ஞாயிறு, 24 ஜனவரி, 2010

கருப்பட்டியும் சென்னையும்!!!



கருப்பட்டி... இந்த வார்த்தையை கேட்டால் அனைத்து தமிழர்களுக்கும் நாவில் எச்சில் ஊறும். ஆனால் இன்றோ அதன் நிலை என்ன? கீழ்க்கண்ட அனுபவங்களில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

இடம் 1: சரவணா ஸ்டோர்ஸ், பலசரக்கு பிரிவு, தி.நகர், சென்னை. நான் அவரிடம் கருப்பட்டி இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்று சொல்லியிருந்தால் கூட மனம் வெறுத்திருக்க மாட்டேன். ஆனால் அவர் என்ன கேட்டார் தெரியுமா? கருப்பட்டி என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? நான் பதில் பேச கூட தெம்பில்லாமல் அங்கிருந்து நகர்ந்து வந்து விட்டேன்.

இடம் 2: மளிகை கடை, அரும்பாக்கம், சென்னை. நான் கடைகாரரிடம் கருப்பட்டி இருக்கிறதா என்று கேட்டேன். அவரும் அது என்ன என்று கேட்டார். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத சக்திக்குமரன் [அதாங்க நாந்தேன்...] கருப்பட்டியை பற்றி விளக்க ஆரம்பித்தான். அது வெல்லம் போல இருக்கும், கருப்பாக இருக்கும் என்று காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பை போல அதன் அங்க அடையாளங்களை பற்றி விளக்க ஆரம்பித்தான். அவரும் நான் நாளைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். நானும் அடுத்த நாள் சென்றேன். அவரும் எடுத்து கொடுத்து விட்டு 100gm ரூ.20/- என்றார். நான் திடுக்கிட்டு மதுரையில் கிலோவே ரூ.90/- தானே. நீங்கள் சொல்வதை பார்த்தால் கிலோ ரூ.200/-க்கு சொல்கிறீர்களே என்றேன். அதற்கு அவர் என்ன கூறினார் தெரியுமா? கிடைக்காத பொருளென்றால் அப்படித்தான் என்றார்.

இதிலிருந்து எனக்கு விளங்குவது என்னவென்றால்,

1) கருப்பட்டியை தமிழர்கள் மறக்க தொடங்கி விட்டார்கள், அல்லது
2) சத்தமில்லாமல் இந்த உலகத்தை விட்டு கருப்பட்டியை ஒழிக்க தொடங்கி விட்டார்கள்

கருப்பட்டி... மிக சிறந்த இனிப்பு பலகாரங்களுக்கு உதவும் ஒரு பொருள் மட்டுமல்ல. அது மருத்துவ குணங்களும் நிறைந்தது.

1) சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்
2) அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

இப்பேர்ப்பட்ட கருப்பட்டியை நாம் மறந்து கொண்டிருக்கிறோம். அன்பர்களே நாம் இப்படி ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருந்தால் இறுதியில் நாம் நம் அடையாளத்தை இழந்து விடுவோம். நம் குழந்தைகளிடம் நமது உணவு முறைகளையும் அதன் மகிமைகளையும் எடுத்து கூறுங்கள். மக்கள் தொடர்ந்து கேட்டால்தான் கடைகாரர்களும் அதை வாங்கி வைப்பார்கள். நாம் வெறும் பெப்சியும் கோக்கும் மட்டும் கேட்டால் அவர்கள் அதை மட்டும்தான் மக்கள் பார்வையில் வைப்பார்கள். நாளடைவில் நமது உணவு பொருள்களும் கிடைக்காது, மறந்தும் போகும் நமது அடுத்த தலைமுறையினருக்கு.

17 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//இப்பேர்ப்பட்ட கருப்பட்டியை நாம் மறந்து கொண்டிருக்கிறோம்.//

இல்லை நண்பரே மறந்தே விட்டோம்...
கருப்பட்டி சாப்பிட்டு 15 வருஷத்திற்கு மேல் இருக்கும்...

கருப்பட்டி சுக்கு காபியின் சுவையே தனி...

