மருத்துவம் அறிந்த சங்கப் புலவர் தாமோதரனார் என்றொருவர் இருந்திருக்கிறார் என்பது அறியப்படுகிறது. அவர் பாடிய பாடல் மருத்துவத்தைக் கூறும் பாடலாக இருக்கக் காணலாம்.
சீந்திற் சருக்கரையும் சுக்குப் பொடியும் தேனுங்கலந்து மோந்தால்' யாருக்குந் தலைவலி நீங்கிவிடும் என்று பாவாணர் உரை வகுக்கின்றார்.
தலைக்குத்து எனும் தலைநோய் நரம்பு மண்டலத்துடன் இணைந்து செயல்படும் மூளையுடன் தொடர்புடையது. இக்கால மருத்துவத்தில் நரம்பு மண்டலக் குறைபாடு (Neurological Deficiency) காரணமாக வரக்கூடிய இனம் காண இயலாத தலைவலிகளை (Unidentified Migraine) மருத்துவர் தாமோதரனார் குறிப்பிடும் ‘தலைக்குத்து' நோய்க்கு இணையாகக் கருதலாம். இந்நோய்த் தீர்வுக்கு மருந்தாக சீந்தில் சருக்கரை, சுக்கு, தேன் இவை மூன்றும் ஆகும். இவை நரம்பு மண்டலங்களின் வலிமைக்குப் பெரிதும் ஊட்டம் அளிப்பவையாகும்" என்று, க. வெங்கடேசன் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார்.
செவ்வாய், 27 அக்டோபர், 2009
தலைக்குத்துக்கு [Headache] மருந்து
முக்கிய வார்த்தைகள்:
தமிழ்,
தலைக்குத்து,
மருத்துவம்,
headache,
medicine,
tamil
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
மிகவும் உபயோகமானப் பதிவு. ஆனால் சீந்தில் சருக்கரை என்றால் என்ன என்று தெரியவில்லை. தயவு செய்து விளக்கவும்.
கருத்துரையிடுக