திங்கள், 28 டிசம்பர், 2009

அண்டம், [Galaxy] பிண்டமும் [Body] - 2வது பாகம்


இதன் முதல் பாகத்தை பற்றி இங்கே படிக்கலாம். அதன் சுருக்கம் என்னவென்றால்,

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே

இது திருமூலரின் திருமந்திரப்பாடல்.

இதன் அர்த்தம் யாதெனில்,

அண்டமும் பிண்டமும் ஒன்று. அண்டத்தில் தேடுவதை விட பிண்டத்தில் உள்ளதை தேடுவதே சாலச்சிறந்தது. இதன் தொடர்ச்சியே இந்த பாகம்.

அறிவியலின் படி நமது பூமி மற்றும் சூரிய குடும்பம் அக்ரீசின் டிஸ்க்கிலிருந்து [Accretion Disc] உருவானது [http://en.wikipedia.org/wiki/Timeline_of_evolution]. அக்ரீசின் டிஸ்க் என்பது ஒரு வட்ட வடிவ பாதையில் ஒரு மத்திய பொருளை சுற்றி வருகிறது. அந்த மத்திய பொருளின் பெயர் பிளாக் ஹோல் [Black Hole - http://en.wikipedia.org/wiki/Black_hole]. பிளாக் ஹோல் என்பது வான வெளியில் உள்ள ஒரு பகுதி. இதன் ஈர்ப்பு விசை அனைத்தையும் விட பெரியது. ஏன் ஒலி கூட இதிலிருந்து தப்ப முடியாது. இது அனைத்தையும் ஈர்க்கும் ஆனால் ஒன்றும் பிரதிபலிக்காது.

நமது அண்டம் இந்த மாதிரி கேலக்சிக்களாலும் [Galaxy], கருந்துளைகளாலும் [Blackholes, Quasars, Dwarfs, நட்சத்திரங்களாலும் [Stars], இருள் சக்திக்களாலும் [Dark Energy] நிரம்பியதே. இந்த கட்டுரையின் எண்ணம் நமது உலகம் எப்படி உருவானது என்பதுதான்.

அறிவியலின்படி இப்போது அனைவராலும் [அநேகமாக] ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு தேற்றம் பெருவெடிப்பு [Big Bang - http://en.wikipedia.org/wiki/Big_bang] தேற்றம்தான். அதன்படி நமது உலகம் ஒன்றாக இருந்ததுதான். ஒன்றாக இருந்தபோது அதிகரித்த அடர்த்தி மற்றும் அதிதீவிர வெட்பம் காரணமாக பெருவெடிப்பு ஏற்பட்டது என்பதே பெருவெடிப்பு தேற்றமாகும்.

ஏனவே ஒன்றில் இருந்து வெளியே வந்ததுதான் அனைத்துமே.

நாம் இப்போது அண்டம் மற்றும் பிண்டம் பற்றிய ஒப்பீடலை பார்ப்போம்.

1. அண்டம் ஒன்றிலிருந்து உருவானது. நம் பிண்டமும்தான்
2. நமது சூரிய குடும்பம் கருந்துளையால் ஏற்படும் அக்ரீசின் டிஸ்க்கிலிருந்து உருவானது. நம் உடல் தாயின் கர்ப்பப்பையிலிருந்து உருவானது
3. அண்டம் ஒன்றாக இருந்து வெடித்து பிளந்து ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தும் உருவானது. பிண்டமும் ஒன்றாக இருந்து வெடித்து பிளந்து ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தும் உருவானது.
4. அண்டம் ஒன்றாக இருந்து வெடித்து பிளக்கும் போது அதீத வெட்பமும், அடர்த்தியும் காரணங்கள். நம் பிண்டமும் பிறப்பதற்கு முன்னால் பனிக்குடம் வெடித்து உடைகிறது. அப்போது தாயின் உடலில் எண்ணற்ற மாற்றங்கள். அதீத வெட்பம், அதீத நாடித்துடிப்பு மற்றும் பல.

இன்னும் பல ஒற்றுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்போதுள்ள அறிவியல் சூழலில் நம்மால் பிண்டம் உருவாகும் முறையையும் அது வளர்வதையும் அநேகமாக மேலோட்டமாக தெரிந்து கொள்ளலாம். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாமல் நம்மால் அண்டத்தை அளக்க முடியாது. மேலும் நம்மால் இப்போது நமக்கும் நம் தாயின் வயிற்றில் இருந்த போது என்ன நடந்தது என்று நினைவிருக்குமா? நினைவிருந்தால் நம்மால் நம் அண்டத்தின் பிறப்பிடத்தையும் அறிய இயலும் என்பதே எனது எண்ணம்.

திருமூலரும் அவரது பாடலில் இதையே கூறுகிறார் என்று நம்புகிறேன்.
மேலும் படிக்க......

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

வேறு அண்டங்கள் [Universe] உள்ளனவா?நம் அண்டத்தையே இன்னும் நம்மால் அளந்து பார்க்க முடிய வில்லை... அதற்குள் இது என்ன கேள்வி என்கிறீர்களா?

இந்த விவாதங்கள் அறிவியல் உலகிலும் சென்று கொண்டுதானிருக்கிறது. அவரவர் தேற்றங்களை வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் உண்டென்பர் சிலர் இது இல்லை என்பர். [ஆதாரம்: http://www.space.com/scienceastronomy/generalscience/5mysteries_universes_020205-1.html]

தமிழ் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த ஒரு பாடலின் வரி இது...

"ஈரேழு உலகமும் எனகுறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா..."

இது கந்தர் சஷ்டி பாடல்.

ஈரேழு உலகம் என்னவாக இருக்கும்... அதன் பெயர்கள் என்னவென்று தெரியுமா? அவை இதோ...

ஈரேழு என்றால் பதினான்கு. இவை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று மேலுலகம் மற்றொன்று கீழுலகம்.

மேல் உலகங்கள்
---------------------
1) பூலோகம்
2) புவலோகம்
3) சுவலோகம்
4) சனலோகம்
5) தபோலோகம்
6) மகாலோகம்
7) சத்தியலோகம்

கீழ் உலகங்கள்
---------------------
1) அதலலோகம்
2) விதலலோகம்
3) சுதலலோகம்
4) தராதலலோகம்
5) ரசாதலலோகம்
6) மகாதலலோகம்
7) பாதாலலோகம்

அறிவியல் கூற்றுப்படி இன்னும் நம் உலகத்தையே [அண்டத்தையே] நம்மால் இன்னும் சரிவர வரையறுக்க முடியவில்லை. ஆனால் பல உலகங்கள் பற்றியும் ஆய்வுகள் நடந்த வண்ணம்தான் உள்ளன.

இது மேலை நாட்டவர்க்கு சாத்தியம் இல்லை என்றே எனக்கு படுகிறது. ஆனால் நம் தமிழ் குழந்தைகளுக்கு இந்த சாத்தியம் உள்ளது. எப்படி என்று கேட்கிறீர்களா? அவர்களுக்குத்தான் நம் சித்தர் பாடல்களும், திருமந்திரமும் இன்னும் பல அறிய நூல்களும் அடிப்படை காலமாக உள்ளனவே. நாம் பண்ண வேண்டியது என்னவென்றால் நம் குழந்தைகளுக்கு நம் தமிழின் தின்னத்தை பற்றிய தாகத்தை ஏற்படுத்தினால் மட்டும் போதுமானது.
மேலும் படிக்க......

புதன், 16 டிசம்பர், 2009

மூன்று வளையமும், காலம் [Time], சக்தி [Energy] மற்றும் வெளியும் [Space]


பத்திரகிரியார் எனும் சித்தர் தனது மெய்ஞானப் புலம்பலில் 69வது பாடலாக கீழ்க்கண்டதை பாடியுள்ளார்.

"மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்?"

இதற்கு ஆன்மீக ரீதியான விளக்கங்கள் எனக்கு கிடைக்கவில்லை. எனக்கெட்டிய அறிவின் படி, இதன் விளக்கம்:

1) மூன்று வளையம் என்பது சக்தி [Energy] எனப்படும் மூலாதாரம், வெளி [Space] அல்லது பள்ளியறை எனப்படும் சுழுமுனை மற்றும் சக்தியை சுழுமுனைக்கு கொண்டு சேர்க்கும் பாதை அதாவது காலம் [Time]. காலம் இல்லையேல் எதுவும் நகராதே. இந்த மூன்று வளையங்களும் இட்டதில் முளைத்து எழுந்த முக்கோணத்தில் தோன்றும் உருத்திரன் [கடவுள் சிவன் அல்லது அவரது ஒரு அம்சம்] இந்த முக்கோணமே முக்காலமும் அறிய உதவும் திறவுகோல். அதாவது சுழுமுனை.

இதுவே இப்பாடலின் ஆன்மீக விளக்கமாக இருக்கலாம். எதுவும் தவறு இருந்தால் கூறவும்.

இப்போது நாம் இதை அறிவியல் ரீதியாக பார்ப்போம்.

1) நமது இந்த உலகம், பால் வெளி, அண்டம் அனைத்துமே மூன்று அடிப்படை உள்பொருட்களால் ஆனது. அவை காலம் [Time], சக்தி [Energy] மற்றும் வெளியும் [Space] (ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Universe)

2) நமது அண்டத்தில் இருக்கும் அனைத்துமே உருண்டை தேற்றத்தின் [Circular Theory : http://www.circular-theory.com/] படி உருண்டை வடிவானவைதான். எனினும் அறிவியல் ரீதியாக நமது அண்டம் [Universe] மூன்று வடிவங்களில் இருக்கலாம் என்று கூறுகிறார்கள் [ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Shape_of_the_Universe]. ஆனால் உருண்டை தேற்றத்தின் படி இவை மூன்றும் உருண்டையாக இருக்கிறது என்று வைத்து கொள்வோம்.

3) இவை மூன்றும் இல்லையெனில் இந்த உலகம், பெருவெளி, அண்டம் எவையும் இயங்காது என்பது அறிவியல் உண்மை. இவை மூன்றும் இணைந்ததுதான் நமது உலகம் மற்றும் அனைத்தும்


4) கணிதத்தில் போரோமியன் வளையங்கள் [ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Borromean_rings] என்று ஒன்று உள்ளது. இது என்னவெனில் மூன்று வளையங்கள் ஒன்றையொன்று உள்வழியாக இணைத்து இருப்பது. இதில் ஒரு வளையத்தை நாம் பிரித்தேடுத்தாலும் மற்ற இரு வளையங்கள் சேர்ந்து இருக்காது
5) இந்த மூன்று வளையங்களும் முட்டிக்கொள்ளும் இடத்தில் ஒரு முக்கோணம் உருவாகும் [படத்தில் காட்டியது போல]. அந்த முக்கோணம்தான் நமது அண்டம், வெளி மற்றும் காலம் சங்கமிக்கும் ஒரு பகுதி. அதாவது மூன்றும் இணையும் போதுதான் வெளிகள் உருவாகின்றன, உலகங்கள் உருவாகின்றன

இது எவ்வாறு நமது சித்தர்களுக்கு தெரிந்திருக்கும் அல்லது உணர்ந்திருப்பார்கள். நாம் நமது தமிழை மேலும் ஆய்வு செய்ய வேண்டும்...
மேலும் படிக்க......

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

அண்டம், [Galaxy] பிண்டமும் [Body]!


அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே

இது திருமூலரின் திருமந்திரப்பாடல்.

இதன் அர்த்தம் யாதெனில்,

அண்டம் முழுவதும் பரவியிருப்பவளை அளப்பது அரிது,
பிண்டத்தினுள்ளே வியாபித்திருப்பவள்,
குண்டம் வைத்து மந்திரம், குணம் இவை யாவற்றிலும் தேடிப்பார்த்தும்
நம் பிண்டத்திலுள்ளவலை அறியாதவர்கள் வேறெங்கிலும் அவளை அறியார்கள்.

அதாவது இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைவோர்கள் கடவுளை காணமாட்டார்கள் என்பதே இதன் நேரிடையான அர்த்தம்.

இதை நாம் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வோம். விடை யாதெனில்,

1) அண்டமும் பிண்டமும் ஒன்று.
2) அண்டத்தை அறிவதற்காக கோடானு கோடி டாலர்கள், ஐரோக்கள், ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. ஆனால் நாம் தேடுவதை விடுத்து வேறு ஏதாவது தகவல்கள் கிடைக்கின்றன. அதை வைத்து நாம் ஆனந்த கூத்தாடுகிறோம்.
3) பிண்டம் அண்டத்தின் சிறு வடிவே. நாம் அண்டத்துக்கும் பிண்டத்துக்கும் உள்ள தொடர்பை முதலில் ஆய்வு செய்யவேண்டும். அது தெரிந்து விட்டால் நம்மால் அண்டத்தின் ரகசியத்தை தெரிந்து கொள்ளளலாம்.

இதற்கு நம் அடுத்த தமிழ் தலைமுறைதான் செய்ய முடியும். அவர்களுக்கு நாம் அறிவியல் தமிழின் அவசியத்தை உணர்த்தினாலே போதுமானது.

இது எனது கருத்து மட்டுமே. மாற்று கருத்து இருந்தால் பதிவு செய்யுங்கள்.
மேலும் படிக்க......

செவ்வாய், 1 டிசம்பர், 2009

விதியை [Fate] மதியால் [Knowledge] வெல்லலாமா?


அண்டம், பெருவெளி, நமது சூரியக்குடும்பம் [புவி உள்பட] அனைத்துமே ஒரு காந்த விசையால் ஈர்க்கப்பட்டு அப்படியே அந்தரத்தில் அதனதன் வேலைகளை செவ்வனே செய்து வருகின்றன. காந்த மண்டலத்தில் இருக்கும் அனைத்துமே காந்தமாக மாறிவிடுகின்றன. இதுதான் விதி. எனவே நாம் உள்பட அனைவருமே காந்தம்தான்.

விதியால்தான் வினை விளைகிறது. எப்படி என்று கேட்கிறீர்களா?

புவி ஈர்ப்பு விசை என்பது விதி. அந்த ஈர்ப்பு விசையின் காரணமாகத்தான் நாம் அனைவரும் புவியில் இயங்கிக்கொண்டிருக்கிறோம். இல்லையேல் அனைவரும் புவியை விட்டு வெளியே வீசப்பட்டிருப்போம். இதனால்தான் நாம் அனைவரும் நடக்கிறோம், பேசுகிறோம், ஓடுகிறோம் மற்றும் பல வினைகள் புரிகிறோம். இதனால் நிறைய விளைவுகள் இருக்கின்றன. ஆனால் அந்த விளைவுகள் நம் கட்டுபாடின்றி சில சமயம் செல்கின்றன. அப்போதுதான் நாம் கூறுகிறோம், விதியை யாரால் வெல்ல முடியும் என்று? ஆனால் நம் முன்னோர்கள் கூறுகிறார்கள், "விதியை மதியால் வெல்லலாம் என்று". எவ்வாறு?

