எலும்புருக்கி நோய் மைகோ பாக்டீரியா என்பதால் ஏற்படுவது. இதை தீர்க்க 6 முதல் 24 மாதங்கள் வரை அலோபதியில் தேவைபடுகிறது. ஆனால் நம் மருத்துவ தமிழ் நூலான தேரையர் வைத்தியம் மிகச்சிறப்பான வழிமுறைகளை பாடலாக கூறுகிறது.
மெய்யடா நெரிஞ்சி பிரமி யிலை
வையடா யோர் வகைக்குப் பலமரை
ஐயடா நிம்பழம் போல் திரட்டியே
செய்யடா கற்கண்டு சீனி கூட்டிடே.
கூட்டிடு விள நீரிற் குழப்பியே
மீட்டிடு மிள நீரு மிலாவிட்டால்
ஊட்டிடும் பசும் பாலுற வாகவே
கேட்டிடு மெலும் புருக்கிபோங் கார்த்திடே
உபயோகிக்கும் முறை:
நெருஞ்சில், பிரமி இலை, வகைக்கு அரைப்பலம் அரைத்து வேப்பம்பழம் போல் திரட்டி கற்கண்டு சீனி கூட்டி இளநீரில் குழப்பி உட்கொள். இளநீர் கிடைக்கா விட்டால் பசும்பாலில் குழப்பி உட்கொள், எலும்புருக்கி நோய் தீரும்.
நாம் சிந்திக்க வேண்டியது:
எலும்புருக்கி நோய்க்கு நம் தமிழில் மருந்து இருக்கிறது. அப்படியானால் நம் முன்னோர்கள் எப்படி சிந்தித்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. நாமும் நம் குழந்தைகளை நம் முன்னோர்கள் வழியில் கொண்டு செல்வோமாக.
புதன், 28 அக்டோபர், 2009
எலும்புருக்கி நோய் [Tuberculosis] தீர தேரையர் வைத்தியம் 1000!
முக்கிய வார்த்தைகள்:
எலும்புருக்கி நோய்,
குழந்தைகள்,
தமிழ்,
தேரையர் வைத்தியம்,
children,
tamil,
Tuberculosis
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
nalla karutthu,siddharkalin marutthuvam pakkavilaivu illatha theervai kodukkirathu,yen anubavatthil 'blood pressure'nallennai utchi thalayil theikka kunamaanathu,
மிக்க சரியாக சொன்னீர்கள் ராஜேந்திரன் அவர்களே. தாங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? தமிழின் மீது ஆர்வம் அதிகம் உள்ளவர்கள் நாம். ஒன்று கூடி அர்த்த விவாதங்கள் நடத்தலாமே? விருப்பமா?
கருத்துரையிடுக