கருப்பட்டியை சாப்பிட்டால் உடல் சூட்டைத்தணிக்கும்...

பெயரில்லா சொன்னது…

மலையாளிகள் புண்ணியத்தில் இங்கே பஹ்ரைனில் கிடைக்கிறது

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

அன்புள்ள சங்கவி மற்றும் பெயரில்லா அன்பருக்கு,

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. மிக்க வருத்தம் தரக்கூடிய நிகழ்வுகள் இவையெல்லாம். ஆனால் நமக்கு இதை கவனிக்க நேரம் இல்லை. பேசாமல் இவைகளையெல்லாம் [நமது உணவு பதார்த்தங்களைத்தான்] சேகரித்து ஒரு கடை கூட போட்டு விடலாம் போல உள்ளது. ஏனெனில் அந்த அளவுக்கு நாம் இவைகளை மறந்து கொண்டிருக்கிறோம்.

இன்னமும் இவையெல்லாம் சில கடைகளில் கிடைத்து கொண்டுதானிருக்கின்றன. கிராமங்களிலும் கிடைக்கத்தான் செய்கின்றன. ஆனால் நகரங்களில்தான் சுத்தமாக மறந்து கொண்டிருக்கிறோம்.

கருப்பட்டி சுக்கு காப்பி... ஆகா! நாவில் சுவை ஊறுகிறதே சங்கவி!

நல்ல தகவல் என்னவென்றால், மலையாளிகள் கருப்பட்டி நன்றாக உபயோகிக்கிறார்கள் என்பதுதான்.

நன்றி.
சக்திக்குமரன் விஜயராகவன்.

Aravind Ganesh சொன்னது…

Sakthikumaram avargaley, naanum idhai chennai yil naan vaazhndha mudhal varshathileyey arindhen.. Aanal idharku kaaranam karuppattiyin azhindhu varum prabalam alla, vada tamil naattil karuppatti patri arindhavarkal mikakkuraivu, karuppatti thayaripadhu then tamil naattil dhaan.. Angu karuppatti yin rasigargal innum adhai vaazha vaithukondu dhaan irukkiraarkal.. Udharanathirku ennaiyey eduthu kollungal, naan kadandha oru varudamaga calcutta vil padithu varukiren, en petror ennai paarka vandha podhu naan madurai yil irundhu kondu vara sonnadhu karuppattiyai dhaan.. :) Eppodhellam enakku veettu sappadu gnabagam varukiradho, appodhu oru kadi karuppatti podhum, en aasaikal niraiveriyadhu polirukkum..

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

திரு. அரவிந்த் கணேஷ் அவர்களே,

வட தமிழ்நாட்டில் கருப்பட்டியை அறிந்தவர்களை விட தென் தமிழ்நாட்டில் அறிந்தவர்கள் அதிகம் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் கூறுவது இப்போது உண்மையாக இருக்கலாம். ஆனால் ஆழ பார்த்தால் அது காரணம் அல்ல. ஏனெனில் வட தமிழ்நாடு என நீங்கள் கூறும் சென்னையில் உள்ளவர்களில் முக்கால்வாசி பேர்களை கேட்டால் அவர்களது சொந்த ஊர் அல்லது பூர்வீகம் என தென் தமிழ்நாட்டில் ஒரு பகுதியைத்தான் குறிப்பிடுவர். எனவே அவர்களும் தென் தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள்தான். ஏன் நானும் மதுரையில் இருந்து தற்போது சென்னையில் குடியேறியுள்ளேன். ஆனால் நான் என் குழந்தைக்கு கருப்பட்டி பற்றி சொல்லாமல், சத்து மாவு பற்றி சொல்லாமல் வளர்த்தேன் என்றால் இன்னும் 5 வருடங்களில் என் குழந்தை இவற்றை மறந்துவிடும். இதுதான் உண்மையான காரணம். அதாவது பெற்றோர்களே இதற்கு காரணம் என்பேன். அவர்கள் இதில் உறுதியாக இல்லாமல் புதிதாக வருவனவற்றை மட்டும் சாப்பிட்டு குழந்தைகளை வளர்த்தார்களானால் இதுதான் பலனாக இருக்கும் என்பதே எனது தாழ்மையான கருத்து.