ஒரு சிறிய உதாரணத்தை வைத்து பார்ப்போமே. ஒரு கிண்ணம் மேசையின் மேல் வைக்கப்பட்டுள்ளது. அதை நாம் தட்டி விடுகிறோம். அதாவது தட்டி விடுதல் என்ற வினையை புரிகிறோம். விளைவு கிண்ணம் தரையில் விழும். அதுதானே விதி. அதாவது புவி ஈர்ப்பு விதி. ஆனால் நாம் மதியால் இதை தடுக்க முடியும். எப்படி? கிண்ணம் எவ்வளவு பெரியது? அது எவ்வளவு உயரத்தில் இருந்து விழுகிறது மற்றும் எவ்வளவு நேரத்தில் அது தரையை தொடும் என்று நாம் கணக்கிட வேண்டும். நாம் அந்த வேகத்தை விட வேகமாக நமது கையை கீழே கொண்டு சென்று அந்த கிண்ணத்தை தாங்கினால் நாம் விதியை வென்று அந்த கிண்ணம் தரையை தொடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

கிண்ணம் கீழே விழுகும்போது இவ்வளவு நம்மால் கணக்கிட முடியுமா என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இது முடியவே முடியாது என்று யாரும் கூற இயலாது. ஏனெனில் இது கண்டிப்பாக முடியும். அது அவரவர் திறமையை பொறுத்தது. இதே போல் நம் வாழ்வில் நடக்கும் விளைவுகளையும் [பாதகமாக இருக்கும் பட்சத்தில்] நாம் சீக்கிரம் கணக்கிட்டோமானால் நமக்கு சாதகமாக திருப்பலாம்.
மேலும் படிக்க......

ஞாயிறு, 29 நவம்பர், 2009

விதியும் [Fate], வினையும் [Action], விளைவும் [Consequence]!!!


விதி என்றால் என்ன? விதிக்கப்பட்டது...
வினை என்றால் என்ன? செயலாக்கப்பட்டது...
விளைவு என்றால் என்ன? விளைந்தது...

விதிக்கப்பட்டதால் செயலாக்கப்பட்டு விளைந்ததா?

இப்படி ஏகப்பட்ட கேள்விகள், குழப்பங்கள் என்று ஒரே மூளைப்புயல் நேரம் [Brain-Storming Session?? :)] எனக்குள்.

விதி யாரால் உருவாக்கப்பட்டது? கடவுள் அல்லது நம்மை இயக்கும் யாரோ ஒருவர். நாம் அறிவியல் முறைப்படி இதை கேள்விக்கு உள்ளாக்குவோம். அப்போதுதானே விடை கிடைக்கும்.

நமது சூரிய குடும்பம் மட்டுமல்லாது அண்டம், பெருவெளி எல்லாமே ஒரு காந்த மண்டலம். ஒன்றன்பால் ஒன்று ஈர்க்கப்பட்டு அப்படியே அந்தரத்தில் உள்ளன. ஒரு காந்த மண்டலத்தில் உள்ளே இருக்கும் அனைத்தும் காந்தமாக மாறிவிடுகின்றன என்பதே அறிவியல் உண்மை. எனவே உள்ளே இருக்கும் சூரியன், நமது பூமி அனைத்துமே காந்தம்தான்... நாமும்தான். அனைத்து காந்தங்களும் ஒன்றை ஒன்று ஈர்த்து அந்தரத்தில் இருக்கின்றன மற்றும் அனைத்து செயல்பாடுகளும் நடக்கின்றன.

இப்போது நாமும் காந்தம்தானே. அப்போது நமக்கும் ஈர்ப்பு சக்தி இருக்கும்தானே. ஒருவரை ஒருவர் ஈர்த்தல். மயிர்கூச்செறிதல், புல்லரித்தல் போன்ற பல வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. இதற்கு காரணம் மின் காந்த அலைகள். [ஆதாரம்: http://homeschooling.about.com/library/blsciact11.htm]

இப்போது நாம் சிந்திப்போம்... நாம் காந்த மண்டலத்தில் இருப்பது விதிக்கப்பட்டது. நாம் செய்யும் செயல்பாடுகள் வினைகள். அதனால் விளைவது விளைவுகள். மின் காந்த அலைகளினால்தான் நமது இயக்கம் சீராக இருக்கிறது என்றால்... விதியினால்தான் வினைகள் உருவாகின்றன என்று நாம் பொருள் கொள்ளலாமா?... எனவே நமது செயல்பாடுகள் ஒன்றை ஒன்று தொடர்புடையதாகிறது. நியூட்டனின் 3ஆம் விதி என்னவென்றால் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. ஆகவே விதியினால் வினை விளைகிறது. சரிதானே.

விதியை மதியால் வெல்லலாமா? நாளையும் எழுதிகிறேன்... சிறிது யோசிக்க வேண்டாமா அன்பர்களே...
மேலும் படிக்க......

வெள்ளி, 27 நவம்பர், 2009

பஞ்ச பூதங்களும் [Five Elements] நமது உடம்பும் [Human Body]...


நாம் நம் உடம்பை பற்றி என்ன அறிந்திருக்கிறோம்? அவை பஞ்ச பூதங்களுக்குள் அடக்கம் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறோம். என்றைக்காவது நம் உடம்பில் அவை என்ன என்ன என்று யோசித்திருக்கிறோமா? இதோ அவைகளின் பட்டியல்...

மண்ணின் பகுதி

நரம்பு, இறைச்சி, என்பு, மயிர், தோல் என்னும் ஐந்தும் மண்ணின் பகுதி.

நீரின் பகுதி

நீர், முளை, சுக்கிலம், நிணம், உதிரமெனும் ஐந்தும் நீரின் பகுதி.

தீயின் பகுதி

பசி, சோம்பல், மைதுனம், காட்சி, நீர்வேட்கை என்னும் ஐந்தும் தீயின் பகுதி

காற்றின் பகுதி

போக்கு, வரவு, நோய், கும்பித்தல், மெய்ப்பரிசம் என்னும் ஐந்தும் காற்றின் பகுதி.

ஆகாயத்தின் பகுதி

வெகுளி, மதம், மானம், ஆங்காரம், உலோபம் என்னும் ஐந்தும் ஆகாயத்தின் பகுதி.

வாயு

உடம்பில் ஓடுகின்ற உதிரத்தைப் போல வாயுக்களும் உடம்பில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவ்வாயுக்கள் பத்து என்பர். அவை; பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்பனவாம்.

நாடி

வாயுக்களைப் போல நாடிகள் 72000 ஆகும். அவற்றுள் முதன்மையான நாடிகள் பத்து என்று குறிப்பிடுவர். அவை இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, சங்கினி, பூடா, குகு, கன்னி, அலம்புடை என்பன போன்று, பஞ்சபூதங்களின் பரிமாணங்கள் குறிப்பிடப்படுகின்றன.

முடிவுரை

இதில் வாயு மற்றும் நாடி ஆகியவை இன்னும் அறிவியலால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மற்ற அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டதே. மற்றவைகளையும் கூடிய சீக்கிரம் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம் தமிழ் உள்ளங்கள் நினைத்து ஏமாந்து போக வேண்டாம். அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்... எப்பொழுது? ஏதேனும் ஒரு தமிழன் அல்லது நமது அடுத்த தலைமுறை தமிழனோ தமிழச்சியோ இதை ஒரு அறிவியல் பாடமாக எடுத்து விளக்கங்களோடு நிருபித்தாலொழிய இதை நம்மால் அடுத்தவர்களை ஒப்புக்கொள்ளவைக்க முடியாது.
மேலும் படிக்க......

சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை அல்லது எஸ்.எஸ்.பிள்ளை [S.S.Pillai]


நாம் கொண்டாட வேண்டிய தமிழ் கணிதவியலாலர்களில் ஒருவர் சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை அல்லது எஸ்.எஸ்.பிள்ளை [S.S.Pillai].

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இந்தியக் கணிதவியலாளரில் ஒருவர். எண் கோட்பாட்டில் பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த வாரிங் பிரச்சினையில் அவருடைய சாதனை மிகப்பெரிதாகப் பேசப்படுகிற ஒன்று. இந்தியா அவருடைய அகால மரணத்தினால் இன்னும் பல சாதனைகள் புரிந்து நாட்டுக்குப் புகழ் சேர்க்கக்கூடிய ஒருவரை இழந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில், குற்றாலத்திற்கருகிலுள்ள வல்லம் என்ற சிற்றூரில் பிறந்தார். அவருக்கு ஒரு வயது ஆகுமுன்பே தாயார் கோமதி அம்மாள் காலமாகிவிட்டார். தந்தை சுப்பையா பிள்ளை தான் வயதான உறவினப் பெண்மணி ஒருவரின் உதவியுடன் குழந்தையை வளர்த்தார். செங்கோட்டை நடுத்தரப்பள்ளியில் பையன் படிக்கும்போதே சாஸ்திரியார் என்ற ஒர் ஆசிரியர் இவருடைய புத்தி வல்லமையையும் உழைப்பையும் பார்த்துப் பூரித்துப் போனார். இவருடைய பள்ளிப்படிப்பு முடிவதற்குள்ளேயே சுப்பையாபிள்ளை காலமானபோது, அவர்தான் சிவசங்கரநாராயணனின் கல்லூரிப் படிப்பிற்கு உதவிசெய்தார். இடைநிலைக் கல்வி பயின்றது நாகர்கோயிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில். திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் கல்விச் சலுகை பெற்று நன்றாகவே படித்து B.A. பட்டம் பெற்றார்.

மேற்படிப்பிற்காக சென்னைக்குச் சென்றார். சென்னை மாகாணக் கல்லூரியில் 1927 இல் ஆனந்தராவின்கீழ் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்து முதல்தர ஆராய்ச்சி மாணவன் என்று பெயர் எடுத்தார். ஆனந்தராவுடன் கூட பேராசிரியர் வைத்தியநாதசுவாமியும் இவருக்கு வழிகாட்டினார். சென்னைப் பல்கலைக்கழகம் இவருடைய ஆராய்ச்சிகளைப் பாராட்டி இவருக்கு D.Sc. பட்டமே வழங்கியது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் D.Sc. இவர்தான்.

சாதனைகள்:

76 ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். அவை பெரும்பாலும் எண் கோட்பாட்டைப்பற்றியும் டயோபாண்டஸ் தோராயத்தைப் பற்றியும் இருந்தன.

1) வாரிங் பிரச்சினையில் கண்டுபிடிப்பு

எண் கோட்பாட்டில் வாரிங் பிரச்சினையைப் பற்றிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பைச் செய்து சரித்திரம் படைத்தார். 1909இல் டேவிட் ஹில்பர்ட் வாரிங் பிரச்சினையைப் பற்றிய ஓர் அடிப்படைத் தேற்றத்தை நிறுவினார்.

ஹில்பர்ட்-வாரிங் தேற்றம்: ஒவ்வொரு நேர்ம முழு எண் k க்கும் g(k) என்ற ஒரு மீச்சிறு நேர்ம முழு எண் கீழுள்ள பண்புடன் இருக்கும்:

எந்த நேர்ம முழு எண்ணையும் g(k) எண்ணிக்கை கொண்ட k - அடுக்குகளின் கூட்டுத் தொகையாகக் காட்டலாம். அதாவது, எத்தனை குறைந்த எண்ணிக்கை கொண்ட k-அடுக்குகளின் கூட்டுத்தொகையாக எல்லா முழுஎண்களையும் சொல்லமுடியுமோ அந்த எண்ணிக்கை g(k)யாகும்.

எடுத்துக்காட்டாக, g(2) = 4. அதாவது, எந்த எண்ணையும் நான்கு எண்ணிக்கைக்கு அதிகமில்லாத எண்களின் வர்க்கங்களின் கூட்டுத்தொகையாகக் காட்டலாம். குறிப்பாக

27 = 16 + 9 + 1 + 1
32 = 16 + 16
77 = 36 + 36 + 4 + 1
200 = 100 + 64 + 36

1770 இலேயே (லாக்ரான்சி) g(2) = 4 என்பது தெரியும். 1910 இலிருந்து g(3) = 9 என்பதும் தெரியும்.
பிள்ளையின் கண்டுபிடிப்பு: (1936). 7 அல்லது 7 க்கு மேலுள்ள எல்லா k க்கும், g(k) = 2k + l − 2; இங்கு, l என்பது (3 / 2)kஐ விட பெரியதல்லாத மீப்பெரு முழு எண். k = 6 என்ற பட்சத்திலும் 1940 இல் இன்னும் கடினமான ஒரு முறையில் g(6) = 73 என்றும் கணித்தார்.

பிள்ளை பகா எண்கள்:

அவர் கண்டுபிடித்த ஒருவித பகா எண்களுக்கு பிள்ளை பகா எண்கள் என்ற பெயர் நிலைத்துவிட்டது. பகாஎண் p கீழ்வரும் பண்பை உடையதாக இருந்தால் அது பிள்ளை பகா எண் எனப்படும்:

ஒரு நேர்ம முழு எண் இருக்கவேண்டும். அது சரி செய்ய வேண்டிய சமன்பாடுகள்:

(*) n! = − 1modp


இதன் பொருள்: n!, pஇன் ஏதோ ஒரு மடங்கை விட ஒன்று குறைவு. மற்றும், p − 1, nஇன் எந்த மடங்காவும் இருக்காது.

எடுத்துக்காட்டாக, 79 ஒரு பிள்ளை பகா எண். ஏனென்றால்,
23! + 1, 79 ஆல் சரியாக வகுபடுகிறது. மற்றும், 78, 23இன் எந்த மடங்கும் இல்லை. ஆக, 79 க்குகந்ததாக 23 என்ற் n உள்ளது.

முதல் 39 பிள்ளை பகா எண்கள்:

23,29,59,61,67,71,79,83,109,137,139,149,193,227,233,239,251,257,269,271,277,293,307,311,317,359,379,383,389,397,401,419,431,449,461,463,467,479,499

இத்தொடர் முடிவில்லாதது என்று எர்டாஷ், சுப்பராவ், ஹார்டி முதலியவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க......

செவ்வாய், 24 நவம்பர், 2009

கே. ஆனந்த ராவ் [K.Ananda Rau] - ஒருங்காத சரங்கள் [Divergent Series]இன்று நாம் யாரை கொண்டாடுகிறோம்? யார் நம்மால் நாயகர்களாக கொண்டாடப்படுகின்றனர்? இதற்கான விடை நாமனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் கொண்டாடவேண்டியது நம் தமிழ் அறிவியலாளர்களை. ஆகையால் நானும் அவ்வப்பொழுது எனக்கு கிடைக்கும் விடயங்களை இந்த இடுகையில் எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

கே. ஆனந்த ராவ் (1893 - 1966) சீனிவாச இராமானுசனுடைய காலத்திய கணித வல்லுனர். இராமானுசன் இளவயதிலேயே இறந்தபிறகு, இருபதாவது நூற்றாண்டின் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது பத்தாண்டுகளில், அக்காலத்திய சென்னையின் கணிதவானில் ஒரு முன்மாதிரியான விண்மீனாகத் திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் பேராசிரியர் வைத்தியநாதசுவாமியுடன், பிற்காலத்தில் வரப்போகும் இந்தியாவின் சிறந்த சில கணிதவல்லுனர்களை உருவாக்கினவர்களாவார்.

பிறப்பும், கல்வியும், சாதனைகளும்

சென்னையில் 1893 இல் பிறந்தார். பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்து விளங்கினார். 1914 இல் கேம்பிரிட்ஜ் சென்று ஜீ. ஹெச். ஹார்டியின் மாணவராகச் சேர்ந்தார். உயர்ந்த பரிசான ஸ்மித் பரிசைத் தட்டிக்கொண்டார். அங்கு முனைவர் பட்டம் பெற்றபிறகு 1919 இல் சென்னை திரும்பினார்.

1) ஹார்டியின் 'ஒருங்காத சரங்கள்' (Divergent series) என்ற நூலில், ஆனந்தராவ் தேற்றம் [Ananda Rau Theorem] என்று பெயர் சூட்டப்பட்ட தேற்றமுள்ளது
2) பகுவியல் பிரிவில் இந்தியாவிலேயே சிறந்த சிலரில் ஒருவராக மதிக்கப்பட்டவர். உலகப்புகழ் பெற்ற எம்.ஹெச்.ஸ்டோனால் இவருடைய ஆய்வுகள் மிகவும் பாராட்டப்பட்டன

நமது குழந்தைகளுக்கு
இதை படிக்கும் குழந்தைகள் அல்லது படிப்பவர்கள் தங்களது குழந்தைகளின் மனதில் அவர்களின் ஆதர்ஷ புருஷர்களாக வரிக்க கற்றுக்கொடுங்கள். அப்போதுதான் நமக்கு இவர்களை போல முத்துக்கள் கிடைக்கும்.
மேலும் படிக்க......

சனி, 21 நவம்பர், 2009

கடவுள் [God] மற்றும் கருந்துளை [Black Hole]!!!


இன்று அறிவியல் கூற்றுப்படியும் சித்தாந்த கூற்றுப்படியும் கடவுள் என்பதற்கு தெளிவான விளக்கங்கள் இல்லை அல்லது தெரியவில்லை அல்லது புரியவில்லை.

இதே போல் கருந்துளைக்கும் [Black Hole] விளக்கங்கள் இல்லை. எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதானிருக்கிறது. இது வரையில் முன்னேற்றம் இல்லை.

சிலர் கூறுகிறார்கள். கருந்துளைக்குள்ளே சென்று பார்த்தோமென்றால் வேறொரு உலகம் இருக்கலாம். மேலும் அதன் உள்ளே செல்லும் தகவல்கள் அழிவதில்லை என்று புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்க் [Stephen Hawking] கூறுகிறார். [ஆ. http://physicsworld.com/cws/article/news/34239]. ஆனால் இன்னும் அது நிரூபிக்கப்படவில்லை.

எனக்கு ஒரு சிந்தனை. எப்படி அதனுள்ளே சென்று விட்டு வெளியே வருவது. அப்படி ஒருக்கால் உள்ளே கடவுள் இருந்தாரென்றால் அவரிடம் என்ன கேட்பது என்று?

அப்படியென்றால் எனக்கு ஒரு வாகனம் வேண்டும். அது கருந்துளையின் ஈர்ப்பு விசையை காட்டிலும் வேகமாக செல்லக்கூடியதாக இருக்க வேண்டும். அதை எப்படி கண்டு பிடிப்பது? கருந்துளையின் புவி ஈர்ப்பு விசை என்னவென்று தெரிந்தால்தானே என்னால் அதற்கேற்றாற்போல் வாகனம் தயாரிக்க முடியும்.

பழைய தமிழ் புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு விடயம் பளிச்சென்று என் மனதில் தங்கியது. அது என்னவென்றால்,

சூரிய சித்தாந்தப்படி கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் எனப்படும் நான்கு யுகங்களைக்கொண்டது ஒரு சதுர்யுகம்.

1 சதுர்யுகம் - 43,20,000 ஆண்டுகள்
71 சதுர்யுகங்கள் - 1 மன்வந்தரம்
14 மன்வந்தரங்கள் - 1 கல்பம்
1 கல்பம் - 1/2 நாள் [நமக்கல்ல அன்பர்களே, படைப்பு கடவுள் பிரம்மாவுக்கு]

இப்போது நாம் இந்த இரண்டு விடயங்களை வைத்து சிறிது யோசிப்போமே. கருந்துளைக்கு பின்னால் கடவுள் இருக்கிறாரென்று வைத்து கொள்வோம். இப்போது கடவுளை அடைவதற்கு வாகனம் தயாரிக்க வேண்டும் மற்றும் அதன் வேகம் எப்படி இருக்க வேண்டும்.

உலகத்தில் தற்போது சூப்பர்சோனிக் [Supersonic] வாகனங்கள்தான் வேகமானது. இது ஒலியின் [Sound] வேகத்திற்கு ஈடாக செல்லும். அதாவது வினாடிக்கு 340.29 மீட்டர். இதற்கும் மேலே ஒளியின் [Light] வேகம் உள்ளது. அது என்னவென்றால் வினாடிக்கு 29,97,92,458 மீட்டர் அல்லது 2,99,792.458 கிலோமீட்டர் .

நம் அனைவருக்கும் தெரியும் ஒளியின் வேகம் கூட கருந்துளையின் உள்ளே செல்லும் ஆனால் வெளியே வராது. ஆகவே நாம் அதையும் மீறிச்செல்லும் ஒரு வாகனத்தை தயாரித்தால் ஒழிய நம்மால் கருந்துளைக்கு உள்ளே சென்று வெளியே வர முடியாது என்பதே திண்ணம்.

இப்போது நமது வாகனத்தின் வேகம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும். இப்போது பிரம்மாவுக்கு 1 கல்பம் 1/2 நாள் [அதாவது அவர் இந்த வேகத்தில் முன் சென்று கொண்டிருக்கிறார் என்று எடுத்துகொள்வோம்.] என்றால் நாம் அதை விட வேகமாக செல்லும் ஒரு வாகனத்தை கண்டு பிடிக்கவேண்டும். இதை கணித ரீதியாக பார்க்கலாமே.

1) ஒரு ஒளி வருடம் என்பது 94,60,73,04,72,580.8 கிலோமீட்டர்
2) பிரம்மாவின் 1/2 நாள் என்பது 1 கல்பம். ஆண்டுகளில் இதை மாற்றினோமென்றால் மொத்தம் 4,29,40,80,000 ஆண்டுகள். இதை ஒரு வினாடிக்கு மாற்றினோமென்றால் 18,55,04,25,60,00,000 வினாடிகள். அதாவது ஒரு வினாடிக்கு பிரம்மாவுக்கு இவ்வளவு வேகத்தில் வயதாகிறது.
3) ஒரு ஒளி வருடத்தை ஒளியின் வேகத்தில் சென்றால் 3,15,57,600 வினாடிகளில் [36,458 நாள்கள் அல்லது 99.81861366078701 வருடங்கள்] சென்றடையலாம்
4) இப்போது நாம் பிரம்மாவின் வேகத்தை [அதாவது 18,55,04,25,60,00,000 வினாடிகள்] ஒளி வருடமாக மாற்றிக்கொள்ளலாம். அப்படி மாற்றினால் 19.60781... ஒளி வருடங்கள் வருகிறது.

சுருங்கச்சொல்வதானால் இந்த தொலைவை நாம் அரை நாளில் கடந்தோமேன்றால் பிரம்மாவை அவரது வேகத்தில் கூடவே சென்று பார்த்து வரலாம். மேலும் இந்த கட்டுரையின் மூலமாக நான் சொல்ல வருவது என்னவென்றால் நாம் பிரம்மாவை பார்க்கிறோமோ இல்லையோ கருந்துளையின் உள்ளே என்ன இருக்கிறது என்றாவது பார்த்து விட்டு வரலாம் என்பதே.

இதை கேட்டு விட்டு என் நண்பன் சிரித்தான். என்னவென்று கேட்டேன்? அவன் இந்த வண்டி தயாரிப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்றான்? நான் தெரியவில்லை என்றேன்? அவன் மேலும் சிரித்து விட்டு இவ்வளவு கஷ்டப்பட்டு வண்டி தயாரித்து அதில் ஏறி நீ பிரம்மாவை பார்ப்பதற்கு நம்ம ஊர் பஸ் ஒன்றின் அடியில் போய் விழு, கடவுளிடம் உடனே போய் சேருவாய் என்று கூறி கட கடவென்று சிரித்தான்.

என்ன சொல்வது? நம்ம ஊரில் அறிவுக்கு மதிப்பில்லையே? இருந்தாலும் அவனின் நேரத்திற்கேற்றாற்போல் நகைப்பை ஏற்படுத்தும் பேச்சை ரசித்தேன்.

எனது இந்த கணக்குகளில் ஏதேனும் தப்பிருக்கலாம். ஆனால் எனது சிந்தனையில் பிழையிருப்பதாக நான் நினைக்கவில்லை. அனைவரது கருத்துக்களையும் வரவேற்கிறேன்.
மேலும் படிக்க......

புதன், 18 நவம்பர், 2009

சோதிடக்கலையும் [Jothidam] வானவியலும் [Astronomy] ஒன்றா? II


தமிழும் சோதிடக்கலையும் பிரிக்க இயலாதது. ஏனெனில் இக்கலையை நமக்கு உருவாக்கியவர் குறுமுனி அகத்தியர்தாம். இவரேயாம் தமிழையும் உருவாக்கியதாக பதிவாகியுள்ளது. இச்சோதிடக்கலையைத்தான் நம்மவர்கள் வானவியலோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால் அதை நிரூபிக்க நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

நமது அடுத்த தலைமுறைதான் இந்த குறையை தீர்த்து வைக்க வேண்டும். எனது இந்த மனக்குறையை ஆதாரங்களோடு விளக்குகிறேன். சோதிடம் தோன்றிய காலம் எது என்று இன்று வரை யாராலும் அறுதியிட்டு கூற இயலவில்லை. ஆனால் வானவியலில் சந்திரன் புவியை சுற்றுவதற்கு எவ்வளவு நாள்கள் எடுத்து கொள்கிறது என்று எப்போது கண்டு பிடித்தார்கள் என்று கூற இயலும்.

இப்போது நாம் இந்த தலைப்பை அலசுவோம்.

வானமண்டலத்தில் இருக்கும் விண்மீண்களை (நட்சத்திரங்களை) 12 தொகுப்புகளாக பிரித்திருக்கிறார்கள். வானமண்டலம் மொத்தம் 360 பாகை என்றால் ஒவ்வொரு தொகுப்பும் 30 பாகை. இப்படி பட்ட ஒவ்வொரு 30 பாகையையும் ஒரு வீடு என்று ஜோதிடத்தில் அழைக்கிறார்கள்

பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரு கிரகத்தின் பிண்ணனியில் எந்த நட்சத்திர கூட்டம் தெரிகிறதோ அதுவே அந்த கிரகம் இருக்கும் வீடு என்று அழைக்கப்படுகிறது.

சந்திரன்:
சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் சுமார் ஒரு மாதம்.

இன்று பூமியில் இருந்த பார்த்தால் சந்திரனின் பின்னால் ஒரு நட்சத்திர கூட்டம் தெரியும். மூன்று நாட்கள் கழித்து பார்த்தால் அடுத்த நட்சத்திர கூட்டம், அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்தால் அதற்கு அடுத்த நட்சத்திர கூட்டம். சந்திரனுக்கு பின்னால் எந்த நட்சத்திர கூட்டம் தெரிகிறதோ சந்திரன் அந்த வீட்டில் இருப்பதாக கூறுவார்கள்.

இப்போது அறிவியலை பார்க்கலாம். சந்திரன் புவியை சுற்றுவதற்கு 27.3 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. எனவே அது ஒரு நாளைக்கு 13.2 பாகை திரும்புகிறது. இது எவ்வாறெனில் ஒரு முழு வட்டத்தின் அளவு 360 பாகை. சந்திரன் ஒரு வட்டப்பாதையில் நம் புவியை சுற்றி வருகிறது. எனவே 360/27.3=13.2 பாகையாம்.

ஆகவே சந்திரன் புவியை சுற்றி வரும் வட்டத்தின் அளவு 360 பாகை மற்றும் அது ஒரு மாதம் என்று சோதிடத்திலும் 27.3 நாள்கள் என்று அறிவியலிலும் கூறுகிறார்கள். இது ஒரு சிறிய அளவு வித்தியாசமே.

ஒரு நுண்நோக்கியும் இல்லாமல் நம்மவர்கள் இந்த அளவு வானவியலை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கையில் வியப்பே மேலிடுகிறது. நம் குழந்தைகளாவது வாய் பிளந்து பார்த்துக்கொண்டிராமல் அதை ஆராய்ச்சி செய்து ஏதேனும் கண்டு பிடிக்கும் நிலையில் இருக்க வேண்டுமென என் உளம் நினைக்கிறது.
மேலும் படிக்க......

செவ்வாய், 17 நவம்பர், 2009

உங்களுக்கு ஆண் குழந்தை [Male Child] வேண்டுமா அல்லது பெண் குழந்தை [Female Child] வேண்டுமா? திருமூலரின் திருமந்திரம் தெரிந்து கொள்ளுங்கள்!


குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரெண்டாம் அபான னெதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே

இது திருமூலரின் ஒரு அற்புதமான பாடல்.

இந்தப் பாடலிலே ஒரு தம்பதியினர் தமக்கு வேண்டியது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை கணவனே தீர்மானிக்கக் கூடிய ஒரு வழியைச் சொல்லியிருக்கிறார். நவீன மருத்துவத்தின் படி குழந்தையின் பாலை நிர்ணயிப்பது ஆண்கள். இது ஒரு விஞ்ஞானத் தரவு. இதன் படி ஒரு கருவின் பாலை நிர்ணயிக்கும் X அல்லது Y குரோமோஸோம்கள் ஆணிடத்தில் இருந்துதான் உருவாகிறது. குரோமோஸோம்கள் தாமாகவே நிர்ணயிக்கின்றனவே ஒழிய ஆணின் தன்னிச்சையான முயற்சியால் அல்ல என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஆனால் திருமூலரின் கூற்றுப்படி கலவியின்போது ஆணினுடைய மூச்சு வலது பக்கமாக வெளிப்படுமெனில் குழந்தை ஆணாகப்
பிறக்குமென்றும், இடப்பக்கமாக இருக்குமெனில் பெண்ணாக இருக்குமென்றும், இரண்டு மூக்கிலும் வெளிப்பட்டால் பாலியல்
குறைபாடுள்ள குழந்தை பிறக்குமென்றும் குறிப்பிடுகிறார்.

இதில் நாம் இரண்டு விடயங்களை பார்க்க வேண்டும். ஒன்று குழந்தை உருவாவதற்கு தேவையான விந்து ஆணிடமிருந்துதான் பெண்ணுக்கு கலவியில் மாற்றப்படுகிறது. இரண்டாவது, ஒரு கருவின் பாலை நிர்ணயிக்கும் X அல்லது Y குரோமோஸோம்கள் ஆணிடத்தில் இருந்துதான் உருவாகிறது என்ற அறிவியல் உண்மை. பெண்களிடம் X குரோமோஸோம் மட்டுமே உள்ளது. எனவே ஆண்களின் மூச்சுக்கும் இந்த குரோமோசோம்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா அல்லது இல்லையா? யார் சொல்வார்கள்? யோகப்பயிற்சி மூலமாக மூச்சை கட்டுப்படுத்தும் பிராணாயாமமும் நம் தமிழில் உண்டு. இதை துருவி ஆராய்ந்து யாரால் நமக்கு விடை சொல்ல முடியும் நமது அடுத்த தலைமுறையினரை தமிழ் ஆராய்ச்சியில் முடுக்கி விட்டாலொழிய இதற்கு வேறு வழி எதுவும் புலப்படவில்லை.
மேலும் படிக்க......

திங்கள், 16 நவம்பர், 2009

கிட்டிப்புல்லும் கிரிக்கெட்டும் [Cricket]!


தொலைந்து போன தமிழ் விளையாட்டுக்களில் கிட்டிப்புல்லும் ஒன்று. இது என்னவென்று கேட்பவர்கள் இன்று நிறைய பேர் உண்டு. ஏனெனில் நகர வாழ்க்கையில் இதை நாம் விளையாட முடியாது.

