www.circular-theory.com]. இந்த வலைதளத்தை படித்துப்பாருங்கள். மிகவும் பயனுள்ள அதே சமயம் ஆச்சரியப்படத்தக்க வகையிலே அமைந்த ஒரு வலைத்தளம்.

இந்த தேற்றத்தின் படி,

1) காலம் [Time] வட்ட வடிவானவையே:

காலம். இந்த வார்த்தை மற்றும் இதன் தாத்பரியம் எல்லாம் எதனால் உருவானது? இந்த பேரண்டத்தில் உள்ள நிகழ்வுகளால் அல்லது மாற்றங்களால் அல்லது இட மாற்றத்தால் [Movements] உருவானது. இவை அனைத்துமே மறுபடியும் நடக்க கூடியது. அப்படியானால் இந்நிகழ்வுகள் அல்லது இம்மாற்றங்கள் அல்லது இவ்விடமாற்றங்கள் அனைத்துமே மறுபடியும் [Repeat] நடக்க கூடியவையே. மறுபடியும் என்ற நிகழ்வு நிகழும் போதே இது வட்ட வடிவானவை என்பது முடிவாகிறது.

2) சக்தி [Energy] வட்ட வடிவானவையே

சக்தி. இந்த வார்த்தை மற்றும் இதன் தாத்பரியம் எல்லாம் எதனால் உருவானது? இந்த பேரண்டத்தில் உள்ள நிகழ்வுகளால் அல்லது மாற்றங்களால் அல்லது இட மாற்றத்தால் [Movements] உருவானது. ஏனெனில் ஒரு இயக்கம் இல்லாமல் எதுவும் நகராது. இயக்கம் வேண்டுமெனில் சக்தி வேண்டும். காலம் வட்ட வடிவானவையாக இருக்கும்போது அதை அடிப்படையாக கொண்டு இயங்கும் சக்தியும் வட்ட வடிவானவையாகவே இருக்கும்.

3) வெளி [Space] வட்ட வடிவானவையே

ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Shape_of_the_Universe#Spherical_universe

வட்டம். இந்த வடிவத்தை நம் குழந்தைகள் ஆராய்ந்தால் [முனைவர் பட்டத்துக்காக] மேலும் நமக்கு விவரங்கள் கிடைக்கலாம். அதைதான் நாம் எதிர்பார்க்கவேண்டும்.
மேலும் படிக்க......