செவ்வாய், 3 நவம்பர், 2009

கோவில் கொடிமரம் [Temple Flagstaff] ஒரு அலைக்கம்பமா [Antenna]?


நமது பண்டைய காலத்து கோவில்களில் கர்ப்பகிரகத்தின் நேர் எதிரில் ஒரு கொடிமரம் அமைத்து இருப்பார்கள். கோவில் ஆகம விதிமுறைப்படி இது சரியான ஒன்று. இவை தாமிர [Copper] உலோகத்தால் ஆனவை. நம் மக்கள் அனைவரும் அதை சுற்றி விழுந்து கும்பிடுவார்கள். இதில் என்ன அறிவியல் இருக்கிறது என்கிறீர்களா?

அறிவியலின் படி தாமிரம் [Copper] ஒரு கடத்தி [Conductor] மற்றும் ஈர்க்கும் சக்தி [Receiver] கொண்ட ஒரு உலோகம். அது மின் காந்த அலைகளையோ [Electro Magnetic Waves] அல்லது அகிலக்கதிர்களையோ [Cosmic Rays] விண்மீன்திரளிலிருந்து [Galaxy] ஈர்த்து தன்னை சுற்றி அதை வெளியிடுகிறது [Emitting]. இது நமது உடலுக்கு மிகவும் நல்லது.

அதனால்தான் நம்மவர்கள் கொடிமரத்தை சுற்றி விழுந்து வணங்குகிறார்கள். அப்படியானால் நம் முன்னோர்களுக்கு இது தெரிந்திருக்கிறதா? இப்படி துல்லியமாக தெரிந்திருக்காவிட்டாலும் கட்டாயம் தாமிரம் இந்த மாதிரியான நல்ல அலைகளை வான வெளியில் இருந்து ஈர்த்து நமக்கு அளிக்கிறது என்று தெரிந்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது.6 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

நான் அறிந்த காலம் வரை எங்கள் ஈழத்தில் கோவில் கொடிமரங்கள், மரத்தாலானவை.
அதற்கு திருவிழாக் காலத்தில் மாத்திரம் பித்தளை
கவசமிடுவார்கள். அதாவது வருடத்தில் 15 நாட்கள்,
ஏனைய காலங்களில் அந்த மரக் கொடிமரம் கூட அகற்றப்பட்டிருக்கும், அதனால் நீங்கள் குறிப்பிடும்
கதிர் உறிஞ்சல் வீசல் உண்மையாக இருப்பினும்,இச் செயற்பாட்டால் நோக்கம் உடைக்கப்படுகிறது.
நீங்கள் குறிப்பிடும் கதிர்வீச்சுப் பயனிருப்பின் ஏன் வீட்டுக்கு ஒரு தாமிரக் கோலை நட்டுச் சுற்றவில்லை.
அப்படிச் செய்திருக்கலாம் தானே!( கேலிக்காகக் கேட்கவில்லை) காரணத்தை அறியவே கேட்கிறேன்.

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

யோகன் பாரிஸ் அவர்களே, ஆகம விதிகளின் படி கோவில் கொடிமரங்கள் ஏதேனும் உலோகத்தில்தான் செய்யப்பட்டு இருக்கும். மரத்தினால் செய்யப்பட்டு நான் இதுவரையில் பார்த்தது இல்லை. ஆகம விதிகள் பின்பற்ற படாமல் கூட அக்கோவிலை உருவமைத்திருக்கலாம். ஆனால் பண்டைய கால கோவில்களை எடுத்து பார்த்தால் அனைத்திலும் கோவில் கொடிமரங்கள் ஏதேனும் ஒரு உலோகத்தில்தான் செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்கு என்னால் ஏகப்பட்ட உதாரணங்களை தர இயலும். அதே போல் உலோகம் தாமிரமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அது நீங்கள் கூறியது போல் பித்தளையாக கூட இருக்கலாம். ஏனெனில் பித்தளையும் அறிவியலின் படி அலைகம்பமாக [Antenna] செயல்படலாம்.