நமது சின்ன வயதில் கிட்டிப்புல் விளையாட்டை நமது தெருக்களில் பார்த்திருக்கலாம். சிறுவர்கள் சேர்ந்து அதை விளையாடுவதை பார்க்கும் பொழுதே நமக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

கிட்டி, புல், தாண்டு மற்றும் எத்தனை வார்த்தைகள். இதில் நம் இளைய தலைமுறைக்கு எத்தனை தெரியும்

கிட்டிபுல்லை கிரிக்கெட்டின் அடிப்படை என்று கூறுவர். ஆனால் இன்று கிட்டிப்புல் நம் புழக்கத்தில் இல்லை.

இந்த விளையாட்டையும் கிரிக்கெட் போல் பிரபலமாக்க கூடாதா? ஏன் இதை நாம் பிரபலமாக்கவில்லையென்றால் நமது மனப்பான்மைதான். வெளியில் இருந்து வருவனவற்றை நாம் உடனடியாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நமது பாரம்பரியத்தை மறந்து விடுகிறோம். இது விளையாட்டிலிருந்து படிப்பு, கலாச்சாரம் வரை தொடர்கிறது.

ஆகையால் நம் குழந்தைகளுக்கு கிட்டிப்புல் பற்றி சொல்லியாவது கொடுங்கள்.

எனது ஏக்கத்தை தீர்த்துக்கொள்வதற்காக இந்த படத்தை உருவாக்கியுள்ளேன். நமது கிட்டிப்புல் இந்த அளவுக்கு பிரபலாமாகினால்? நினைத்தாலே இனிக்கிறது.
மேலும் படிக்க......

வெள்ளி, 13 நவம்பர், 2009

மருந்துகளை தேன் கலந்து கொடுப்பதேன்? தேன் தேன் தித்தித்தேன்! Honeyஅந்த காலத்தில் மருந்துகளை, சூரணங்களை தேன் கலந்து நமக்கு பெரியவர்கள் கொடுப்பார்கள்... ஞாபகம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.

கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.

சிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும், மருந்தும்தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம். தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும்.

தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. அதனால் இதய நோய் இதயத்தில் நுழையபயப்படும்.

எகிப்து நாட்டில் கண் நோய், தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது. தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது.

தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.

அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும்.
மேலும் படிக்க......

புதன், 11 நவம்பர், 2009

நியூட்டனின் 3வது விதி [Newton's 3rd Law] தமிழில்!!!


ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. இது மிகவும் பிரசித்தி பெற்ற நியூட்டனின் 3வது விதி.

நமது தமிழில் ஒரு பழமொழி உண்டு. அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். நாம் இதன் அர்த்தத்தை தத்துவார்த்தமாக புரிந்து வைத்திருக்கிறோம். தவறில்லை.

ஆனால் நாம் இப்புவியில் பிறந்திருக்கிறோம். நமக்கு நம் முன்னோர்கள் இன்னொன்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள். அது என்னவென்றால் "அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை". இதன் பொருள் அனைவருக்கும் தெரியும். ஆகையால் நாம் தத்துவங்களை எவ்வாறு அறிவியல் பூர்வமாக கொண்டு வருவது என்று ஆராய்ந்து தமிழை அறிவியல் தமிழாக மாற்றுவதில் இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும், அடுத்த தலைமுறையினரும் யோசித்தால் வேண்டும்.

சிலர் வாதிடுவார்கள். இது தவறான அணுகுமுறை என்று. பரவாயில்லை. நம் நம்முடைய எண்ணங்களில் நல்லவர்களாக இருக்கிறோம். நமது கடவுளோ அல்லது ஒரு மாயையோ நம்மை நம் எண்ணங்களை வைத்துதான் எடை போடுவார்களே தவிர இவன் பணக்காரன் அல்லது ஏழை என்பதை வைத்து எடை போடமாட்டர்கள். எனவே நாம் நமது தத்துவங்களை ஆராய்ந்து அதை அறிவியல் தளத்தில், உலகில் பதிய வைத்தாலே நம் தமிழ் சுபிட்சமாகும். நாம் சுபிட்சமானால் இவ்வுலகம் நம்மை நோக்கி வரும். இதுதான் அடிப்படை. எனவே பணம் ஒன்றே குறிக்கோள் என்றில்லாமல் தமிழை வளர்ப்பதை குறிகோளாக கொண்டு இயங்கினால் நிச்சயம் நம் அனைவரையும் அனைத்தும் தேடி வரும் என்பது திண்ணம்.
மேலும் படிக்க......

திங்கள், 9 நவம்பர், 2009

செவ்வாய் கிரகத்துக்கும் [Mars - The Red Planet] செவ்வாய் தோசத்துக்கும் சம்பந்தம் உண்டா?செவ்வாய் கிரகம் அயன் III ஆக்ஸ்சைடு [Iron III Oxide or Fe2O3] தாதுக்கள் நிரம்பி இருப்பதால் அதற்கு சிவப்பு நிற கிரகம் [Red Planet] என்றொரு பெயர் உண்டு. நமது சோதிடக்கலையில் செவ்வாய் கிரகத்தை அங்காரகன் என்று அழைப்பர். அங்காரகன் என்றால் செந்தணல் என்று பொருள் வரும். ஏற்கனவே நாம் பல முறை சோதிடத்தில் சொல்லப்படும் விடயங்கள் அறிவியலிலும் சொல்லப்படுவதை கேள்விபட்டிருக்கிறோம்.

நாம் சிறிது உட்சென்று இதை ஆராய்வோம்.

இப்போது அயன் III ஆக்ஸ்சைடு பற்றி சில விடயங்களை பார்ப்போம். இது அயன் தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப்படுவது. இதன் நிறம் சிவப்பு. இது செவ்வாய் கிரகத்தின் தளம் முழுவதும் பரவி இருப்பதால்தான் செவ்வாய் கிரகம் சிவப்பாக தெரிகிறது.

மேலும் அயன் நமது உடலில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. அது என்னவென்றால் நமது சிவப்பணுக்களில் இது ஒரு முக்கியமான பொருள். சிவப்பணுக்களின் நன்மை நாம் அனைவருக்கும் தெரியும். இந்த சிவப்பணுக்கள்தான் நமது உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்சிஜனை எடுத்து செல்லும் ஒரு வாகனம். இரும்பு சத்து நம் உடலில் குறைவாக இருந்தால் அது நமது உடலில் பல பலவீனங்களை ஏற்படுத்தும் என்பதும் நாம் அறிந்ததே.

சோதிடத்தின் படி செவ்வாய் கிரகத்துக்கு அங்காரகன் என்று பெயர் உண்டு. ஏனெனில் செவ்வாய் கிரகத்துக்கு அதிபதி முருகக்கடவுள் ஆவார். இவர் தீயில் இருந்து பிறந்ததால் அங்காரகன் [செந்தணல்] என்று குறிப்பிடபடுவார். ஆகையால் செவ்வாயின் நிறம் சிவப்பு.

இப்போது செவ்வாய் தோசத்துக்கு வருவோம். செவ்வாயின் குணநலன்கள் உங்கள் ஜாதகத்தில் அளவுக்கு குறைவாக இருந்தால் உங்கள் ஜாதகம் செவ்வாய் தோசம் இருக்கும் ஜாதகமாக கருதப்படும். செவ்வாய் தோசம் நீங்க வேண்டுமெனில் முருகனை கும்பிட்டு அக்னி தீர்த்தத்தில் நீராடினால் செவ்வாய் தோசம் தீரும் என்று நம்புகின்றனர்.

நமக்கெல்லாம் ஒரு அறிவியல் உண்மை தெரியும். கிணற்று தண்ணீரிலோ குளத்து தண்ணீரிலோ இரும்பு சத்து மிக அதிகம். எனவேதான் நம்மை அதிகமாக அக்னி தீர்த்தத்தில் குளிக்க சொல்கிறார்களோ?

இந்த ஒரு விடயத்தை மட்டும் வைத்து நாம் செவ்வாய் கிரகத்துக்கும் செவ்வாய் தோசையும் முடிச்சு போட்டு விட முடியாது. ஆனால் எதுவும் இல்லை என்றும் சொல்ல முடியாது. இதற்கு ஒரே வழி... தமிழை முழு மனதோடு ஆராய்ச்சி செய்யும் மாணவ செல்வங்கள்.

இன்னும் நிறைய கேள்விகளுக்கு நம்மிடம் விடை இல்லை. ஆனால் நம் தமிழை இன்னும் தீர ஆராய்ந்தால் இதற்கெல்லாம் விடை தெரியலாம். எனவே வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் பாணியில் வீட்டுக்கு ஒரு பிள்ளை அறிவியல் தமிழில் முனைவர் பட்டம் வாங்க முயற்சிக்கலாம்.
மேலும் படிக்க......

சனி, 7 நவம்பர், 2009

மாயையும் பிளாக் ஹோலும் [Black Hole] ஒன்றா?


சைவ சித்தாந்தத்தின் படி இப்பூவுலகம் ஒரு காரியப்பொருள். ஒவ்வொரு காரியப்பொருளுக்கும் ஒரு மூலப்பொருள் உண்டு. அப்படியானால் இவ்வுலகின் மூலப்பொருள் என்ன?

அதுதான் மாயை. மாயை என்றால் அது கண்ணுக்கு புலப்படாத அருவப்பொருள் ஆகும். இந்த மாயை எங்கும் நிறைந்திருக்கும். இதுதான் சைவ சித்தாந்தம்.

நாம் இப்போது இதை இது வரையில் அறிவியல் துறையில் கண்டு பிடித்திருக்கும் விடயங்களை வைத்து பார்ப்போம்.

அறிவியலின் படி நமது பூமி அக்ரீசின் டிஸ்க்கிலிருந்து [Accretion Disc] உருவானது [http://en.wikipedia.org/wiki/Timeline_of_evolution]. அக்ரீசின் டிஸ்க் என்பது ஒரு வட்ட வடிவ பாதையில் ஒரு மத்திய பொருளை சுற்றி வருகிறது. அந்த மத்திய பொருளின் பெயர் பிளாக் ஹோல் [Black Hole - http://en.wikipedia.org/wiki/Black_hole]. பிளாக் ஹோல் என்பது வான வெளியில் உள்ள ஒரு பகுதி. இதன் ஈர்ப்பு விசை அனைத்தையும் விட பெரியது. ஏன் ஒலி கூட இதிலிருந்து தப்ப முடியாது. இது அனைத்தையும் ஈர்க்கும் ஆனால் ஒன்றும் பிரதிபலிக்காது. இதனுள்ளே நாம் எதனையும் காண முடியாது. கிட்டத்தட்ட அது ஒரு அருவம் தான்.

எனவே அறிவியல் நமது சைவ சித்தாந்தம் நோக்கி போகிறது என்று கூட நாம் பொருள் கொள்ளலாம். நாம் நம் குழந்தைகளை தமிழை மேலும் ஆராய சொன்னால் இன்னும் கூட நமக்கு மற்றவர்களுக்கு முந்தி பொருள் விளங்கலாம். ஏனெனில் நாம் நம் முன்னோர்கள் வழி வந்தவர்கள்தாமே.
மேலும் படிக்க......

வெள்ளி, 6 நவம்பர், 2009

சூடம் [Camphor] சுத்துறது எதுக்கு? சூட்சும சரீரம் [Epidermis] தெரியுமா?


நம் சிறு வயதில் இரவு படுக்கும்போது பெரியவர்கள் சிறுவ சிறுமியர்களுக்கு சூடத்தை வைத்து சுற்றி வெளியில் கொண்டு போய் எரிய வைத்து விடுவார்கள். இதிலும் ஒரு அறிவியல் உண்டு. அது என்ன தெரியுமா?


நம் உடல் இரு வகையான சரீரங்களை உடையது. ஒன்று ஸ்தூல சரீரம் [Dermis], மற்றொன்று சூட்சும சரீரம் [Epidermis]. இதில் ஸ்தூல சரீரம் சற்று தடிமனானது, சூட்சும சரீரம் மிக நுண்ணியது. கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாது. இது மிகவும் மெல்லியதாக இருப்பதால் கிருமிகள் மிக எளிதில் உள்ளே சென்று தங்கிவிடும். சூடம் இவைகளை உறிஞ்சி எடுத்து விடும் தன்மை உடையது.

நாம் நாள் முழுவதும் வெளியில் சுற்றி விட்டு வருவதால் நம் சூட்சும சரீரத்தில் நிறைய கிருமிகள் தங்கி இருக்க வாய்ப்புண்டு. ஆகையால்தான் நம் பெரியவர்கள் நம் உடம்பை சூடத்தால் சுற்றி தினசரி போடுவார்கள்.
மேலும் படிக்க......

புதன், 4 நவம்பர், 2009

மந்திரம் [Mantra] அறிவியலா?

மந்திரம்... அறிவியலை பொறுத்த வரை கெட்ட வார்த்தை. ஆன்மீகவாதிகளுக்கு உயிர். இங்கு நாம் மந்திரத்தை ஆன்மீகமாகவும் அறிவியல் பூர்வமாகவும் அலசுவோமே. ஏதாவது ஒத்துப்போகிறதா என்றுதான் பார்ப்போமே.

"ஓம்", இதுதான் அனைத்து இந்து கடவுள்களுக்கும் நாம் உபயோகப்படுத்தும் பிரணவ மந்திரம். ஆன்மீகவாதிகளின் கூற்றை பார்ப்போமே. இந்த மந்திரத்தை "அ", "வு" மற்றும் "ம" என்பதின் கூட்டுச்சொல்லே ஓம் எனும் மந்திரம். இந்த பிரித்தெழுதுதல் முறையில் இதை அம் என்றும் கூறலாம். இந்த வார்த்தை கிட்டத்தட்ட இந்த உலகில் அனைவரும் ஒரு முறையேனும் சொல்லி இருப்பார். எனவே இந்த மந்திரமே உயர்ந்தது என்று கூறுவர். இதை சொன்னால் நம் பிரச்சினைகள் அனைத்தும் உடனே விலகும் என்றும் கூறுவர்.

ஆனால் நம் இன்றைய அறிவியலுக்கு அறிவு பூர்வமான விளக்கங்கள் தேவை. அதை இந்த மந்திரத்தால் கூற முடியுமா? ஆன்மீகவாதிகளும் நம் பெற்றோர்களும் அதை நாம் யாருக்கும் விளக்கத்தேவையில்லை என்று கருத்து கூறுவர். மிகத்தவறு என்றுதான் நான் சொல்வேன். நம் அடுத்த தலைமுறைக்கு அறிவியல் பூர்வமான விளக்கங்கள் தேவை. இல்லையெனில் அவர்கள் இதை தூக்கி எரிந்து விட்டு சென்று விடுவர். அதன் பிறகு கலி முத்தி போச்சு என்று புலம்புவதில் அர்த்தமில்லை.

அறிவியல் பூர்வமான விளக்கங்களுக்கு ஆதாரபூர்வமான உண்மைகள் தேவை. ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.

[1] ஓம். உலகில் தெரிந்தோ தெரியாமலோ அதிகப்படியாக உச்சரிக்கும் ஒரு வார்த்தை. எடுத்துக்காட்டாக பசு கூட அம்மா என்று கத்தும். இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் [தமிழராக இல்லாவிட்டாலும் கூட] ம்மா என்று சொல்லாமல் இருக்காது. எனவே தெரிந்தோ தெரியாமலோ இவ்வார்த்தை அனைவராலும் சொல்லப்படுகிறது.

