வட்ட வழிக்குள்ளே மருவும் சதாசிவத்தைக்
கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்?
இது பதினெண் சித்தர்களில் ஒருவரான பத்திரகிரியாரின் மெயஞானப்புலம்பலில் உள்ள 71வது பாடல்.
இதன் அர்த்தம் யாதெனில் நமது உலகம், அண்டம் மற்றும் பேரண்டம் அனைத்துமே வட்ட வடிவானவை. இது அனைத்திலுமே நிரம்பியவனே சதா சிவமயமானவன். இவனை நம் கிட்டத்தில் [அருகில்] பார்க்க எப்போது அருள் கிடைக்கும் என்பதே.
இதில் என்ன பேரதிசயம் என்கிறீர்களா?
நம் உலகம் வட்டம் என்று கண்டு பிடித்த ஒரு விஞ்ஞானியை முட்டாள் என்று சொன்ன உலகம் இது. ஆனால் அதன் பிறகு உணர்ந்த உலகம் இது. இந்த நிகழ்வுகள் அனைத்துமே தற்சமயத்தில் நடந்த விடயங்கள். ஆனால் இந்த சித்தர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்? இவர் பட்டினத்தாரின் சீடர் எனப்படுகிறது. பட்டினத்தார் கி.பி.11ம் நூற்றாண்டை சேர்ந்தவர். எனவே பத்திரகிரியாரின் காலமும் இதுவே எனப்படுகிறது. அப்படியானால் இந்த பேரண்டத்தில் உள்ள அனைத்துமே வட்ட வடிவானவை என்று எப்படி இவரால் கணித்திருக்க இயலும்? இச்சித்தர்களின் நுண்ணறிவை நாமும் ஆராய்தல் வேண்டும்.
மேலும் "வட்ட தேற்றம் [Circular Theory]" என்று ஒன்று உண்டு. இதன் படி பார்த்தால் இந்த உலகில் அனைத்தும் வட்ட வடிவானவையே [ஆதாரம்: www.circular-theory.com]. இந்த வலைதளத்தை படித்துப்பாருங்கள். மிகவும் பயனுள்ள அதே சமயம் ஆச்சரியப்படத்தக்க வகையிலே அமைந்த ஒரு வலைத்தளம்.
இந்த தேற்றத்தின் படி,
1) காலம் [Time] வட்ட வடிவானவையே:
காலம். இந்த வார்த்தை மற்றும் இதன் தாத்பரியம் எல்லாம் எதனால் உருவானது? இந்த பேரண்டத்தில் உள்ள நிகழ்வுகளால் அல்லது மாற்றங்களால் அல்லது இட மாற்றத்தால் [Movements] உருவானது. இவை அனைத்துமே மறுபடியும் நடக்க கூடியது. அப்படியானால் இந்நிகழ்வுகள் அல்லது இம்மாற்றங்கள் அல்லது இவ்விடமாற்றங்கள் அனைத்துமே மறுபடியும் [Repeat] நடக்க கூடியவையே. மறுபடியும் என்ற நிகழ்வு நிகழும் போதே இது வட்ட வடிவானவை என்பது முடிவாகிறது.
2) சக்தி [Energy] வட்ட வடிவானவையே
சக்தி. இந்த வார்த்தை மற்றும் இதன் தாத்பரியம் எல்லாம் எதனால் உருவானது? இந்த பேரண்டத்தில் உள்ள நிகழ்வுகளால் அல்லது மாற்றங்களால் அல்லது இட மாற்றத்தால் [Movements] உருவானது. ஏனெனில் ஒரு இயக்கம் இல்லாமல் எதுவும் நகராது. இயக்கம் வேண்டுமெனில் சக்தி வேண்டும். காலம் வட்ட வடிவானவையாக இருக்கும்போது அதை அடிப்படையாக கொண்டு இயங்கும் சக்தியும் வட்ட வடிவானவையாகவே இருக்கும்.
3) வெளி [Space] வட்ட வடிவானவையே
ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Shape_of_the_Universe#Spherical_universe
வட்டம். இந்த வடிவத்தை நம் குழந்தைகள் ஆராய்ந்தால் [முனைவர் பட்டத்துக்காக] மேலும் நமக்கு விவரங்கள் கிடைக்கலாம். அதைதான் நாம் எதிர்பார்க்கவேண்டும்.
மேலும் படிக்க......