அன்புடன்,
சக்திக்குமரன் விஜயராகவன்.

virutcham சொன்னது…

இதே அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது.
பின்னால் தெரிந்து கொண்டேன் சென்னையில் இதற்குப் பெயர் பனை வெல்லம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதன் பயன்பாடு இங்கு குறைவு. இன்னும் பாட்டி வைத்திய முறை களை பின் பற்றும் நம்மைப் போல் சிலர் மட்டுமே இதை உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

http://www.virutcham.com/

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

மிக்க சரி விருட்சம்! ஆனால் நாம் நம்மளவிலாவது நமது பாட்டி வைத்திய முறைகளை பேணி பாதுகாக்கலாமே!

Thamizh kirukan சொன்னது…

ந‌ண்ப‌ர் ச‌க்திகுமாரன் அவ‌ர்க‌ளுக்கு த‌மிழ் கிருக்கணின் வ‌ணக்க‌ம்,

க‌ருப்ப‌ட்டியில் இணைந்த‌ உம‌து கருத்துக்‌களை ப‌டித்தேன். உம‌து க‌ட்டுரையும் ஒரு க‌ருப‌ட்டி தானோ? மொழியின் செம்மை இனிப்பு, க‌ட்டுரையின் பொருளில் கார‌ம். இது அல்ல‌வா ந‌ம‌து க‌ருப‌ட்டியின் செம்மையும்? ஓரு சேதி சொல்ல‌ட்டுமா?, த‌மிழ்நாட்டில், அதுவும் சிங்கார‌ சென்னையில் கிடைகாத‌ இந்த‌ க‌ருப‌ட்டி, இங்கே அர‌பு நாடுக‌ளில் தாராளமாக‌ கிடைக்கிறது.
ஒரு வ‌கையில் ந‌மது த‌மிழும் அப்ப‌டி தான்.. த‌மிழக‌த்தில் ம‌லிந்து ந‌லிந்து கிட‌க்கிற‌து, ஆனால் வெளி நா‌டுக‌ளில் த‌மிழர்க‌ளா‌ல் சீராட்டி பாராட்டி வ‌ளர்க்க‌ ப‌டுகிறது.

நான் இந்த‌ இணைய‌தள க‌லாச்சாறத்‌திற்கு புதிய‌வ‌ன். தமிழை ப‌ற்றி அதிக‌ம் சிந்திப்ப‌து இல்லை.. சுவாச‌த்தை ப‌ற்றி நின்று சிந்தித்து பார்ப‌வ‌ர் உண்டா? ஆனால் ஒரு ஐந்து நிமிட‌ம் அந்த‌ சுவாச‌‌ம் இல்லாம‌ல் போனால்? ‍

த‌மிழால் தொட‌ர்ந்து இருப்போம், ந‌ட்பால் இணைந்து இருப்போம். : த‌மிழ் கிருக்கண்

Maverick சொன்னது…

Nanbare, karupattiyai patri azhagaga ezhudiyirukirirgal. Ondre ondrai koora virumbukiren. Vellam pola irukkum enbadil mellina la payanpaduttha vendum. neengal ezhudiyadu, vellam- which means flood. Kindly correct it.
Nandri

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

அன்புள்ள தமிழ் கிறுக்கன் அவர்களே, தங்களது பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. ஆம், தமிழால் தொடர்ந்திருப்போம், நட்பால் இணைந்திருப்போம்.

அன்புள்ள மேவேரிக் அவர்களே, தங்களது சுட்டலுக்கு மிக்க நன்றி. வெள்ளம் என்பது வெல்லமாக்கப்பட்டுவிட்டது. மீண்டும் நன்றி.

கலியுகன் சொன்னது…

யாழ்ப்பாணத்திலும் கருப்பட்டி, பனங்கட்டியாக தாரளமாகவே கிடைக்குறது.