[2] இயற்பியல் விதிப்படி ஒன்றும் இல்லாத வெற்றிடத்தில் ஒரு இயக்கம் வேண்டுமெனில் அதற்க்கு ஒரு சக்தி தேவை. எடுத்துக்காட்டாக ஒரு இயந்திரம் இயங்க வேண்டுமெனில் அதற்கு மின்சாரம் எனும் சக்தி தேவை. மின்சாரம் நீரிலிருந்து எடுக்கலாம், நிலக்கரியிலிருந்து எடுக்கலாம். ஆனால் அதை ஒரு நிமிடத்தில் செய்து விட முடியுமா? நீரிலிருந்து மின்சாரம் எடுக்க வேண்டுமானால் அதில் ஒரு காற்றாலையை குறிப்பிட்ட வேகத்தில் சுற்ற விட்டோம் என்றால் மின்சாரம் எடுக்கலாம். ஆகவே ஒன்றும் இல்லாத இடத்தில் ஒரு இயக்கத்தை உண்டாக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு சக்தி தேவை. அச்சக்தியை உருவாக்க தொடர் இயக்கங்கள் தேவை.

[3] இப்போது மேற்கூறிய 2ல் இருந்து நாம் சில விடயங்களை அறிய முற்படலாம். வெற்றிடத்தை நாம் நம் மனமாக, வாழ்வாக எடுத்துகொள்ளலாம். நம் வாழ்வில் இயக்கங்கள் அல்லது வெற்றிகள் உருவாக வேண்டும் என்று நினைக்கிறோம். அப்போது நமக்கு சக்தி தேவை. இங்கு மின்சாரத்தை சக்தியாக உருவகித்து கொள்ளலாம். சக்தி வேண்டுமெனில் நமக்கு ஒரு காற்றாலை போன்ற ஒரு இயந்திரம் தேவை. இங்கு இயந்திரத்தை மந்திரமாக கொள்ளலாம். நமக்கு சக்தி வேண்டுமெனில் இயந்திரத்தை தொடர்ந்து இயக்க வேண்டும். அப்போதுதான் சக்தி உருவாகும். எனவே நாம் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை பல பேர் பல முறை சொல்லி அதற்கு ஒரு சக்தியை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்று நம்புகிறேன். இதில் ஓமெனும் மந்திரத்தை இந்த உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக கூறி வருகின்றன. எனவே இந்த மந்திரத்தில் சக்தி அதிகமாக கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

இறுதியாக:

இந்த மந்திரம் ஓம் என்று கூட இருக்க தேவையில்லை. அந்த மந்திரம் "நான் இன்று பரிட்சையில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும்" என்பதுவாக கூட இருக்கலாம். இந்த மந்திரத்தை எவ்வளவு முறை கூறுகிறோமோ அந்த அளவுக்கு சக்தி உருவாகும் அந்த வாக்கியத்துக்கு.

அப்துல் கலாம் மற்றும் நம் முன்னோர்கள் கூறிய "கனவு காணுங்கள்" என்ற வார்த்தைகள் கூட மந்திரங்களே. ஏனெனில் கனவு எப்போது நம் லட்சியமாக மாறும் தெரியுமா? நம்மால் அதை சாதிக்கும் சாத்தியங்கள் இருக்கும் பட்சத்தில். எப்போது அதை சாதிக்க முடியும்? அதை பற்றி அடிக்கடி நினைத்துக்கொண்டே இருக்கும்போது. அப்போதுதான் அந்த எண்ணங்களுக்கு ஒரு சக்தி கிடைக்கும், வழிகளும் தோன்றும்.

எனவே நாமும் மந்திரங்களை உருவாக்க முடியும். அது இறை மந்திரங்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
மேலும் படிக்க......

செவ்வாய், 3 நவம்பர், 2009

கோவில் கொடிமரம் [Temple Flagstaff] ஒரு அலைக்கம்பமா [Antenna]?


நமது பண்டைய காலத்து கோவில்களில் கர்ப்பகிரகத்தின் நேர் எதிரில் ஒரு கொடிமரம் அமைத்து இருப்பார்கள். கோவில் ஆகம விதிமுறைப்படி இது சரியான ஒன்று. இவை தாமிர [Copper] உலோகத்தால் ஆனவை. நம் மக்கள் அனைவரும் அதை சுற்றி விழுந்து கும்பிடுவார்கள். இதில் என்ன அறிவியல் இருக்கிறது என்கிறீர்களா?

அறிவியலின் படி தாமிரம் [Copper] ஒரு கடத்தி [Conductor] மற்றும் ஈர்க்கும் சக்தி [Receiver] கொண்ட ஒரு உலோகம். அது மின் காந்த அலைகளையோ [Electro Magnetic Waves] அல்லது அகிலக்கதிர்களையோ [Cosmic Rays] விண்மீன்திரளிலிருந்து [Galaxy] ஈர்த்து தன்னை சுற்றி அதை வெளியிடுகிறது [Emitting]. இது நமது உடலுக்கு மிகவும் நல்லது.

அதனால்தான் நம்மவர்கள் கொடிமரத்தை சுற்றி விழுந்து வணங்குகிறார்கள். அப்படியானால் நம் முன்னோர்களுக்கு இது தெரிந்திருக்கிறதா? இப்படி துல்லியமாக தெரிந்திருக்காவிட்டாலும் கட்டாயம் தாமிரம் இந்த மாதிரியான நல்ல அலைகளை வான வெளியில் இருந்து ஈர்த்து நமக்கு அளிக்கிறது என்று தெரிந்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது.மேலும் படிக்க......

சனி, 31 அக்டோபர், 2009

மனிதக்கோவிலும் [Human Temple], மனிதர்களும் கோவிலும் - திருமந்திரம்!


நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். மனிதர்களை வழிபட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை. ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிக சிறப்பு.

இந்த படத்தை பாருங்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறது.

நம் திருமூலர் திருமந்திரம் வாயிலாக உரைப்பது என்ன?

"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"

என்று பாடி மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த மாமேதை திருமூலர். இதோடு நின்று விடாது,

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"

என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,

"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!

என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.

ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும். நம் உளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல. இது அனைவருக்கும்தான். எனக்கும் சேர்த்துத்தான்.

இந்த கட்டுரையை அறிவியல் தமிழ் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த அறிவை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும் என்பதால் பகிர்ந்து கொண்டேன்.
மேலும் படிக்க......

வெள்ளி, 30 அக்டோபர், 2009

பகலில் வானம் ஏன் நீலமாக இருக்கிறது தெரியுமா? சர்.சி.வி.ராமனின் ஒளியின் மூலக்கூறு சிதறல் [Sir.C.V.Raman's Molecular Scattering of Light]

பகல் வானம் ஏன் நீலமாக உள்ளது? இது அனைவரும் தினசரி பார்க்கும் ஒன்றுதான். ஆனால் எத்தனை பேருக்கு அதை ஒரு அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்க்க முடிந்தது. பார்த்தார் ஒருவர். அவர்தான் சர்.சி.வி.ராமன் என்னும் தமிழர். அதன் காரணத்தையும் அவர் கண்டுபிடித்தார். அதுதான் ஒளியின் மூலக்கூறு சிதறல்.

1921 ஆம் ஆண்டு பிரிட்டனில் நிகழ்ந்த ஓர் விஞ்ஞானப் பேரவையில் ராமன் பங்கெடுத்துக் கப்பலில் மீளும் சமயம், ஓர் விஞ்ஞானப் புதிர் அவரது கவனத்தை ஈர்த்தது. கப்பல் மத்திய தரைக் கடல் [Mediterranean Sea] வழியாக ஊர்ந்து செல்கையில், கடல் நீரின் அடர்த்தியான நீல நிறம் அவரது கண்களைக் கவர்ந்து, சிந்தனா சக்தியைத் தூண்டியது! நீலம் நிற கடல் நீரிலிருந்து எப்படி உண்டாகிறது ? அந்த மூல வினாவே அடிப்படையாக இருந்து, ஒளியின் மூலக்கூறுச் சிதறலை [Molecular Scattering of Light] அவர் கண்டு பிடித்து, ராமன் பின்னால் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு 1930ம் வருடம் பெறுவதற்கு ஏதுவாயிற்று!

திரவம், திடவம் அல்லது வாயுவில் உள்ள மூலக்கூறுகள் [Molecules in Liquid, Solid or Gas] தம்முள் ஊடுறுவும் ஒளியை ஓரளவுச் சிதறடித்து, சிதறிய ஒளியின் அலை நீளத்தை [Wavelength] மாறும்படிச் செய்கின்றன. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering], அல்லது ராமன் விளைவு [Raman Effect] என்று பெளதிகத்தில் கூறப் படுகிறது. ராமன் ஒளிநிறப் பட்டை [Raman Spectrum] மூலக்கூறுகளின் அமைப்பைக் [Structure of Molecules] காண உதவுகிறது.

சந்திரசேகர வெங்கட ராமன் 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி நகரில் பிறந்தார். தந்தையார் விசாகப் பட்டணத்தில் கணித, பெளதிகப் பேராசிரியராய் A.V.N. கல்லூரியில் பணி யாற்றி வந்தார். ராமன் முதலில் A.V.N. கல்லூரியில் பயின்றார். அப்போது ராமன் கணிதம், பெளதிக முற்போக்குக் கோட்பாடுகளை [Advanced Concepts of Maths & Physics] எளிதில் புரிந்து ஆழ்ந்து கற்றுக் கொண்டார். அடுத்து சென்னைப் பட்டணம் பிரசிடென்ஸிக் கல்லூரில் படித்து, முதல் வகுப்பில் சிறப்புயர்ச்சி [First Class with Distinction] பெற்று, மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் 1904 இல் B.A. பட்டமும், 1907 இல் M.A. பட்டமும் பெற்றார். ராமன் 16 வயதில் பி.ஏ. படித்த போது சிறப்பாக பெளதிகத்தில் முதல்வராகத் தேறித் தங்கப் பதக்கம் பெற்றார். ராமன் எம்.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போதே அவரது ஈடுபாடு ஒளி, ஒலி ஆராய்ச்சிகளில் [Optics, Acoustics] ஆழ்ந்திருந்தது.

முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் நாம் படிக்கும் இடம் முக்கியமல்ல என்றும் நமது பகுத்தறியும் திறன்தான் மிக முக்கியம் என்பதே.
மேலும் படிக்க......

புதன், 28 அக்டோபர், 2009

எலும்புருக்கி நோய் [Tuberculosis] தீர தேரையர் வைத்தியம் 1000!

எலும்புருக்கி நோய் மைகோ பாக்டீரியா என்பதால் ஏற்படுவது. இதை தீர்க்க 6 முதல் 24 மாதங்கள் வரை அலோபதியில் தேவைபடுகிறது. ஆனால் நம் மருத்துவ தமிழ் நூலான தேரையர் வைத்தியம் மிகச்சிறப்பான வழிமுறைகளை பாடலாக கூறுகிறது.

மெய்யடா நெரிஞ்சி பிரமி யிலை
வையடா யோர் வகைக்குப் பலமரை
ஐயடா நிம்பழம் போல் திரட்டியே
செய்யடா கற்கண்டு சீனி கூட்டிடே.

கூட்டிடு விள நீரிற் குழப்பியே
மீட்டிடு மிள நீரு மிலாவிட்டால்
ஊட்டிடும் பசும் பாலுற வாகவே
கேட்டிடு மெலும் புருக்கிபோங் கார்த்திடே

உபயோகிக்கும் முறை:

நெருஞ்சில், பிரமி இலை, வகைக்கு அரைப்பலம் அரைத்து வேப்பம்பழம் போல் திரட்டி கற்கண்டு சீனி கூட்டி இளநீரில் குழப்பி உட்கொள். இளநீர் கிடைக்கா விட்டால் பசும்பாலில் குழப்பி உட்கொள், எலும்புருக்கி நோய் தீரும்.

நாம் சிந்திக்க வேண்டியது:

எலும்புருக்கி நோய்க்கு நம் தமிழில் மருந்து இருக்கிறது. அப்படியானால் நம் முன்னோர்கள் எப்படி சிந்தித்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. நாமும் நம் குழந்தைகளை நம் முன்னோர்கள் வழியில் கொண்டு செல்வோமாக.
மேலும் படிக்க......

செவ்வாய், 27 அக்டோபர், 2009

தலைக்குத்துக்கு [Headache] மருந்து

மருத்துவம் அறிந்த சங்கப் புலவர் தாமோதரனார் என்றொருவர் இருந்திருக்கிறார் என்பது அறியப்படுகிறது. அவர் பாடிய பாடல் மருத்துவத்தைக் கூறும் பாடலாக இருக்கக் காணலாம்.

சீந்திற் சருக்கரையும் சுக்குப் பொடியும் தேனுங்கலந்து மோந்தால்' யாருக்குந் தலைவலி நீங்கிவிடும் என்று பாவாணர் உரை வகுக்கின்றார்.

தலைக்குத்து எனும் தலைநோய் நரம்பு மண்டலத்துடன் இணைந்து செயல்படும் மூளையுடன் தொடர்புடையது. இக்கால மருத்துவத்தில் நரம்பு மண்டலக் குறைபாடு (Neurological Deficiency) காரணமாக வரக்கூடிய இனம் காண இயலாத தலைவலிகளை (Unidentified Migraine) மருத்துவர் தாமோதரனார் குறிப்பிடும் ‘தலைக்குத்து' நோய்க்கு இணையாகக் கருதலாம். இந்நோய்த் தீர்வுக்கு மருந்தாக சீந்தில் சருக்கரை, சுக்கு, தேன் இவை மூன்றும் ஆகும். இவை நரம்பு மண்டலங்களின் வலிமைக்குப் பெரிதும் ஊட்டம் அளிப்பவையாகும்" என்று, க. வெங்கடேசன் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார்.
மேலும் படிக்க......

திங்கள், 26 அக்டோபர், 2009

உயிரியற் கொள்கை [Senses]

உலகில் உண்டாகும் உயிர்கள் ஆறுவகையான அறிதல் என்னும் செயலைச் செய்வதாகக் கண்டனர். அவை ஒன்று முதல் ஆறுவகையான அறிதல் என்னும் செயலைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அறிதல் என்பது புலன்களின் தொழிலைக் குறிப்பதாகக் கொள்வர்.

“ஓரறிவாவது, உடம்பினால் உற்றுணர்தல்;
ஈரறிவாவது, உற்றுணர்தல், நாவினால் சுவையறிதல்;
மூவறிவாவது, உற்றுணர்தல், சுவையறிதல், மூக்கினால் முகர்ந்தறிதல்;
நாலறிவாவது, உற்றுணர்தல், சுவையறிதல், முகர்ந்தறிதல் கண்ணினால் கண்டறிதல்;
ஐயறிவாவது, உற்றுணர்தல், சுவையறிதல், முகர்ந்தறிதல், கண்டறிதல், செவியினால் கேட்டறிதல்;
ஆறறிவாவது, ஐம்பொறிகளால் அறியும் ஐம்புல வுணர்வுகளோடு மனத்தினால் சிந்தித்தறிதலும் ஆகிய ஆறறிவினை யுடைய உயிர்களாக முறைப்படுத்தியுள்ளனர்',
என்று தொல் காப்பியம் குறிப்பிடுகிறது.

