செவ்வாய், 24 நவம்பர், 2009

கே. ஆனந்த ராவ் [K.Ananda Rau] - ஒருங்காத சரங்கள் [Divergent Series]



இன்று நாம் யாரை கொண்டாடுகிறோம்? யார் நம்மால் நாயகர்களாக கொண்டாடப்படுகின்றனர்? இதற்கான விடை நாமனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் கொண்டாடவேண்டியது நம் தமிழ் அறிவியலாளர்களை. ஆகையால் நானும் அவ்வப்பொழுது எனக்கு கிடைக்கும் விடயங்களை இந்த இடுகையில் எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

கே. ஆனந்த ராவ் (1893 - 1966) சீனிவாச இராமானுசனுடைய காலத்திய கணித வல்லுனர். இராமானுசன் இளவயதிலேயே இறந்தபிறகு, இருபதாவது நூற்றாண்டின் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது பத்தாண்டுகளில், அக்காலத்திய சென்னையின் கணிதவானில் ஒரு முன்மாதிரியான விண்மீனாகத் திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் பேராசிரியர் வைத்தியநாதசுவாமியுடன், பிற்காலத்தில் வரப்போகும் இந்தியாவின் சிறந்த சில கணிதவல்லுனர்களை உருவாக்கினவர்களாவார்.

பிறப்பும், கல்வியும், சாதனைகளும்

சென்னையில் 1893 இல் பிறந்தார். பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்து விளங்கினார். 1914 இல் கேம்பிரிட்ஜ் சென்று ஜீ. ஹெச். ஹார்டியின் மாணவராகச் சேர்ந்தார். உயர்ந்த பரிசான ஸ்மித் பரிசைத் தட்டிக்கொண்டார். அங்கு முனைவர் பட்டம் பெற்றபிறகு 1919 இல் சென்னை திரும்பினார்.

1) ஹார்டியின் 'ஒருங்காத சரங்கள்' (Divergent series) என்ற நூலில், ஆனந்தராவ் தேற்றம் [Ananda Rau Theorem] என்று பெயர் சூட்டப்பட்ட தேற்றமுள்ளது
2) பகுவியல் பிரிவில் இந்தியாவிலேயே சிறந்த சிலரில் ஒருவராக மதிக்கப்பட்டவர். உலகப்புகழ் பெற்ற எம்.ஹெச்.ஸ்டோனால் இவருடைய ஆய்வுகள் மிகவும் பாராட்டப்பட்டன

நமது குழந்தைகளுக்கு
இதை படிக்கும் குழந்தைகள் அல்லது படிப்பவர்கள் தங்களது குழந்தைகளின் மனதில் அவர்களின் ஆதர்ஷ புருஷர்களாக வரிக்க கற்றுக்கொடுங்கள். அப்போதுதான் நமக்கு இவர்களை போல முத்துக்கள் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக