புதன், 14 அக்டோபர், 2009

யூகிமுனி வைத்திய காவியம்: உட்குத்து வாய்வு [Gastric] தீர வழி!

நமக்கும் மிகவும் பரிச்சயமான உட்குத்து வாய்வு தீர நாம் அனைவரும் நாடுவது அலோபதி முறையில் தயாரான மருந்து மாத்திரைகளைத்தான். நமது தமிழ் காவியங்களிலே இதற்கு ஒரு பகுதியே உள்ளது. அதை மருத்துவ தமிழ் அல்லது சித்தர் தமிழ் என்று கூறுவோம்.

யூகிமுனி என்ற சித்தர் எழுதிய வைத்திய காவியம் புத்தகம் அப்படிப்பட்ட மருத்துவ தமிழ் வகைகளில் ஒன்று. நாம் நம் குழந்தைகளுக்கு பிறந்த நாள் பரிசாகவோ அல்லது பரிட்சையான தருணங்களில் உற்சாகப்படுத்துவதற்க்காகவோ இந்த புத்தகத்தை வாங்கி பரிசாக அளிக்கலாம். விஷயத்துக்கு வருவோம். வாய்வு தீர யூகிமுனி என்ன வழி கூறுகிறார் என்று பார்ப்போமா?

யூகிமுனி வைத்திய காவியம்
===================================
இரதம்கெந்திவெள்ளுள்ளி இயல்பாம்துரிசுசேங்கொட்டை
சரசம்உறவேவேப்பெண்ணெய் தன்னோடொக்கஅரைத்தெடுத்து
பருகச்சீலையில்தான்தடவிப் பரிவாய்ச்சுருட்டித்தான்கொளுத்தி
விரைவேப்பெண்ணெய்அடிக்கடிதான் மீதேவார்த்துத்தைலமிடே.

இடவேதைலம்காசெடைதான் இஞ்சிச்சாறுமுலைப்பால்நெய்
உடனேஉள்ளேகொள்ளதுவும் உரைத்தவேம்பின்எண்ணெயது
வடிவாய்க்கலந்துதான்கொள்ள மகத்தாம்உட்குத்துவாய்வதுதான்
சுடரோன்தன்முன்பனிபோலச் சொல்லாதோடும்கண்டீரே.

உபயோகிக்கும் முறை:
========================
இரசம், கெந்தகம், பூண்டு, துரிசு, சேங்கொட்டை, ஆகியவற்றை சம அளவு எடுத்து வேப்பெண்ணெய் விட்டு அரைத்து சீலையில் தடவி உருட்டி கொளுத்தி மேலும் மேலும் வேப்பெண்ணெய் விட்டு சுடர்த்தைலம் வாங்கவும். இந்த தைலத்தை காசெடை அளவு இஞ்சிசாறு முலைப்பால், நெய், ஆகியவற்றுடன் உள்ளே கொள்ள உட்குத்து வாய்வு என்பது சூரியனைக் கண்ட பனிபோல மறைத்துவிடும்.

இப்படிப்பட்ட அருமையான மருத்துவ புதையல்கள் நம் குழந்தைகளின் அறிவியல் மனத்தை திறக்கலாம். அவை நாளைய மருத்துவ உலகில் நமது தமிழின் பெயரை உச்சத்திற்கு கொண்டு செல்லலாம் என்பது திண்ணம். ஆகையால் நம் குழந்தைகளுக்கு நம் தமிழை ஆய்வு செய்யும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்பதே நமது குறிகோளாக இருக்க வேண்டும்.

2 கருத்துகள்:

செந்தழல் ரவி சொன்னது…

நன்றி. இந்த மருந்துகள் எங்கே கிடைக்கும் ?

Sakthikkumaran சொன்னது…

திரு. செந்தழல் ரவி அவர்களுக்கு நன்றி. நான் வைத்தியன் அல்ல. எனது குறிக்கோள் தமிழை நம் குழந்தைகள் அறிவியல் தமிழாக பார்க்க வேண்டும் என்பதே. ஆகையால்தான் தமிழில் உள்ள பழைய நூல்களை தேடி பிடித்து அதில் உள்ள அறிவியல் குறிப்புக்களை இங்கே பதிவு செய்கிறேன்.

தாங்கள் கேட்ட கேள்விக்கு என் பதில், இந்த மருந்துகள் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

கருத்துரையிடுக