ஆக தொல்காபியம் ஏற்கனவே ஆறாவது அறிவைப்பற்றி சொல்லி இருக்கிறது என்று தெரிகிறது. அது சரி பகுத்தறியும் திறன் இருந்ததால்தானே இதை பற்றி ஒரு முன்னோடியாக சொல்ல முடிகிறது. நமக்குத்தான்..???
மேலும் படிக்க......

குரல் வளம் [Great Voice] தரும் மருந்து தமிழ் இலக்கியத்தில்!

சேறை. அறிவனார் என்னும் இசை மேதையால் இயற்றப் பெற்றது பஞ்சமரபு. இசை முழவு, தாளம், கூத்து, அபிநயம் என்னும் ஐந்துக்கும் இலக்கணமாக அமைவது. இந்நூல், இசைப் பாடகர்கள் குரல் வளம் பெற மருந்தும் உரைக்கிறது.

திப்பிலி தேன்மிளகு சுக்கினோ டிம்பூரல்
துப்பில்லா ஆன்பால் தலைக்காடைஒப்பில்லா
வெந்நீரும் வெண்ணெயு மெய்ச் சாந்தும் பூசவிவை
மன்னூழி வாழும் மகிழ்ந்து

என்னும் இச்செய்யுள் திப்பிலி, தேன் மிளகு, சுக்கு, இம்பூரல், பசுவின்பால், தலைக்காடை, மெய்ச்சாந்து இவற்றை வெண்ணெய் விட்டு அரைத்து வெந்நீரில் குழைத்துப் பூசிவரக் குரலின் வளம் அதிகப்படும் என்கிறது.

பஞ்சமரபு என்னும் இந்நூல், சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லாரால் அதிகமான மேற்கோள்களுக்காகப் பயன்பட்ட நூல். இது' சிலப்பதிகார காலத்திற்கும் முற்பட்ட சங்க இலக்கியக் காலத்தை ஒட்டிய காலத்தில் தோன்றிய நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க......

வெள்ளி, 23 அக்டோபர், 2009

விரதத்தின் [Fasting] மகிமை!

இன்று கந்தர் ஷஸ்டி விரதம் முடிவுக்கு வரும் நாள். சூரசம்ஹாரம்.. அதாவது சூரபன்மாவை அழிக்கும் நாள். பக்தர்கள் தமது ஒரு வார விரதத்தை கை விடும் நாள்.

அட என்ன விந்தை! இந்த "என் தமிழ்" இடுகையில் அறிவியல் தமிழ் மட்டும்தான் பேசப்படும் என்று நினைந்தோம். ஆனால் இறை முறைகளை பற்றியும் பேசப்படுகிறதே என்கிறீர்களா?

விரதம். அது நம் உடலுக்குள் இயங்கும் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கும், சுத்திகரிப்பதற்கும் உருவான ஒரு அறிவியல் முறை. எப்படி என்கிறீர்களா?

மிருகங்கள் முதற்கொண்டு மனிதர்கள் வரை உடல் நோய்வாய்ப்ப்படும்போது சாபிடாமல் அல்லது குறைந்த உணவு உட்கொள்வது பழக்கம். அதை நாம் ஒரு ஒழுங்கு முறையாக செய்தோமானால் நமது உடல் மீண்டும் நல்ல நிலைக்கு வந்துவிடும். இதுவே உடலின் இயங்கும் முறையாகும். இதற்கு என்ன ஆதாரம் என்கிறீர்களா?

அறிவியலாளர்கள் ஒரு உண்மையை தற்சமயம் கண்டு பிடித்திருக்கிறார்கள். அது என்னவென்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டால் அது எலி உடம்பில் இருக்கும் புற்று நோயின் அளவை குறைக்கிறது. நம்ப முடிய வில்லையா? இந்த வலைத்தளத்தை படியுங்கள் http://www.sciencenews.org/view/generic/id/40242/title/Possible_anticancer_power_in_fasting_every_other_day. ஏன்? இந்த முறையால் நமது புற்றுநோய்க்கு கூட விடை கிடைக்கலாம்.

எனவே வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் உடலுக்கு உணவிடம் இருந்து விடுதலை கொடுங்கள். பிறகு பாருங்கள் வித்தியாசத்தை. ஆனால் சர்க்கரை நோயாளிகள் அவரவர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இதை கடைபிடியுங்கள்.
மேலும் படிக்க......

வியாழன், 22 அக்டோபர், 2009

உணவே மருந்து [Food is Health] : Dr.Kaniappan Padmanaban Ph.D

பண்டைய தமிழிலக்கியங்கள் தமிழர் தம் உணவு முறைகளை எடுத்து விளக்குவதுடன் உணவை உண்பதிலும் உணவைப் பல வகையாகச் சமைத்து உண்பதிலும் முன்னோடியாக விளங்கி நாகரித்தினாலும் பண்பாட்டினாலும் சிறந்து விளங்கியமையைத் தெரிவிக்கிறது.

உயிர் வாழ வேண்டுமானால் உணவு வேண்டும். உணவு இல்லாமல் உயிர் வாழ்தல் என்பது இயலாதது என்பதை உணர்ந்து'

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்று உரைத்தனர்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று தன்னிடமிருக்கும் உணவை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து அவர்களையும் வாழ்விக்கச் செய்யும் பண்பாட்டினைக் கொண்டிருந்தார்கள்.

தமிழர்களின் உணவுமுறைகள் நிலத்தின் அடிப்படையில் வெவ்வேறு வகையினவாக இருந்திருக்கின்றன. தொழில் அடிப் படையிலும், பருவத்துக்கு ஏற்றவாறும்' வயதுக்குத் தக்கவாறும் அமைந்து காணப்படுகிறது.

இன்றும் நம்மிடையே இப்படிப்பட்ட தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் டாக்டர். கனியப்பன் பத்மநாபன் Ph.D. இவர் ஜெர்மனியில் கடந்த 36 வருடங்களாக மருத்துவ நச்சியல் துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவரது பூர்வீகம் தமிழ்நாட்டிலுள்ள சாத்தூர். இவரது கொள்கையும் உணவே மருந்து என்பதுதான். இவர் ஒரு விஞ்ஞானி. இவர் தனது அனுபவங்களையெல்லாம் அவரது இடுகையில் [Blog] பதிந்து வருகிறார். மிக உபயோகமான ஒன்று. நீங்களும் படித்து பாருங்கள். பயனடையுங்கள். http://drkpadmanaban.blogspot.com என்பதே இவரது இடுகை.

மேலும் நாம் நம் உணவை கட்டுபடுத்தினால் கண்ட நோய்களுக்கு உள்ளாகத் தேவையில்லை. எனவே நாம் உணவு பழக்கத்தை கூடிய சீக்கிரம் திருத்திக்கொள்வோமாக.
மேலும் படிக்க......

புதன், 21 அக்டோபர், 2009

மார்பு சளிக்கு கூவைக் கிழங்கு [Arrow Root - Botanical Name "Maranta arundinacea"]

நோயை உண்டாக்கும் பகுதியாக முதலிடம் வகிப்பது வயிறு. அதனை அடுத்து மார்பும் மார்பில் உண்டாகும் சளியுமே என்பது மருத்துவ நூலோரின் கருத்து.

மார்புச் சளி முற்றினால், நோயாக மாறும் வாய்ப்புண்டு என்பதால் அதனைச் சிறிய அளவாக இருக்கும் போதே குணப்படுத்திக் கொள்ள முயல்வர். மார்புச்சளி நோய் முதியவர்களுக்குப் பனிக்காலங்களிலும் மற்றோர்க்குக் கடுமையான நோயினால் பாதிக்கப்படுகின்ற போதும் உண்டாகும்.

இன்றளவும் நாம் அநேகரை பார்க்கலாம். மார்பு சளி என்பது மிக மோசமானது. சிறு குழந்தைகளுக்கு primary complex முதற்கொண்டு பெரியவர்களுக்கு மிக மோசமான ஆஸ்த்மா வரை அனைத்துக்கும் மூல காரணம் இந்த மார்பு சளிதான்.

இந்நோய்க்கான மருந்தாகக் கூவைக் கிழங்கின் மாவு பயன்படுவதாகப் பதார்த்த குண போதினி குறிப்பிடுகிறது. கூவைக் கிழங்கு ஓர் அரிய மருந்தாகக் குறிப்பிடப்படுகிறது. அத்தகைய கூவைக் கிழங்கைப் பழந்தமிழர் பயன்படுத்தியிருக்கின்றனர் என்கிறது மலைபடுகடாம்.

கூவைக்கிழங்கை பற்றி மேலும் அறிய http://en.wikipedia.org/wiki/Arrowroot...
மேலும் படிக்க......

செவ்வாய், 20 அக்டோபர், 2009

ஒட்டு மருத்துவமும் (Plastic Surgery) புறநானூறும்!

இரும்பு உலோகங்களான வேல், வாள்' ஈட்டி போன்ற ஆயுதங்களால் எற்படுகின்ற புண்களில்' இரும்பின் உலோக நஞ்சு கலப்பதற்கு வாய்ப்புகள் உள. அவ்வாறு கலக்க நேர்ந்தால், உலோக நஞ்சால் (Tetanus Toxoid) உடலுக்குத் தீங்கு நேரிடலாம். அவ்வாறு நேராதிருக்க இக்கால மருத்துவர்கள் தடுப்பூசியைப் பயன்படுத்துவர். பண்டைக்கால மருத்துவர்கள் உலோக நஞ்சை முறிக்கும் மருந்தாகவும், புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப் பால் பயன் படுத்தினர் என்று புறநானூறு குறிப்பிடுகிறது.

‘வடுவின்றி வடிந்த யாக்கையான்,11 என்று பழைய நிலைக்கே உடல்நிலை பெற்றது என்பதை' இன்றைய (Plastic Surgery) ஒட்டு மருத்துவத்துடன் ஒப்பிடலாம்.

அத்திப்பாலும் அத்திப்பட்டையும் கடுப்பு, இரத்தப் போக்கு' சீதளம், முற்றிய இரணம்' மேகம் ஆகிய நோய்களைத் தீர்க்குமென மருத்துவ நூல் உரைக்கக் காண்கிறோம்.

"வீறு கடுப்பிரத்தம் வெண்சீத ரத்தமொடு
நாறுவிர ணங்களெல்லாம் நாடாவாம் கூறுங்கால்
அத்திதரு மேகம்போம் ஆயிழையே! எஞ்ஞான்றும்
அத்திப்பாற் பட்டைக் கறி''12
மேலும் படிக்க......

திங்கள், 19 அக்டோபர், 2009

அறுவை சிகிச்சையும் [Surgery] பதிற்றுப்பத்தும்

போர்க்காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய அளவில் இருந்தால் அப்புண்ணை மருந்துகளால் ஆற்றுவது கடினம் என்பதை உணர்ந்து' மருத்துவ வல்லார்களால் அப்புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுக் கட்டுவதும் நிகழ்ந்துள்ளது. இதுவே இன்றைய நாளிலும் நடைமுறையிலுள்ளது. இவ்வாறு, விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப் பத்து குறிப்பிகிறது.

“மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் ''10

நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசி.

நாம் சிந்திக்க வேண்டியது
----------------------------------------
பதிற்றுப்பத்து (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.

இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது. இவ்வளவு தொன்மையான காலத்தில் தமிழன் அறுவை சிகிச்சையை பற்றி சிந்தித்திருக்கிறான் என்றால் நாம் தற்போது இதை வைத்து எவ்வளவு முன்னேறி இருக்கலாம் இத்துறையில். ஆனால் நாம் தற்சமயம் இதை அலோபதிக்கு தாரை வார்த்துக்கொடுத்து விட்டு உக்காந்து இருக்கிறோம். இப்போதும் ஒன்றும் கேட்டு விட வில்லை. நம் அடுத்த தலைமுறைக்கு தமிழின் மகத்துவத்தை சொல்லிக்கொடுப்போம்.
மேலும் படிக்க......

சனி, 17 அக்டோபர், 2009

மூலம் [Piles] மூர்ச்சை அடைய வைக்கிறதா? நம் தமிழ் இருக்க கவலை ஏன்?

இன்றைக்கு உட்கார்ந்தே வேலை பார்ப்பது மற்றும் உணவு கட்டுப்பாடு இல்லாததால் சர்க்கரை நோய்க்கு அடுத்த படியாக அனைவரும் கஷ்டப்ப்படுவது மூலம்தான் [Piles].

இதை விரட்ட அலோபதியில் எத்தனையோ மருந்து மாத்திரைகள் இருந்தாலும் அது தங்கள் ஆசன வாயை பதம் பார்த்து விட்டுத்தான் ஓயும். மேலும் பல பக்க விளைவுகளும் இருக்கும்.

பதார்த்த குணம் - இது நம் தமிழ் சித்தர் எழுதிச்சென்ற ஒரு மருத்துவ தமிழ் நூல். இதில் மூலத்துக்கு ஒரு பாடல் பாடப்பட்டுள்ளது. பின் பற்றித்தான் பார்க்கலாமே. வேப்ப வித்தினால் என்ன பாதகம் வந்து விடப்போகிறது.

பாடல்
-------------
சீறுங் குறைநோயுஞ் சில்விஷமுஞ் சந்நிவகை
ஊறுஞ் சொறிசிரங்கு முண்மூலம் - மிறிவரும்
ஏப்பம் மலக்கிருமி யெல்லா மொழித்திடவே
வேப்பம் விதையை விரும்பு.

மருந்தின் குணம்
-------------------------------
வேப்பம் வித்தினால் குட்டம், சர்ப்ப விஷங்கள், சந்நி, சொறி, சிரங்கு, மூலம், ஏப்பம், மலத்திலுள்ள சிறுகிருமி முதலியவை போகும்.

உணவின் குணம்: செய்முறை மற்றும் உபயோகிக்கும் முறை
---------------------------------------------------------------------------------------------
வேப்பம் விதையை வேளைக்கு 1/2-1 விராகனெடை வெல்லம் கூட்டி அரைத்துத் தினந்தோறும் காலையில் இடைவிடாது ஏழுநாள் சாப்பிட மூலம் போகும். இப்படியே விட்டுவிட்டு நீடித்துச் சாப்பிட்டுக்கொண்டுவரத் தோல் சம்பந்தமான ரோகங்களையும் தேகத்தில் பற்றியுள்ள சூதக சந்நி, நரம்புகளின் இசிவு, குடலில் சஞ்சரிக்கின்ற கிருமி முதலியவற்றையும் குணமாக்கும்.

வேப்பம் விதையை சலம்விட்டு அரைத்துச் சொறி சிரங்கு முதலியவற்றிற்குப் பூசிவர ஆறும். வேப்பம் வித்து, கஸ்தூரிமஞ்சள், வெண்மிளகு கடுக்காய், நெல்லிப்பருப்பு இவற்றைப் பசுவின் பாலில் அரைத்துச் சிரசிற்கிட்டுத் தேய்த்துச் சிறிது நேரம் சென்ற பின் ஸ்நானம் செய்ய எப்பிணிகளையும் வரவொட்டாமல் தடுக்கும். இதற்குப் பஞ்சகற்பம் எனக் கூறுவர்.

நாம் சிந்திக்க வேண்டியது
------------------------------------------
எத்தனை நோய்களுக்கு பாடல்கள் எழுதி சென்றுள்ளனர் நம் தமிழ் சித்தர்கள். நம் குழந்தைகளுக்கு இவற்றை ஆராய்ச்சி செய்ய நாம் நம் வீட்டிலேயே ஒரு சிறிய நூலகம் அமைத்து அவர்களின் தமிழ் ஆராய்ச்சி தாகத்தை தூண்டுவோமாக.
மேலும் படிக்க......

