திங்கள், 16 நவம்பர், 2009

கிட்டிப்புல்லும் கிரிக்கெட்டும் [Cricket]!


தொலைந்து போன தமிழ் விளையாட்டுக்களில் கிட்டிப்புல்லும் ஒன்று. இது என்னவென்று கேட்பவர்கள் இன்று நிறைய பேர் உண்டு. ஏனெனில் நகர வாழ்க்கையில் இதை நாம் விளையாட முடியாது.

நமது சின்ன வயதில் கிட்டிப்புல் விளையாட்டை நமது தெருக்களில் பார்த்திருக்கலாம். சிறுவர்கள் சேர்ந்து அதை விளையாடுவதை பார்க்கும் பொழுதே நமக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

கிட்டி, புல், தாண்டு மற்றும் எத்தனை வார்த்தைகள். இதில் நம் இளைய தலைமுறைக்கு எத்தனை தெரியும்

கிட்டிபுல்லை கிரிக்கெட்டின் அடிப்படை என்று கூறுவர். ஆனால் இன்று கிட்டிப்புல் நம் புழக்கத்தில் இல்லை.

இந்த விளையாட்டையும் கிரிக்கெட் போல் பிரபலமாக்க கூடாதா? ஏன் இதை நாம் பிரபலமாக்கவில்லையென்றால் நமது மனப்பான்மைதான். வெளியில் இருந்து வருவனவற்றை நாம் உடனடியாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நமது பாரம்பரியத்தை மறந்து விடுகிறோம். இது விளையாட்டிலிருந்து படிப்பு, கலாச்சாரம் வரை தொடர்கிறது.

ஆகையால் நம் குழந்தைகளுக்கு கிட்டிப்புல் பற்றி சொல்லியாவது கொடுங்கள்.

எனது ஏக்கத்தை தீர்த்துக்கொள்வதற்காக இந்த படத்தை உருவாக்கியுள்ளேன். நமது கிட்டிப்புல் இந்த அளவுக்கு பிரபலாமாகினால்? நினைத்தாலே இனிக்கிறது.

2 கருத்துகள்:

Raja Simma Pandiyan சொன்னது…

உண்மை. எங்கள் ஊரில், பள்ளி விடுமுறையானால் போதும், கிட்டிப்புல், பம்பரம், கோலி என ஆட கிளம்பிவிடுவோம். ஞாபகம் பசுமையாக உள்ளது. ஆனால், இப்போது எங்கள் ஊர் சிறுவர்கள் கிட்டிப்புல் என்றால் என்ன என்கிறார்கள்.

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

மிக சரியாக சொன்னீர்கள்.

கருத்துரையிடுக