புதன், 7 அக்டோபர், 2009

விமானத்தை கண்டு பிடித்தது ரைட் சகோதரர்களா அல்லது இராவணனா?

விமானத்தை கண்டு பிடித்தது யார்? நம் ஊர் குழந்தைகள் உள்பட அனைவரும் சொல்வது ரைட் சகோதரர்கள்...

ஆனால் உண்மை அதுவா... வரலாறு நமக்கு வேறு சொல்கிறதே! நமது இராமாயணத்தில் சீதையை இலங்கை வேந்தன் இராவணன் [தமிழ் மன்னன்] கடத்திச்செல்வதற்கு புஷ்பக விமானத்தில் கடத்திச்சென்றதாக உள்ளது.

இராமாயணம் கதையா அல்லது உண்மையா என்ற விவாதத்திற்கு நாம் தற்போது செல்ல வேண்டாம். விமானம் என்ற வார்த்தை எப்படி உருவானது? மேலும் அது நின்ற இடத்தில் இருந்தே உயரே மேலெழும்பி தென் திசை நோக்கிச்சென்றதாக குறிப்பிடப்படுகிறது. இப்படி பார்க்கையில் அது ஹெலிகாப்டர் ஆகக்கூட இருக்க முடியும் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.

இப்படி இருக்கையில் நாம் இன்று விமானத்தை கண்டு பிடித்த பெருமையை ரைட் சகோதரர்களுக்கு விட்டுக்கொடுத்துள்ளோம். ஏனெனில் நமக்கு நமது கையில் இருக்கும் தமிழ்ப்புதையலின் அருமை தெரியவில்லை. இல்லையென்றால் நாம் நமது தமிழ் பெட்டகங்களை படித்து ஆராய்ச்சி செய்து நமது பெயரை உலக அரங்கில் பல முறை பதிவு செய்திருக்க மாட்டோமா?

எனவே நாம் நமது குழந்தைகளை நம் தமிழ் புத்தகங்களை, இலக்கியங்களை, இதிகாசங்களை, வரலாறுகளை ஆராய்ச்சி செய்ய உந்து சக்தி கொடுத்தல் வேண்டும். அடுத்த தலைமுறையாவது தமிழை அதன் தொன்மைக்காக மட்டும் மதிக்காமல் அதன் சமுதாய பங்களிப்புக்காகவும் மதிக்குமாறு செய்தல் வேண்டும்.

4 கருத்துகள்:

rajakvk சொன்னது…

//இப்படி இருக்கையில் நாம் இன்று விமானத்தை கண்டு பிடித்த பெருமையை ரைட் சகோதரர்களுக்கு விட்டுக்கொடுத்துள்ளோம். //
சிறு திருத்தம்
**விமானம் என்ற வார்த்தையை** கண்டு பிடித்த பெருமையை
என இருக்க வேண்டும்.

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

திரு. ராஜா அவர்களே தங்களது கருத்துரைக்கு நன்றி. விமானம் என்ற வார்த்தையை மட்டும் நம் இராமாயணத்தில் கூறவில்லையே! அதன் செயல்பாடுகள் குறித்தும் கூறியுள்ளனர். அதற்கு என்ன அர்த்தம். அது ஒரு பறக்கும் கருவியே என்பதற்கு நம்மிடம் எக்கச்சக்க எழுத்து உதாரணங்கள் உள்ளன. பார்க்க [http://en.wikipedia.org/wiki/Vimana]

பாலா சொன்னது…

அப்படியே... ராவணன்.. என்ன ப்ராண்ட் பெட்ரோல் அதுல போட்டார்ன்னு கண்டு புடிச்சி பெரிவங்க சொன்னாங்கன்னா. கேட்டுக்குவோம்! :) :)

சும்மா. ஜாலிக்கு..! கோவிச்சிகாதீங்க! :)

இர.கோகுலன் சொன்னது…

அதுமட்டுமல்ல...
விமானம் .... அதனது தொழிற்படும் திறன் ....
விமான உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் கூட அந்த இதிகாசத்திலும் பின்னர் அதை ஆராய்ந்தவர்களும் பல்வேறுபதிவுகளை விட்டுச்சென்றுள்ளார்கள்.
மற்றும் சீதை கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடமாக கருதப்படக்கூடிய சீதா எலிய எனும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் சான்றுகள் இராவணன் காலத்து புஸ்பகவிமானம் பற்றிய சான்றுகளும் பயன்படுத்த உதவிய பதார்த்தங்கள் பற்றியும் பல்வேறு தரவுகளை எடுத்து இயம்புகின்றன.

கருத்துரையிடுக