புதன், 16 டிசம்பர், 2009

மூன்று வளையமும், காலம் [Time], சக்தி [Energy] மற்றும் வெளியும் [Space]


பத்திரகிரியார் எனும் சித்தர் தனது மெய்ஞானப் புலம்பலில் 69வது பாடலாக கீழ்க்கண்டதை பாடியுள்ளார்.

"மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்?"

இதற்கு ஆன்மீக ரீதியான விளக்கங்கள் எனக்கு கிடைக்கவில்லை. எனக்கெட்டிய அறிவின் படி, இதன் விளக்கம்:

1) மூன்று வளையம் என்பது சக்தி [Energy] எனப்படும் மூலாதாரம், வெளி [Space] அல்லது பள்ளியறை எனப்படும் சுழுமுனை மற்றும் சக்தியை சுழுமுனைக்கு கொண்டு சேர்க்கும் பாதை அதாவது காலம் [Time]. காலம் இல்லையேல் எதுவும் நகராதே. இந்த மூன்று வளையங்களும் இட்டதில் முளைத்து எழுந்த முக்கோணத்தில் தோன்றும் உருத்திரன் [கடவுள் சிவன் அல்லது அவரது ஒரு அம்சம்] இந்த முக்கோணமே முக்காலமும் அறிய உதவும் திறவுகோல். அதாவது சுழுமுனை.

இதுவே இப்பாடலின் ஆன்மீக விளக்கமாக இருக்கலாம். எதுவும் தவறு இருந்தால் கூறவும்.

இப்போது நாம் இதை அறிவியல் ரீதியாக பார்ப்போம்.

1) நமது இந்த உலகம், பால் வெளி, அண்டம் அனைத்துமே மூன்று அடிப்படை உள்பொருட்களால் ஆனது. அவை காலம் [Time], சக்தி [Energy] மற்றும் வெளியும் [Space] (ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Universe)

2) நமது அண்டத்தில் இருக்கும் அனைத்துமே உருண்டை தேற்றத்தின் [Circular Theory : http://www.circular-theory.com/] படி உருண்டை வடிவானவைதான். எனினும் அறிவியல் ரீதியாக நமது அண்டம் [Universe] மூன்று வடிவங்களில் இருக்கலாம் என்று கூறுகிறார்கள் [ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Shape_of_the_Universe]. ஆனால் உருண்டை தேற்றத்தின் படி இவை மூன்றும் உருண்டையாக இருக்கிறது என்று வைத்து கொள்வோம்.

3) இவை மூன்றும் இல்லையெனில் இந்த உலகம், பெருவெளி, அண்டம் எவையும் இயங்காது என்பது அறிவியல் உண்மை. இவை மூன்றும் இணைந்ததுதான் நமது உலகம் மற்றும் அனைத்தும்


4) கணிதத்தில் போரோமியன் வளையங்கள் [ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Borromean_rings] என்று ஒன்று உள்ளது. இது என்னவெனில் மூன்று வளையங்கள் ஒன்றையொன்று உள்வழியாக இணைத்து இருப்பது. இதில் ஒரு வளையத்தை நாம் பிரித்தேடுத்தாலும் மற்ற இரு வளையங்கள் சேர்ந்து இருக்காது
5) இந்த மூன்று வளையங்களும் முட்டிக்கொள்ளும் இடத்தில் ஒரு முக்கோணம் உருவாகும் [படத்தில் காட்டியது போல]. அந்த முக்கோணம்தான் நமது அண்டம், வெளி மற்றும் காலம் சங்கமிக்கும் ஒரு பகுதி. அதாவது மூன்றும் இணையும் போதுதான் வெளிகள் உருவாகின்றன, உலகங்கள் உருவாகின்றன

இது எவ்வாறு நமது சித்தர்களுக்கு தெரிந்திருக்கும் அல்லது உணர்ந்திருப்பார்கள். நாம் நமது தமிழை மேலும் ஆய்வு செய்ய வேண்டும்...

3 கருத்துகள்:

கேசவன் சொன்னது…

/// இது எவ்வாறு நமது சித்தர்களுக்கு தெரிந்திருக்கும் அல்லது உணர்ந்திருப்பார்கள் ///

என்ன இப்படி ஒரு கேள்வியை கேட்டு விட்டீர்கள். பிரபஞ்ச ரகசியம் அறிந்தவர்களே சித்தர்கள்.

கேசவன் சொன்னது…

pls remove word verification

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

ஆம் நீங்கள் கூறுவது சரிதான். சித்தர்கள் பிரபஞ்ச ரகசியம் உணர்ந்தவர்கள்தான். ஆனால் எவ்வாறு என்றுதான் வியக்கிறேன்?

// pls remove word verification// இது என்ன?

கருத்துரையிடுக