வெள்ளி, 16 அக்டோபர், 2009

தள்ளிப்போகும் கர்ப்பம்... உண்டாவதற்கு தமிழின் மருத்துவ பங்களிப்பு!

இன்று நம் இளைஞ, இளைஞிகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை மலட்டுத்தன்மை. எத்தனை எத்தனை மருத்துவமனைகள். எவ்வளவு செலவுகள். ஆனால் நாமே நம் உடலை அதற்கு முன்னால் பரிட்சித்துக்கொள்ளலாம். சித்தர் தமிழ் அல்லது மருத்துவ தமிழ் என்றொரு மகா காவிய வகைகள் தமிழில் உள்ளது. இதை யாரும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆனால் இன்றளவும் பாட்டி வைத்தியம் என்ற பெயரில் சிலர் கடை பிடிக்கின்றனர். அத்தகைய மருத்துவ தமிழ் நூல்களில் ஒன்றுதான் பதார்த்த குணம். இப்போது மலை வேப்பமர வேர்ப்பட்டை [Botanical Name: Azadirachta indica] என்ற மூலிகையின் குணத்தை பற்றி பதார்த்த குணத்தில் கூறியிருப்பதை பார்ப்போம்.

பாடல் - மலை வேப்பமர வேர்ப் பட்டை
---------------------------------------------------------------------
மலட்டுப் புழுவும் வயிற்றின் வலியு
மலட்டுவாய் வும்போ மடங்கிக் கொலட்டு
முலைவேஞ் சினவேற்கண் ணோதிமமே கேளாய்
மலைவேம்பின் பேரை வழுத்து.

மருந்தின் குணம்
-------------------------------
மலை வேப்பமரத்திற்கு
மலட்டுக்கிருமி
ரத்தகுன்ம ரோகம்
ஓடிஓடிக் குதிக்கின்ற வாதம் ஆகியன விலகும்.

உணவின் குணம்: செய்முறை மற்றும் உபயோகிக்கும் முறை
------------------------------------------------------------------------------------------------
வேப்பமர வேர்ப்பட்டை பச்சை 1 பலம் கொண்டுவந்து பஞ்சுபோல் இடித்து ஒரு குடுவையில் போட்டு முக்கால் படி சலம்விட்டு ஒரு ஆழாக்காக சுண்டக்காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு வேளைக்கு அரைப் பாலடை வீதம் 3 மணி நேரத்திற்கு ஒருமுறையாகக் கொடுத்துவந்து மறுநாள் காலையில் சிற்றாமணக்கெண்ணெய் அல்லது பேதி மருந்து ஏதாவது கொடுக்கக் கிருமிகள் வெளியாகும்.

வேப்ப இலையையும் பூவையும் அரைத்துத் தலைவலிக்கு பூசக் குணமாகும். அரை பலம் பட்டைக்கு கால் படி சலம்விட்டு 1/8 படியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 11/2 அவுன்ஸ் அளவு தினம் 2 வேளை கொடுத்துவரத் தோல் சம்பந்தமான பல ரோகங்கள் குணமாகும். இன்னும் இதனால் கண்டமாலை, குட்டம் முதலியன போம். மலட்டுப் பூச்சி என்னும் கிருமிகளால் கருப்பம் தடைப்பட்ட ஸ்திரீகளுக்கு மாதவிலக்குக் காலத்தில் ஸ்நானம் செய்த 3வது நாள் வேப்ப இலைச்சாற்றை காலையில் ஒருவேளை ஒரு தேக்கரண்டியளவு பாலுடன் கலக்கிக்கொடுக்கக் கிருமிகள் விலகிக் கருப்பம் உண்டாகும். சிலருக்கு வாந்தியும் பேதியும் ஆவதுமுண்டு.

நான் ஒரு பரிந்துரைக்கப்பட்ட மருத்துவனும் அல்ல, அனுபவப்பட்ட வைத்தியனும் அல்ல. எனினும் வேப்ப மாற வேர்ப்பட்டை என்பது நம் உடலுக்கு ஒவ்வாத பொருளும் அல்ல. எனவே நாம் நம் பணத்தை மூட்டை மூடையாக கொண்டு போய் மருத்துவமனையில் கொட்டுவதற்கு முன்னால் இதை முயற்சி செய்து பார்க்கலாமே.

மேலும் என் தமிழ் இடுகையின் நோக்கமே நம் குழந்தைகளுக்கு தமிழை அறிவியல் தமிழாக பார்க்க வைக்க வேண்டும் என்பதே. நம் குழந்தைகளுக்கு நாம் இந்த மருத்துவ தமிழ் நூல்களை வாங்கி படிக்க வைத்தல் வேண்டும். அதுவே நம் குழந்தைகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும்.
மேலும் படிக்க......

புதன், 14 அக்டோபர், 2009

யூகிமுனி வைத்திய காவியம்: உட்குத்து வாய்வு [Gastric] தீர வழி!

நமக்கும் மிகவும் பரிச்சயமான உட்குத்து வாய்வு தீர நாம் அனைவரும் நாடுவது அலோபதி முறையில் தயாரான மருந்து மாத்திரைகளைத்தான். நமது தமிழ் காவியங்களிலே இதற்கு ஒரு பகுதியே உள்ளது. அதை மருத்துவ தமிழ் அல்லது சித்தர் தமிழ் என்று கூறுவோம்.

யூகிமுனி என்ற சித்தர் எழுதிய வைத்திய காவியம் புத்தகம் அப்படிப்பட்ட மருத்துவ தமிழ் வகைகளில் ஒன்று. நாம் நம் குழந்தைகளுக்கு பிறந்த நாள் பரிசாகவோ அல்லது பரிட்சையான தருணங்களில் உற்சாகப்படுத்துவதற்க்காகவோ இந்த புத்தகத்தை வாங்கி பரிசாக அளிக்கலாம். விஷயத்துக்கு வருவோம். வாய்வு தீர யூகிமுனி என்ன வழி கூறுகிறார் என்று பார்ப்போமா?

யூகிமுனி வைத்திய காவியம்
===================================
இரதம்கெந்திவெள்ளுள்ளி இயல்பாம்துரிசுசேங்கொட்டை
சரசம்உறவேவேப்பெண்ணெய் தன்னோடொக்கஅரைத்தெடுத்து
பருகச்சீலையில்தான்தடவிப் பரிவாய்ச்சுருட்டித்தான்கொளுத்தி
விரைவேப்பெண்ணெய்அடிக்கடிதான் மீதேவார்த்துத்தைலமிடே.

இடவேதைலம்காசெடைதான் இஞ்சிச்சாறுமுலைப்பால்நெய்
உடனேஉள்ளேகொள்ளதுவும் உரைத்தவேம்பின்எண்ணெயது
வடிவாய்க்கலந்துதான்கொள்ள மகத்தாம்உட்குத்துவாய்வதுதான்
சுடரோன்தன்முன்பனிபோலச் சொல்லாதோடும்கண்டீரே.

உபயோகிக்கும் முறை:
========================
இரசம், கெந்தகம், பூண்டு, துரிசு, சேங்கொட்டை, ஆகியவற்றை சம அளவு எடுத்து வேப்பெண்ணெய் விட்டு அரைத்து சீலையில் தடவி உருட்டி கொளுத்தி மேலும் மேலும் வேப்பெண்ணெய் விட்டு சுடர்த்தைலம் வாங்கவும். இந்த தைலத்தை காசெடை அளவு இஞ்சிசாறு முலைப்பால், நெய், ஆகியவற்றுடன் உள்ளே கொள்ள உட்குத்து வாய்வு என்பது சூரியனைக் கண்ட பனிபோல மறைத்துவிடும்.

இப்படிப்பட்ட அருமையான மருத்துவ புதையல்கள் நம் குழந்தைகளின் அறிவியல் மனத்தை திறக்கலாம். அவை நாளைய மருத்துவ உலகில் நமது தமிழின் பெயரை உச்சத்திற்கு கொண்டு செல்லலாம் என்பது திண்ணம். ஆகையால் நம் குழந்தைகளுக்கு நம் தமிழை ஆய்வு செய்யும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்பதே நமது குறிகோளாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க......

திங்கள், 12 அக்டோபர், 2009

தசம எண்கள் தமிழர்கள் கண்டு பிடித்ததே!

எல்லோருக்கும் 3/4 முக்கால் என்று தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு 1/16 அல்லது 3/64 தெரியும்... எண் கணிதத்தில் முழு எண்கள் மற்றும் தசம எண்களை கண்டு பிடித்ததே தமிழர்கள்தாம். வியப்பாக இருக்குமே. மேலே படிக்கவும்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2= அரை
1/4= கால்
1/5= நாளுமா
3/16= மூன்று வீசம்
3/20= மூன்றுமா
1/8= அரைக்கால்
1/10= இருமா
1/16= மாக்காணி (வீசம்)
1/20= ஒருமா
3/64= முக்கால் வீசம்
3/80= முக்கான்
1/32= அரைவீசம்
1/40 = அரைமா
1/64= கால் வீசம்
1/80= காணி
3/320= அரைக்காணி முந்திரி
1/160= அரைக்காணி
1/320= முந்திரி
1/102400= கீழ் முந்திரி
1/2150400= இம்மி
1/2,3654400= மும்மி
1/16,5580800= அணு
1/149,0227200= குணம்
1/745,1136000= பந்தம்
1/4470,6816000= பாகம்
1/31294,7712000= விந்தம்
1/532011,1104000= நாகவிந்தம்
1/7448155,5456000= சிந்தை
1/14,8963110,9120000= கதிர்முனை
1/595,8524436,4800000= குரல்வளைப்பிடி
1/35751,1466188,8000000= வெள்ளம்
1/3575114,6618880,0000000= நுன்மன்ல்
1/2,3238245,3022720,0000000= தேர்த்துகள்

முழு எண்களும் நாம்தான் கண்டு பிடித்திருக்கிறோம். தசம எண்களும் நாம்தான் கண்டு பிடித்திருக்கிறோம். பிறகு ஏன் நம் பக்கம் இருந்து விஞ்ஞானத்தில் நமது பங்களிப்பு மிக குறைவாகவே இருக்கிறது. அதற்க்கு ஒரே காரணம்... நாம் நம் தமிழின் பெருமையை உணரவில்லை. எங்கு ஆராய்ச்சிகள் அதிகமாக உள்ளதோ அங்கே முன்னேற்றம் அதி வேகமாக இருக்கும், வேலை வாய்ப்புக்கள் பெருகும். நாம் இதை உணர்ந்து நம் குழந்தைகளை தமிழை பற்றி ஆராய்ச்சி செய்ய தூண்டுவோமாக.
மேலும் படிக்க......

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

10^22 = தமிழில் என்னவென்று தெரியுமா? எண் முறையில் தமிழர்களே முன்னோடிகள்

வானவியலில் அனைவருக்கும் முன்னோடிகளான தமிழர்களுக்கு மிகப்பெரும் எண்களின் தேவையும் இருந்தது. ஆகையால் எண்களுக்கும் முன்னோடி நாமே. நம்மிடம் இருந்து அரேபியா சென்றது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட எண்களை பற்றி நாம் சிறிது தெரிந்து கொள்வோமா...

1 - ஒன்று - One
10^1 - 10 - பத்து - Ten
10^2 - 100 - நூறு - Hundred
10^3 - 1,000 - ஆயிரம் - Thousand
10^4 - 10,000 - பத்தாயிரம் - Ten Thousand
10^5 - 1,00,000 - நூறாயிரம் - One Lakh
10^6 - 10,00,000 - பத்து நூறாயிரம் - One Million
10^7 - 1,00,00,000 - கோடி - Ten Million
10^8 - 10,00,00,000 - அற்புதம் - Hundred Million
10^9 - 1,00,00,00,000 - நிகற்புதம் - One Billion
10^10 - 10,00,00,00,000 - கும்பம் - Ten Billion
10^11 - 1,00,00,00,00,000 - கணம் - Hundred Billion
10^12 - 10,00,00,00,00,000 - கற்பம் - One Trillion
10^13 - 1,00,00,00,00,00,000 - நிகற்பம் - Ten Trillion
10^14 - 10,00,00,00,00,00,000 - பதுமம் - Hundred Trillion
10^15 - 1,00,00,00,00,00,00,000 - சங்கம் - One Zillion
10^16 - 10,00,00,00,00,00,00,000 - வெல்லம் - Ten Zillion
10^17 - 1,00,00,00,00,00,00,00,000 - அன்னியம் - Hundred Zillion
10^18 - 10,00,00,00,00,00,00,00,000 - அர்த்தம் - One Quintillion
10^19 - 1,00,00,00,00,00,00,00,00,000 - பரார்த்தம் - Ten Quintillion
10^20 - 10,00,00,00,00,00,00,00,00,000 - பூரியம் - Hundred Quintillion
10^21 - 1,00,00,00,00,00,00,00,00,00,000 - முக்கோடி - One Sextillion
10^22 - 10,00,00,00,00,00,00,00,00,00,000 - மகாயுகம் - Ten Sextillion

இன்னும் மகாதோரை, மகாநிகற்பம், மகாமகரம், மகாவரி, மகாவற்புதம், மகாவுற்பலம், பிரம்மகற்பம், கமலம், பல்லம், பெகுலம், தேவகோடி, விற்கோடி, மகாவேணு, தோழம், பற்பம், கணனை எனும் தமிழ் வார்த்தைகள் உள்ளன. இவையும் மிகப்பெரிய எண்களை குறிப்பிடுவதற்காக உள்ளவையே. ஆனால் எதற்காக என்பது அவ்வளவு சரியாக தெரியவில்லை.

எண்களை அடிப்படையாக கொண்டு இந்த பூவுலகில் எவ்வளவோ சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. ஆனால் நம்மவர்களின் சாதனை தற்சமயம் எதுவும் இல்லை. அநேகர் இருந்தாலும் கணித மேதை ராமானுஜர் ஒருவர் மட்டுமே 20ம் நூற்றாண்டில் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருகிறார். நாம் தற்சமயம் 21ம் நூற்றாண்டில் உள்ளோம். இது சற்று அதிக வருடங்களாக உங்களுக்கு தோன்றவில்லை. நம் குழந்தைகளாவது தமிழ் எண்களை பற்றி ஆராய்ச்சி செய்து மேலும் இச்சமுதாயத்துக்கு பலன் அளிக்கும் வியத்தகு பங்களிப்பினை செய்ய நாம் உத்வேகம் கொடுக்க வேண்டும்.
மேலும் படிக்க......

வெள்ளி, 9 அக்டோபர், 2009

நாழிகை, விநாழிகை, லிப்தம், விலிப்தம், பரா, தத்பரா தெரியுமா?

இந்த சொற்களை கேள்விப்பட்டு இருகிறீர்களா? இவை நம் மூதாதையர்கள் காலத்தை அளக்க பயன்படுத்திய அளவைகள். ஆச்சர்யமாக உள்ளதா? கீழே படியுங்கள்.

