இன்றைக்கு உட்கார்ந்தே வேலை பார்ப்பது மற்றும் உணவு கட்டுப்பாடு இல்லாததால் சர்க்கரை நோய்க்கு அடுத்த படியாக அனைவரும் கஷ்டப்ப்படுவது மூலம்தான் [Piles].
இதை விரட்ட அலோபதியில் எத்தனையோ மருந்து மாத்திரைகள் இருந்தாலும் அது தங்கள் ஆசன வாயை பதம் பார்த்து விட்டுத்தான் ஓயும். மேலும் பல பக்க விளைவுகளும் இருக்கும்.
பதார்த்த குணம் - இது நம் தமிழ் சித்தர் எழுதிச்சென்ற ஒரு மருத்துவ தமிழ் நூல். இதில் மூலத்துக்கு ஒரு பாடல் பாடப்பட்டுள்ளது. பின் பற்றித்தான் பார்க்கலாமே. வேப்ப வித்தினால் என்ன பாதகம் வந்து விடப்போகிறது.
பாடல்
-------------
சீறுங் குறைநோயுஞ் சில்விஷமுஞ் சந்நிவகை
ஊறுஞ் சொறிசிரங்கு முண்மூலம் - மிறிவரும்
ஏப்பம் மலக்கிருமி யெல்லா மொழித்திடவே
வேப்பம் விதையை விரும்பு.
மருந்தின் குணம்
-------------------------------
வேப்பம் வித்தினால் குட்டம், சர்ப்ப விஷங்கள், சந்நி, சொறி, சிரங்கு, மூலம், ஏப்பம், மலத்திலுள்ள சிறுகிருமி முதலியவை போகும்.
உணவின் குணம்: செய்முறை மற்றும் உபயோகிக்கும் முறை
---------------------------------------------------------------------------------------------
வேப்பம் விதையை வேளைக்கு 1/2-1 விராகனெடை வெல்லம் கூட்டி அரைத்துத் தினந்தோறும் காலையில் இடைவிடாது ஏழுநாள் சாப்பிட மூலம் போகும். இப்படியே விட்டுவிட்டு நீடித்துச் சாப்பிட்டுக்கொண்டுவரத் தோல் சம்பந்தமான ரோகங்களையும் தேகத்தில் பற்றியுள்ள சூதக சந்நி, நரம்புகளின் இசிவு, குடலில் சஞ்சரிக்கின்ற கிருமி முதலியவற்றையும் குணமாக்கும்.
வேப்பம் விதையை சலம்விட்டு அரைத்துச் சொறி சிரங்கு முதலியவற்றிற்குப் பூசிவர ஆறும். வேப்பம் வித்து, கஸ்தூரிமஞ்சள், வெண்மிளகு கடுக்காய், நெல்லிப்பருப்பு இவற்றைப் பசுவின் பாலில் அரைத்துச் சிரசிற்கிட்டுத் தேய்த்துச் சிறிது நேரம் சென்ற பின் ஸ்நானம் செய்ய எப்பிணிகளையும் வரவொட்டாமல் தடுக்கும். இதற்குப் பஞ்சகற்பம் எனக் கூறுவர்.
நாம் சிந்திக்க வேண்டியது
------------------------------------------
எத்தனை நோய்களுக்கு பாடல்கள் எழுதி சென்றுள்ளனர் நம் தமிழ் சித்தர்கள். நம் குழந்தைகளுக்கு இவற்றை ஆராய்ச்சி செய்ய நாம் நம் வீட்டிலேயே ஒரு சிறிய நூலகம் அமைத்து அவர்களின் தமிழ் ஆராய்ச்சி தாகத்தை தூண்டுவோமாக.
சனி, 17 அக்டோபர், 2009
மூலம் [Piles] மூர்ச்சை அடைய வைக்கிறதா? நம் தமிழ் இருக்க கவலை ஏன்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
கோவையில் என் நண்பர் ஒருவர் (காவல் துறையில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர்) தன் ஓய்வு நேரத்தை உபயோகமாக கழிக்க தனக்கு தெரிந்த மூலிகைகளை பற்றி விளக்கமாக பிளாக் எழுதி வருகிறார். உங்களுக்கு உபயோகமாக இருக்குமா என பார்க்கவும். http://mooligaivazam-kuppusamy.blogspot.com/
கருத்துரையிடுக