எமக்கென்று உள்ளவற்றை சிதைப்பதே இக்காலத்தில் வளர்ச்சியாக கருதப்படுகிறது.

---
தமிழ் "BASTARDIZATION" in Tamil Blogdom
http://blog.kaliyugan.com/-basterdization-in-tamil-blogdom
--

நன்றி

Prasanna Rajan சொன்னது…

அவிச்ச கடலை சாப்பிட்டா அநியாத்துக்கு பித்தமுங்க. அதை போக்கக் கூடிய அரு மருந்து கருப்பட்டி. நல்ல வேளை, என் சொந்த ஊரான தேனி பக்கம் இன்னும் இந்த நெலமை வரலை. இன்னும் ஒரு 25 வருஷத்துக்காவது வராதுன்னு நெனைக்கிறேன். கூடிய சீக்கிரம் தொல்பொருள் ஆராய்ச்சியில், அறிய பொருட்கள் லிஸ்டில் இதையும் இணைச்சுருவாங்கன்னு நெனைக்கிறேன்...

பெயரில்லா சொன்னது…

//ஏனெனில் வட தமிழ்நாடு என நீங்கள் கூறும் சென்னையில் உள்ளவர்களில் முக்கால்வாசி பேர்களை கேட்டால் அவர்களது சொந்த ஊர் அல்லது பூர்வீகம் என தென் தமிழ்நாட்டில் ஒரு பகுதியைத்தான் குறிப்பிடுவர்.//

இது தவறான தகவல்.... முக்கால்வாசி பேர் எல்லாம் இல்லை..கால்வாசி பேர் தான் தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள். நான் வட தமிழ்நாட்டை சேர்ந்தவன் தான்... மதுராந்தகம் அருகில் இருக்கும் எங்கள் ஊருக்கு செல்லும் போது எல்லாம் கருப்பட்டி காபி குடிப்பேன்.... வட தமிழகத்தில் கருப்பட்டியை அறியாதவர்கள் இல்லை..... நீங்க சொன்ன சரவணா கடை தென்தமிழகத்தை சேர்ந்தவர்களுடையது என்பதை நினைவில் கொள்ளுங்கள்..... எதற்க்கு எடுத்தாலும் வட தமிழகத்தை குறிப்பாக சென்னையை குறை சொல்வதை நிறுத்தி கொள்ளுங்கள் உங்களை வாழ வைக்கும் ஊர் சென்னை என்பதை மறவாதீர்கள்.... "நன்றி மறப்பது நன்றன்று...."

"வாழ்க..வக்கற்று வருவோரை எல்லாம் வாழ வைக்கும் வட தமிழ்நாடு.."

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

திரு. பல்லவர் அவர்களே,

தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி. ஆனால் நீங்கள் உங்கள் கருத்தை தயவுசெய்து மறு ஆய்வு செய்யுங்கள். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் அல்லது உங்களது பாட்டனார்கள் வகையை ஆய்வு செய்யுங்கள். உங்களுக்கு எனது கருத்து புரியும். மேலும் நான் கருப்பட்டி பற்றி சொன்னதற்கும் சென்னையை வெறுத்து விமர்சிப்பதாகவும் கூறுவது சம்பந்தமில்லாதது. நான் பொதுவாக நகர வாழ்க்கையின் வேகத்தில் காணாமல் போகும் நல்ல விஷயங்களை பற்றி பேசினேன். சரவணா ஸ்டோர்ஸ் பற்றி கூறியிருக்கிறீர்கள். நான் பேசியது முதலாளியிடமில்லை. அங்கு வேலை பார்க்கும் ஒரு வட இந்திய தொழிலாளியிடமிருந்து.

எனினும் நான் தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். ஆனால் இந்த வட, தென் என்று பிரித்துப் பேசுவதை நிறுத்தினால் நல்லது என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் இந்த கருத்துக்கு எதிரானவன். எனது இந்தக் கட்டுரையின் நோக்கம் கருப்பட்டி பற்றியது மட்டுமே.

