புதன், 2 ஜூன், 2010

விக்னேஷ் மற்றும் கற்பகம் - இம்மாணவச் செல்வங்களின் மேல் படிப்புக்கு உதவுங்கள்!!!


விக்னேஷ் - திருப்பூர் மாணவன் மற்றும் கற்பகம் - செய்யாமங்கலம், கமுதி. இவர்கள் ஏழ்மையான மாணவ செல்வங்கள். நம் தமிழ்நாட்டிலிருந்து. குடும்ப வறுமையின் காரணமாக தனது கல்லூரி படிப்பை தொடர முடியாத சூழ்நிலை இருவருக்கும். ஆனாலும் மனம் தளராமல் தினமலர் பத்திரிக்கையின் வாயிலாக நமது உதவியை நாடியுள்ளார்கள். ஆதாரம்: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=10790 (விக்னேஷ்), http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=182 (கற்பகம்)...

தங்களது உதவி இம்மாணவனின் வாழ்க்கையில் பிரகாச ஒளி ஏற்படுத்தட்டும்.

ஆம், ஏழைக்கு எழுத்தறிவித்தல் எனப்படும் சுப்ரமணிய பாரதியின் உணர்வு பூர்வமான பாடலை கேள்விபட்டிருப்பீர்கள். இது செயல்பட வேண்டிய தருணம் நண்பர்களே.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

- சுப்பிரமண்ய பாரதி

எடுங்கள் உங்கள் கைபேசியினை. அழையுங்கள் கொடுத்துள்ள கைபேசி எண்ணினை...

விக்னேஷ் - 93675 28737.
கற்பகம் - 95851-41566, 97867-83244.

தங்களுக்கு இவர்களை தொடர்பு கொள்ள சிரமம் நேர்ந்தால், தினமலர் பத்திரிக்கையை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

1 கருத்து:

ச.இமலாதித்தன் சொன்னது…

"முக்கிய" வார்த்தைகள்: +2, கமுதி, கற்பகம், கல்லூரி, தமிழ், திருப்பூர், விக்னேஷ்


முக்கியம் என்பது தமிழ் வார்த்தையா...?

கருத்துரையிடுக