அதே போல் தாமிரத்திலோ அல்லது பித்தளையிலோ அலைக்கம்பம் உருவாக்கும் திறன் தங்களுக்கு இருந்தால் நீங்கள் தாராளமாக உங்கள் வீட்டிலேயே கொடிமரம் வைக்கலாம் என்பதே உண்மை. ஏனெனில் நாம் யாவரும் வெறும் தாமிரத்திலோ அல்லது பித்தளையிலோ அலைக்கம்பம் செய்து விட முடியாது. அதற்கான வழிமுறைகள் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அப்படி தெரிந்திருந்தால் நாம் நம் வீட்டிலேயே செய்து கொள்ளலாம் அன்பரே. தவிர அந்த காலத்தில் வீட்டில் ஏன் கொடிமரம் வைக்க வில்லை என்பதற்கும் காரணம் இருந்தது. அந்த காரணத்தை நாம் இப்போது விவாதிப்பதில் அர்த்தம் இல்லை என்று உணர்கின்றேன். அதை விவாதிப்பதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நாம் விவாதிக்கலாம். தங்கள் கருத்துரைக்கு நன்றி. ஏனெனில் நாம் இப்படி விவாதிக்கும் போதுதான் நல்ல விடயங்கள் கிடைக்கின்றன. மீண்டும் நன்றி.

திண்டுக்கல் சர்தார்12818834628383879881 சொன்னது…

//Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…
யோகன் பாரிஸ் அவர்களே, ஆகம விதிகளின் படி கோவில் கொடிமரங்கள் ஏதேனும் உலோகத்தில்தான் செய்யப்பட்டு இருக்கும். மரத்தினால் செய்யப்பட்டு நான் இதுவரையில் பார்த்தது இல்லை. ஆகம விதிகள் பின்பற்ற படாமல் கூட அக்கோவிலை உருவமைத்திருக்கலாம். ஆனால் பண்டைய கால கோவில்களை எடுத்து பார்த்தால் அனைத்திலும் கோவில் கொடிமரங்கள் ஏதேனும் ஒரு உலோகத்தில்தான் செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்கு என்னால் ஏகப்பட்ட உதாரணங்களை தர இயலும்.....//


கோயில்களில் உள்ள கொடிமரம் என்பது அசல் தேக்கு அல்லது கோங்கு மரம்.வளைவு நெளிவு இல்லாமல் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்கள்.இத்தகைய தன்மை கொண்ட மரங்கள் பெரும்பாலும் மலைகளில் மட்டுமே வளர்கின்றன.எனது அரசுப் பணிக்காலத்தில் கொடைக்கானல் வட்டம் பண்ணைக்காடு,தாண்டிக்குடி போன்ற கிராமங்களில் உள்ள தேக்கு மரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு செல்வ‌தைக் கண்டிருக்கிறேன்.அளவான உருளை வடிவத்தில் செதுக்குவதியும் கண்டிருக்கிறேன்.பின்னரே தாங்கள் கூறியபடி தாமிரம் அல்லது செம்புத் தகடுகளால் சுற்றிக் கொடிக்கம்பம் வடிவமைக்கப்படும்.

நான் சென்ற நூற்றுக்கணக்கான கோயில்கள் எதிலுமே உலோகத்தாலான கொடிமரத்தைக் கண்ணுறவில்லை.தங்களுக்குத் தெரிந்தால் தகவல் அளித்தால் உடனே சென்று பார்த்து சேவித்து வருவேன்.நன்றி.

hari சொன்னது…

this is my first visit
All are interesting very nice
I dont know how to type in tamil in this comment section do i need to type from somewhere else and recopy it here or is there any possibility to give my comments in tamil?

siva kumar சொன்னது…

kodi maram marathal aannathu yendralum,shakthi kumaran mele sonnathu pola avai perumpalum uloga thagadugal portha pattu than irukkum, kaarana avai vinnill ulla min kaantha alaigalai alai kambam pola seyal pattu , vinnil irunthu urinji kovilukkul parava cheiyum. athan karanamagave, namathu maraigal kodikambathin arugil vilunthu vananga cholligindrana.

siva kumar சொன்னது…

yogan paris-- veettiku vedu yen kodimaram vaikka koodathu yendra ungal sinthanai varaverkka thagunthathu,Aanal athu sathiyam alla kaaranam, oru min kadathiyl electons iruntha pothilum, potential difference illai yennil athil minnottam irupathillai, athai pola kodimaram niruva pada, pinpu athai paramarikka, vendiya valimuraigal pala unndu, avai aalayangalil mattume mudiyum, enave than nadaluym mannavan kooda than aranmanaiyl kodimara vaikka villai.further the kodimaram will be a relay for the positive energy , so a temple can be a reservoier of positive energy always , but in home at times negative energy will be more eg during death, and consuming nonveg, hence if u have a kjodimaram in yr home the positive energy u gained thru the kodimaram will be nullified.......

கருத்துரையிடுக