திங்கள், 9 நவம்பர், 2009

செவ்வாய் கிரகத்துக்கும் [Mars - The Red Planet] செவ்வாய் தோசத்துக்கும் சம்பந்தம் உண்டா?செவ்வாய் கிரகம் அயன் III ஆக்ஸ்சைடு [Iron III Oxide or Fe2O3] தாதுக்கள் நிரம்பி இருப்பதால் அதற்கு சிவப்பு நிற கிரகம் [Red Planet] என்றொரு பெயர் உண்டு. நமது சோதிடக்கலையில் செவ்வாய் கிரகத்தை அங்காரகன் என்று அழைப்பர். அங்காரகன் என்றால் செந்தணல் என்று பொருள் வரும். ஏற்கனவே நாம் பல முறை சோதிடத்தில் சொல்லப்படும் விடயங்கள் அறிவியலிலும் சொல்லப்படுவதை கேள்விபட்டிருக்கிறோம்.

நாம் சிறிது உட்சென்று இதை ஆராய்வோம்.

இப்போது அயன் III ஆக்ஸ்சைடு பற்றி சில விடயங்களை பார்ப்போம். இது அயன் தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப்படுவது. இதன் நிறம் சிவப்பு. இது செவ்வாய் கிரகத்தின் தளம் முழுவதும் பரவி இருப்பதால்தான் செவ்வாய் கிரகம் சிவப்பாக தெரிகிறது.

மேலும் அயன் நமது உடலில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. அது என்னவென்றால் நமது சிவப்பணுக்களில் இது ஒரு முக்கியமான பொருள். சிவப்பணுக்களின் நன்மை நாம் அனைவருக்கும் தெரியும். இந்த சிவப்பணுக்கள்தான் நமது உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்சிஜனை எடுத்து செல்லும் ஒரு வாகனம். இரும்பு சத்து நம் உடலில் குறைவாக இருந்தால் அது நமது உடலில் பல பலவீனங்களை ஏற்படுத்தும் என்பதும் நாம் அறிந்ததே.

சோதிடத்தின் படி செவ்வாய் கிரகத்துக்கு அங்காரகன் என்று பெயர் உண்டு. ஏனெனில் செவ்வாய் கிரகத்துக்கு அதிபதி முருகக்கடவுள் ஆவார். இவர் தீயில் இருந்து பிறந்ததால் அங்காரகன் [செந்தணல்] என்று குறிப்பிடபடுவார். ஆகையால் செவ்வாயின் நிறம் சிவப்பு.

இப்போது செவ்வாய் தோசத்துக்கு வருவோம். செவ்வாயின் குணநலன்கள் உங்கள் ஜாதகத்தில் அளவுக்கு குறைவாக இருந்தால் உங்கள் ஜாதகம் செவ்வாய் தோசம் இருக்கும் ஜாதகமாக கருதப்படும். செவ்வாய் தோசம் நீங்க வேண்டுமெனில் முருகனை கும்பிட்டு அக்னி தீர்த்தத்தில் நீராடினால் செவ்வாய் தோசம் தீரும் என்று நம்புகின்றனர்.

நமக்கெல்லாம் ஒரு அறிவியல் உண்மை தெரியும். கிணற்று தண்ணீரிலோ குளத்து தண்ணீரிலோ இரும்பு சத்து மிக அதிகம். எனவேதான் நம்மை அதிகமாக அக்னி தீர்த்தத்தில் குளிக்க சொல்கிறார்களோ?

இந்த ஒரு விடயத்தை மட்டும் வைத்து நாம் செவ்வாய் கிரகத்துக்கும் செவ்வாய் தோசையும் முடிச்சு போட்டு விட முடியாது. ஆனால் எதுவும் இல்லை என்றும் சொல்ல முடியாது. இதற்கு ஒரே வழி... தமிழை முழு மனதோடு ஆராய்ச்சி செய்யும் மாணவ செல்வங்கள்.

இன்னும் நிறைய கேள்விகளுக்கு நம்மிடம் விடை இல்லை. ஆனால் நம் தமிழை இன்னும் தீர ஆராய்ந்தால் இதற்கெல்லாம் விடை தெரியலாம். எனவே வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் பாணியில் வீட்டுக்கு ஒரு பிள்ளை அறிவியல் தமிழில் முனைவர் பட்டம் வாங்க முயற்சிக்கலாம்.

2 கருத்துகள்:

nerkuppai thumbi சொன்னது…

செவ்வாய் தோஷத்தை பற்றி சமீபத்தில் கேள்விப் பட்டது: செவ்வாய் தோஷம் இருந்தால் Rh பாக்டர் நெகடிவ் ஆக இருக்கும். இதை சுமார் நான்கு ஐந்து பேரிடம் சரி பார்த்தேன். ஒத்து வந்தது. ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இல்லை; ஆனால் Rh negative . ஜோசியரிடம் கேட்டேன் : அவர் சொன்னது செவ்வாய் லக்னத்தில் இருந்தாலும் தோஷம் இருப்பதாய் கொள்ள வேண்டும். அப்படி என்றால் சரி தான். நிறைய சாம்பில்களில் இதை சோதித்து பார்க்க வேண்டும்.
நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும்.

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

நானும் இதை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனாலும் இதற்கு நம்மிடையே தகுந்த ஆதாரம் இல்லை என்றே சொல்ல வேண்டும். மேலும் RH பாக்டர் நெகடிவாக இருந்தால் மட்டும் செவ்வாய் தோஷம் உள்ளது என்றும் இல்லை. என் நண்பர் ஒருவருக்கு இப்படி உள்ளது ஆனால் அவருக்கு செவ்வாய் தோஷம் என்று ஒன்றும் இல்லை. எனவேதான் அதை பற்றி நான் எழுதவில்லை.

கருத்துரையிடுக