நம் சிறு வயதில் இரவு படுக்கும்போது பெரியவர்கள் சிறுவ சிறுமியர்களுக்கு சூடத்தை வைத்து சுற்றி வெளியில் கொண்டு போய் எரிய வைத்து விடுவார்கள். இதிலும் ஒரு அறிவியல் உண்டு. அது என்ன தெரியுமா?
நம் உடல் இரு வகையான சரீரங்களை உடையது. ஒன்று ஸ்தூல சரீரம் [Dermis], மற்றொன்று சூட்சும சரீரம் [Epidermis]. இதில் ஸ்தூல சரீரம் சற்று தடிமனானது, சூட்சும சரீரம் மிக நுண்ணியது. கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாது. இது மிகவும் மெல்லியதாக இருப்பதால் கிருமிகள் மிக எளிதில் உள்ளே சென்று தங்கிவிடும். சூடம் இவைகளை உறிஞ்சி எடுத்து விடும் தன்மை உடையது.
நாம் நாள் முழுவதும் வெளியில் சுற்றி விட்டு வருவதால் நம் சூட்சும சரீரத்தில் நிறைய கிருமிகள் தங்கி இருக்க வாய்ப்புண்டு. ஆகையால்தான் நம் பெரியவர்கள் நம் உடம்பை சூடத்தால் சுற்றி தினசரி போடுவார்கள்.
வெள்ளி, 6 நவம்பர், 2009
சூடம் [Camphor] சுத்துறது எதுக்கு? சூட்சும சரீரம் [Epidermis] தெரியுமா?
முக்கிய வார்த்தைகள்:
உடல்,
சூட்சும சரீரம்,
சூடம்,
தமிழ்,
ஸ்தூல சரீரம்,
camphor,
dermis,
epidermis,
tamil
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
தங்களுடைய கருத்துகளை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. சூட்சும சரிரமானது எபிதேர்மிஸ் அல்ல. எபிதேர்மிஸ் பஞ்ச பூத கூட்டுறவாகிய சரிரத்தை சார்ந்தது ஆனால் சூட்சும சரிரமானது சரிரதுக்கு அப்பாற்பட்டது. எனது சூட்ச்ம சரிரத்தை நான் என்னை விட்டு பல மைல் தூரம் செல்ல வைக்க முடியும் அனால் எபிதேர்மிசை அவ்வாறு செல்ல வைக்கமுடியாது. தங்கள் கருது நீங்கள் சூட்சும சரிரத்தை உனராதவர் என வெளிபடுத்துகிறது.
மனம், புத்தி, அகங்காரம் என்னும் கரணங்கள் மூன்றும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் தன்மாத்திரைகள் ஐந்தும் ஆகிய எட்டு தத்துவங்களால் ஆகியது சூட்சும அல்லது சூக்கும சரீரம் எனப்படும். இதனை புரியட்டகாயம் என்றும் கூறுவர். சரிதானே.
இப்போது என்னுடைய சூடம் மற்றும் எபிடெர்மிஸ் பற்றிய விளக்கத்துக்கு வருவோம். நான் சொல்ல நினைத்தது சூடமும் அதன் குணத்தை பற்றியும்தான்.
எபிடெர்மிஸ்... அனைத்துக்கும் மேலாக உள்ள தோல். தோல் என்பது ஒரு 6 ஞாநேந்திரியங்களில் ஒன்று என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைகிறேன். மற்றவை மனம், செவி, கண், நாக்கு, மூக்கு என்பதும் உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். இவற்றில் தோல் என்பது ஒளி என்பதை உணரும் ஒரு பகுதி.
சூட்சுமம் என்பது ஒரு மாயை. மாயை என்பது மாற்றம். எபிடெர்மிஸ் என்பதும் ஒரு மாயையே. அதாவது எபிடெர்மிஸில் 95% கேரடீனோசைட் [Keratinocyte - http://en.wikipedia.org/wiki/Keratinocyte] என்பதாகும். இதன் வேலை என்னவென்றால் நம் மேல் தோலை புனரமைபதுதான். அதாவது செல்களை உற்பத்தி செய்வது. அதுவும் தொடர்ந்து. எனவே நீங்கள் சொல்லும் எபிடெர்மிஸ் என்பது அடிக்கடி மாறும் ஒரு பகுதி. அதாவது மாயை. சூட்சுமமும் கூட.
சூட்சுமம் என்பது நீங்கள் புரிந்து கொள்ளும் வரைதான். சூட்சும சரீரமும் அப்படித்தான்.
நீங்கள் உங்கள் அருகில் யாரவது உங்களை தொடாமலேயே உங்கள் தோல் அருகில் அவர்களது விரல்களை கொண்டுவரும் போது உணர்ந்திருகிறீர்களா? கண்டிப்பாக இது அனைவருக்கும் நடந்து இருக்கும். அதன் பொருள் என்ன? ஏனெனில் நீங்கள் சொல்லும் எபிடெர்மிஸ் அதன் புனரமைப்பு வேலைகளை கேரடீனோசைட் மூலமாக பிராண வாயுவை வைத்து செய்கிறது. சூட்சும சரீரம் என்பது பிராண வாயுவை வைத்துதான் செயல்படுகிறது என்பதையும் தாங்கள் தெரிந்து வைத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவேதான் சூட்சும சரீரத்தை பிராணமயகோசம் என்பார்கள்.
மேலும் சூட்சுமம் என்பது கண்ணுக்கு புலப்படாத என்று மட்டும் அர்த்தம் அல்ல. மேலும் நாம் உன்னித்து நோக்கினால் அதிலுள்ள விடயம் புரியும். நாம் எபிடெர்மிஸை நுண்ணோக்கி வைத்து பார்ப்பது போல. சூட்சுமம் என்றால் நமக்கு புரியாத என்று கூட அர்த்தம் கொள்ளலாம். இதை ஒரு வாக்கியத்தில் என்னால் சொல்ல முடியும். கடவுள் ஒருவர் அல்லது அனைத்தும் அறிந்தவர் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கும் சூட்சும சரீரம் என்பது கண்ணுக்கு புலப்படாத என்றுதான் அர்த்தம் வருமா?
நான் தெரியாமல் ஏதாவது கூறியிருப்பின் மன்னிக்கவும். தங்களுக்கு தெரிந்ததை எனக்கும் விளக்குங்கள் சுரேஷ்.
this is wrong message, I dont accept your messages... ok....
karpooram yen? itho vilakkam.
nam aaravai suthha paduthha , athavathu nammai suttri ulla negative energy nam aaravil kaatrin vadivil paravi irukkum athai karpoorathai yettri clockwise mattrum anti clock wiseil sutrum pothu suthamadaikirathu
கருத்துரையிடுக