---------------------------------------
1 நாள் = 60 நாழிகை
---------------------------------------
24 மணி
1 மணி = 2.5 நாழிகை = 60 நிமிடங்கள்
1 நாழிகை = 24 நிமிடங்கள்

---------------------------------------------
1 நாழிகை = 60 விநாழிகை
---------------------------------------------
24 நிமிடங்கள்
1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 விநாடிகள்
1 விநாழிகை = 24 விநாடிகள்

------------------------------------------
1 விநாழிகை = 60 லிப்தம்
------------------------------------------
24 விநாடிகள்
1 விநாடி = 2.5 லிப்தம் = 100 செண்டி விநாடிகள்
1 லிப்தம் = 40 செண்டி விநாடிகள்

------------------------------------------
1 லிப்தம் = 60 விலிப்தம்
------------------------------------------
40 செண்டி விநாடிகள்
1 செண்டி விநாடி = 1.5 விலிப்தம் = 10 மில்லி விநாடிகள்
1 விலிப்தம் = 6.6666 அல்லது 6.7 மில்லி விநாடிகள்

-------------------------------------
1 விலிப்தம் = 60 பரா
-------------------------------------
6.7 மில்லி விநாடிகள்
1 மில்லி விநாடி = 8.95 அல்லது 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள்
1 பரா = 111 மைக்ரோ விநாடிகள்

-------------------------------
1 பரா = 60 தத்பரா
-------------------------------
111 மைக்ரோ விநாடிகள்
1 மைக்ரோ விநாடி = .5 தத்பரா = 1000 நானோ விநாடிகள்
1 தத்பரா = 2000 நானோ விநாடிகள்

இது நம் மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே எழுதி வைத்தது. மில்லி, மைக்ரோ மற்றும் நானோ விநாடிகள் அனைத்தும் தற்சமயமே வந்தது. அப்படியானால் நம்மவர்கள் காலத்தை மிகத் துல்லியமாக அளக்க அப்பொழுதே அளவைகளை உருவாகியுள்ளனர் என்பது திண்ணம்.

நம் குழந்தைகளுக்கும் நம் தமிழை ஆராய்ச்சி செய்ய உதவுங்கள் பெற்றோர்களே.
மேலும் படிக்க......

வியாழன், 8 அக்டோபர், 2009

தமிழகத்தை சேர்ந்த டாக்டர். வெங்கி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நோபெல் பரிசு 2009

ஓர் உளம் மகிழும் நற்செய்தி. தமிழத்தில் பிறந்து அமெரிக்காவில் இருக்கும் டாக்டர். வெங்கி ராமகிருஷ்ணன் [வயது 58] அவர்களுக்கு வேதியலில் 2009ம் வருடத்துக்கான நோபெல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. நம் தமிழகத்தில் இருந்து இது 3வது முறை. 1930ல் திரு.சர்.சி.வி.இராமன் அவர்களுக்கும் 1983ல் டாக்டர். எஸ். சந்திரசேகர் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் மேலும் பெருமைப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் டாக்டர். வெங்கி ராமகிருஷ்ணன் அவர்கள் சிறு வயதில் சிதம்பரத்தில் படித்தவர் ஆவார். அவர் மேலும் கூறுகிறார், இந்த அறிவியல் பாடத்தில் எனக்கு இந்த அளவுக்கு ஆர்வம் வருவதற்கு நான் படித்த உயர் நிலை பள்ளியே காரணம் மற்றும் எனது பெற்றோர்கள் இருவரும் சிறந்த அறிவியலாளர்கள் என்கிறார்.

இதில் இருந்து நாம் படித்துக்கொள்ளும் பாடம் என்னவென்றால் நமது குழந்தை பிராயம் மிகவும் முக்கியமானது. அதில் நாம் எந்த அளவுக்கு குழந்தைகளுக்கு அறிவு தாகத்தை ஊட்டுகிறோமோ அந்த அளவுக்கு நம் குழந்தைகள் சாதிக்கும். அந்த அறிவு தாகத்தை நம் தமிழ் அவர்களுக்கு தணிக்கும்.

இந்த முக்கியமான வேளையில் நாம் டாக்டர். ராமகிருஷ்ணன் அவர்களை உளமார வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறோம்.அனைவரும் வாழ்த்துவோம்.

மேலும் இது பற்றிய விவரங்களுக்கு http://timesofindia.indiatimes.com/world/uk/India-born-scientist-wins-Nobel-Prize-in-Chemistry/articleshow/5099608.cms மற்றும் http://economictimes.indiatimes.com/news/politics/nation/Nobel-prize-winner-Venki-Ramakrishnan-makes-TN-proud/articleshow/5099135.cms
மேலும் படிக்க......

புதன், 7 அக்டோபர், 2009

விமானத்தை கண்டு பிடித்தது ரைட் சகோதரர்களா அல்லது இராவணனா?

விமானத்தை கண்டு பிடித்தது யார்? நம் ஊர் குழந்தைகள் உள்பட அனைவரும் சொல்வது ரைட் சகோதரர்கள்...

ஆனால் உண்மை அதுவா... வரலாறு நமக்கு வேறு சொல்கிறதே! நமது இராமாயணத்தில் சீதையை இலங்கை வேந்தன் இராவணன் [தமிழ் மன்னன்] கடத்திச்செல்வதற்கு புஷ்பக விமானத்தில் கடத்திச்சென்றதாக உள்ளது.

இராமாயணம் கதையா அல்லது உண்மையா என்ற விவாதத்திற்கு நாம் தற்போது செல்ல வேண்டாம். விமானம் என்ற வார்த்தை எப்படி உருவானது? மேலும் அது நின்ற இடத்தில் இருந்தே உயரே மேலெழும்பி தென் திசை நோக்கிச்சென்றதாக குறிப்பிடப்படுகிறது. இப்படி பார்க்கையில் அது ஹெலிகாப்டர் ஆகக்கூட இருக்க முடியும் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.

இப்படி இருக்கையில் நாம் இன்று விமானத்தை கண்டு பிடித்த பெருமையை ரைட் சகோதரர்களுக்கு விட்டுக்கொடுத்துள்ளோம். ஏனெனில் நமக்கு நமது கையில் இருக்கும் தமிழ்ப்புதையலின் அருமை தெரியவில்லை. இல்லையென்றால் நாம் நமது தமிழ் பெட்டகங்களை படித்து ஆராய்ச்சி செய்து நமது பெயரை உலக அரங்கில் பல முறை பதிவு செய்திருக்க மாட்டோமா?

எனவே நாம் நமது குழந்தைகளை நம் தமிழ் புத்தகங்களை, இலக்கியங்களை, இதிகாசங்களை, வரலாறுகளை ஆராய்ச்சி செய்ய உந்து சக்தி கொடுத்தல் வேண்டும். அடுத்த தலைமுறையாவது தமிழை அதன் தொன்மைக்காக மட்டும் மதிக்காமல் அதன் சமுதாய பங்களிப்புக்காகவும் மதிக்குமாறு செய்தல் வேண்டும்.
மேலும் படிக்க......

செவ்வாய், 6 அக்டோபர், 2009

கார்பன் டை ஆக்சைடும் பேயும் ஒன்றா?

இன்று 30 வயதிற்கு மேல் இருக்கும் அனைவருக்கும் இந்த வாக்கியம் நினைவிருக்கும். நம் பெற்றோர்கள் நம்மிடம், "ஏய் அந்த மரத்தடியில் ராத்திரி படுக்காதே, பேய் பிடித்து விடும்" என்று மிரட்டுவர். இது நம் முன்னோர்களிடம் இருந்து நம் பெற்றோர்கள் தெரிந்து கொண்டது. இன்று நம்மில் எத்தனை பேருக்கு இந்த வாக்கியத்தை நம் குழந்தைகளிடம் சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அல்லது சொல்லி இருக்கிறோம்.

இங்கு பேய் என்பது பேயுமல்ல, மிரட்டல் என்பது மிரட்டலுமல்ல. அதில் ஒரு அறிவியல் உண்மை உள்ளது.

இரவில் மரங்கள் கெட்ட வாயுவை [கார்பன் டை ஆக்சைட்] வெளியிடும் என்பதே அது. இந்த வாயுக்கள் நம் உடம்புக்கு நல்லது அல்ல என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை.

நாம் இந்த அறிவியல் உண்மையையாவது நம் குழந்தைகளுக்கு சொல்லி இருக்கிறோமா? அதிகப்படியாக இருக்காது என்றே நம்புகிறேன். மேலும் இரவில் மரங்கள் கெட்ட வாயுவை வெளியிடுகின்றன என்பது நம் முன்னோர்களுக்கு எப்படி தெரிந்தது? சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வி அல்லவா. ஆக நம் முன்னோர்கள் நமக்கு முன்னால் என்னவெல்லாம் கண்டு பிடித்து வைத்திருந்தார்கள் என்று எண்ணும்போது வியப்பே மேலிடுகிறது.
மேலும் படிக்க......

திங்கள், 5 அக்டோபர், 2009

சோதிடக்கலையும் வானவியலும் ஒன்றா?

தமிழில் சோதிடக்கலை என்று ஒன்று உண்டு. இன்று அதை நம்புவோர் ஒரு கூட்டமும் அதை மூட நம்பிக்கை எனப்படுவோர் ஒரு கூட்டமுமாக பிரிந்துள்ளனர். சோதிடர்களும் அதை ஒரு தொழிலாக செய்கின்றனரே தவிர்த்து அதை ஒரு பாடமாக படித்து செய்ய மறுக்கின்றனர். ஏனெனில் பாடமாக படித்து அதை செய்வதென்றால் செலவும் ஆகும், வருமானம் செய்யும் காலமும் குறையும். ஆனால் நாம் எதை இழந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா? நம் முன்னோர்கள் நமக்காக உருவாக்கி வைத்திருந்த வானவியல் பாடங்களை. நான் கூறுவதற்கு சில ஆதாரங்களை கூறுகிறேன்.


சோதிடத்தில் 12 கட்டங்கள் உண்டு. சனி என்றொரு கிரகமும் உண்டு. அனைத்து கட்டங்களுக்கு நடுவில் சூரியனும் உண்டு. நம் சோதிடக்கலையில் ஒரு கணக்கு உண்டு. அது என்னவென்றால், சனி கிரகமானது ஒரு கட்டத்தில் இருந்து இன்னொரு கட்டத்துக்கு போவதற்கு 2.5 வருடங்கள் ஆகும். இப்படியாக சனி கிரகம் 12 கட்டங்களையும் சுற்றி முடிக்க 30௦ வருடங்கள் ஆகின்றன.

நமது இன்றைய அறிவியலில் சனி கிரகமானது சூரியனை சுற்றி வர 30௦ வருடங்கள் ஆகின்றன என்று கண்டு பிடித்திருக்கின்றனர்.

எனது கேள்வி என்னவென்றால் நாம் எதற்காக எதை இழக்கிறோம் என்பதுதான். சோதிடம் மூட நம்பிக்கை என்று சொல்வது இன்று ஒரு பெருமை ஆகி விட்டது. ஆனால் நாம் நம் அடிப்படை வானவியலை இழந்து கொண்டிருக்கிறோம். என்னால் இந்த ஒரு உதாரணத்தை தவிர வேறு பல உதாரணங்களும் தர முடியும். ஒன்று, செவ்வாய் [Mars] கிரகத்தின் நிறம் சிவப்பு. இது சோதிடத்திலும் அறிவியலிலும் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு உண்மை.

நாம் நம் குழந்தைகளுக்கு வானவியலை சொல்லித்தர வேண்டாமா? நம் குழந்தைகளை நாம் சோதிடத்தில் முனைவர் பட்டம் [Ph.D] வாங்க நாம் தூண்டலாம். சிந்தியுங்கள், செயல் படுங்கள். நம் தமிழ் நம்மை கண்டிப்பாக வாழ வைக்கும், நம் குழந்தைகளையும்தான்...
மேலும் படிக்க......

அறிவே கடவுள்!

அறிவு வடிவு என்று அறியாத என்னை
அறிவு வடிவு என்று அருள் செய்தான் நந்தி

மற்றும்

அறிவுக்கு அழிவும் இல்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவு அல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிதின்றது என்றிட்டு
அறைகின்றன மறை ஈறுகள் தாமே.


என்று கூறுகின்றார் திருமூலர். நாம் நம் குழந்தைகளை அறிவு பூர்வமாக வளர்க்க மிகவும் பாடு படுகிறோம். அவர்களை விளையாட்டு பள்ளிகளில் மிகச்சிறு வயதிலேயே கொண்டு அடைக்கிறோம். ஏனென்று கேட்டால் அறிவு சிறு வயதிலேயே சிறப்பாக விருதியாகுமாம். ஆனால் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அறிவும் ஒழுக்கமும் இணைந்து ஒரு குழந்தை வளர்ந்தால்தான் அது நம் வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும். ஆகையால் நம் குழந்தைகளுக்கு நாம் அறிவின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும். அதோடு இணைந்து ஒழுக்கமும் ஊட்டப்படவேண்டும்.

ஆக அறிவே கடவுள் என்று நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்தால் அறிவை பற்றிய அறிவு வளரும். அறிவே அறிவை அறிகின்றது என்ற திருமூலரின் வார்த்தைகளை நினைவில் கூர்வோமாக.
மேலும் படிக்க......

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

திருமந்திரம் - திருமூலர்: அன்பே சிவமும், ஒன்று பூஜ்யமாவதும்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருப்பாரே!.

இதில் நாம் ஒன்று பூஜ்யமாவது எப்படி என்பதை நமது எதிர் கால தலைமுறைக்கு இரு வகைகளில் எடுத்துரைப்போம். ஒன்று நமது இறை வழிப்படி. மற்றொன்று அறிவியல் முறைப்படி.

நாம் இப்போது திருமூலரின் திருமந்திரத்தை படிப்போம். நாம் அன்பு என்று நினைப்பது அன்பாகாது. ஆனால் இந்த அன்பில்தான் கடவுளும் இருக்கின்றார். எப்படி?இந்த கலியுக அன்பில் சிறு மாற்றம் செயதோமேன்றால் நாம் உண்மையான அன்பை இனம் காணலாம். அன்பு என்பது தாய்மை. தாய்மை என்பது தூய்மை. அது அப்பழுக்கு அற்றது. அது தன்னலம் அற்றது. அது எதுவுமே அற்றது. எனவே நாம் அன்பையும் சூனியம் எனலாம். என்று நாம் அத்தகைய அன்பை பெறுகிறோமோ அன்றே நாம் சிவமாகிறோம். அதாவது கடவுள் ஆகிறோம்.

முதலாவதாக அறிவியல் முறையில்,

நாம் அன்பை ஒன்று என்று எடுத்துக்கொள்வோம். சிவத்தை பூஜ்யம் அல்லது சூனியம் என்று எடுத்துக்கொள்வோம்.

கணித முறைப்படி ஒன்றிலுருந்து ஒன்றைக்கழித்தோமென்றால் நமக்கு பூஜ்யம் கிடைக்கும்.

அதே முறையில் இறை வழிப்படி,

உன்னிலிருந்து உன்னை கழித்தோமென்றால் [அதாவது உன்னிலிருந்து நான் என்ற ஆணவத்தை] நாம் கடவுளை அதாவது அளவிலா அன்பை அடையலாம்.

நாம் நம் எதிர்கால தலைமுறைக்கு எப்படி வேண்டுமென்றாலும் இதை சொல்லிக்கொடுக்கலாம். ஆனால் நாம் இயற்பியலையும், அறிவியலையும், கணிதத்தையும் தமிழோடு சொல்லிக்கொடுத்தொமென்றால் அதை விட நமது குழந்தைகளுக்கு வேறொன்றும் நன்மை பயக்கப்போவதில்லை.
மேலும் படிக்க......