நன்றி.
சக்திக்குமரன் வி

வாழ்கதமிழ் பா.வெ.சிவா சொன்னது…

அன்பு தமிழ் நண்பர்களே உங்களுடன் இங்கு நான் இணைவதில் மகிழ்ச்சி..

நண்பர்களே நம் தமிழ்மக்கள் நம் தாய்தமிழ் மொழியை பேசுவதையே, தவறாகவும் கேவலமாகவும் நினைக்கிறார்கள் , இதுவே
நம் பழமை மிகுந்த கலாச்சாரமும் நோயற்ற உணவு பழக்க வழக்கங்களும் காணமல் போனதற்கு காரணம்.. எனவே முதலில் நாம் நம் தமிழ் மொழியை பற்றியும் அதன் பழமை,புகழ்,மற்றும் அதன் முக்கியதுவத்தையும் , பெருமையையும் நம் தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.அதன் பிறகு தன நம் பழந்தமிழர்களின் நோயற்ற உணவு பழக்கவழக்கங்களை புரியவைக்க முடியும்..

--


" நன்றி "
என்றும் ப்ரியமுடன் ,
வாழ்க தமிழ் முனைவர் வெ.சிவசங்கரன் ,
ஆராய்சியியல் மாணவர்,
மின்னணுவியல் மற்றும் நுண்கருவியியல் துறை,
பாரதியார் பல்கலைகழகம்,
கோயம்புத்தூர்.
கைபேசி எண்:9943799941,9566444515.
மின்னஞ்சல் முகவரி siva.kala.psg@gmail.com, vaazhgathamilsiva@gmail.com,

வாழ்கதமிழ் பா.வெ.சிவா சொன்னது…

அன்பு தமிழ் நண்பர்களே உங்களுடன் இங்கு நான் இணைவதில் மகிழ்ச்சி..

நண்பர்களே நம் தமிழ்மக்கள் நம் தாய்தமிழ் மொழியை பேசுவதையே, தவறாகவும் கேவலமாகவும் நினைக்கிறார்கள் , இதுவே
நம் பழமை மிகுந்த கலாச்சாரமும் நோயற்ற உணவு பழக்க வழக்கங்களும் காணமல் போனதற்கு காரணம்.. எனவே முதலில் நாம் நம் தமிழ் மொழியை பற்றியும் அதன் பழமை,புகழ்,மற்றும் அதன் முக்கியதுவத்தையும் , பெருமையையும் நம் தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.அதன் பிறகு தன நம் பழந்தமிழர்களின் நோயற்ற உணவு பழக்கவழக்கங்களை புரியவைக்க முடியும்..

--


" நன்றி "
என்றும் ப்ரியமுடன் ,
வாழ்க தமிழ் முனைவர் வெ.சிவசங்கரன் ,
ஆராய்சியியல் மாணவர்,
மின்னணுவியல் மற்றும் நுண்கருவியியல் துறை,
பாரதியார் பல்கலைகழகம்,
கோயம்புத்தூர்.
கைபேசி எண்:9943799941,9566444515.
மின்னஞ்சல் முகவரி siva.kala.psg@gmail.com, vaazhgathamilsiva@gmail.com,

வாழ்கதமிழ் பா.வெ.சிவா சொன்னது…

அன்பு தமிழ் நண்பர்களே உங்களுடன் இங்கு நான் இணைவதில் மகிழ்ச்சி..

நண்பர்களே நம் தமிழ்மக்கள் நம் தாய்தமிழ் மொழியை பேசுவதையே, தவறாகவும் கேவலமாகவும் நினைக்கிறார்கள் , இதுவே
நம் பழமை மிகுந்த கலாச்சாரமும் நோயற்ற உணவு பழக்க வழக்கங்களும் காணமல் போனதற்கு காரணம்.. எனவே முதலில் நாம் நம் தமிழ் மொழியை பற்றியும் அதன் பழமை,புகழ்,மற்றும் அதன் முக்கியதுவத்தையும் , பெருமையையும் நம் தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.அதன் பிறகு தன நம் பழந்தமிழர்களின் நோயற்ற உணவு பழக்கவழக்கங்களை புரியவைக்க முடியும்..

கருத்துரையிடுக