சனி, 31 அக்டோபர், 2009

மனிதக்கோவிலும் [Human Temple], மனிதர்களும் கோவிலும் - திருமந்திரம்!


நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். மனிதர்களை வழிபட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை. ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிக சிறப்பு.

இந்த படத்தை பாருங்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறது.

நம் திருமூலர் திருமந்திரம் வாயிலாக உரைப்பது என்ன?

"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"

என்று பாடி மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த மாமேதை திருமூலர். இதோடு நின்று விடாது,

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"

என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,

"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!

என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.

ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும். நம் உளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல. இது அனைவருக்கும்தான். எனக்கும் சேர்த்துத்தான்.

இந்த கட்டுரையை அறிவியல் தமிழ் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த அறிவை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும் என்பதால் பகிர்ந்து கொண்டேன்.

2 கருத்துகள்:

Suresh சொன்னது…

தங்கள் சற்றுமுன் எழுதிய ஒரு கட்டுரையில் சித்தர்களின் பாடல்களையும், மருத்துவ முறைகளையும் சற்றுமுன் விளக்கியதை கண்டு மனமகிழ்ச்சி அடைந்தேன். தங்கள் சித்தர்கள் கூறியதை விஞ்ஞான ரீதியான உண்மை என ஏற்று கொண்டது எனக்கு ஆனந்தம் அளித்தது. இருப்பினும் சித்தர்கள் இவவாறு சக்தி பெறவும் அணைத்து பிணிகளுக்கும் மருத்துவ முறைகளை கண்டு அறிந்ததற்கும் கரணம் என்ன என்று விளக்கி இருந்திர்கள் என்றால் மேலும் மகிழ்ச்சி அடைந்துஇருப்பேன்.

பண்டை தமிழ்நாட்டில் பண்டை தமிழர்களுடைய பழக்கவழக்கங்கள் மறைந்து கொண்டு இருக்கும் இந்த தறுவாயில் அவற்றை வெளிக்கொண்டுவர தங்கள் எடுக்கும் முயற்சியை பாராட்டுகின்றேன். இத்தகைய பழகவழகங்களில் ஒன்று வாசியோகம் என அழைக்கப்படும் பிரான பானம் எனும் பழக்கமும் ஒன்று. இப் பிரான பான பழக்கம் சர நூல் சாஷ்ரத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு அனைவரும் பிரானயாமம் என்று பயில்வதை நாம் அறிவோம். ஆனால் பிரான பானம் அதற்கும் மேலானது. நான் அறிந்தவரை இக்கலையை அறிந்து உலக அளவில் பயின்று வரும் மாணாக்கர்கள் அயிம்பதுக்கும் குறைவானவர்களே. இக்கலையை வள்ளுவ நாயனார் எழுதிய "ஞானவெட்டியான்" என்னும் நூலை பயின்றவர்கள் அரிந்துஇருக்ககூடும்.

இப்பழக்கத்தை பயில்பவர்கள் தங்கள் உடலினுழ் சென்று உடலின் இயக்கத்தை அறிந்து உடலினுழ் கடவுளை வழிபடுகின்றனர். இச்சற நூல் சாஸ்திரம்
விந்து நாத தத்துவம் என்றும் உடற்குறு தத்துவம் என்றும் அழைகபடுகின்றது. இந்து மதத்தில் கோயில்கள் அமைக்கப்பட்ட முறை நம் உடலினுழ் இருக்கும் அமைப்பை சார்ந்தது என்று இப்பழக்கத்தை பயில்பவர்கள் உணரலாம்.

இதன் காரணமாகவே நமுழ் இருந்து எழும்பும் ஓசையை "தமுழ்" என நம் முதாதோர் அழைத்தனர். இதுவே காலப்போக்கில் மருவி தமிழ் என ஆயிற்று. நான் இதை சில நாட்களுக்கு முன் கூறியதை நீங்கள் நிநைவுகூரலாம். தாங்கள் என் கருத்தை ஏற்றுக்கொள்ள விட்டாலும் இதுவே உண்மை. இதை தமுழ் செல்பவர்கள் அறிவர்.

Sakthikkumaran Vijayaraghavan சொன்னது…

தங்களது பதில் கண்டு மிக மகிழ்ச்சி. வள்ளுவ நாயனாரின் ஞானவெட்டியான் புத்தகத்தை பற்றி நானும் அடுத்த பகுதிகளில் விரிவாக எழுதலாம் என்று இருந்தேன். அதற்குள் நீங்களே கூறி விட்டீர்கள். இவை எல்லாம் என் தந்தை தெய்வத்திரு. து. விஜயராகவன் அவர்களின் புத்தக குவியல்களின் கொடை. என்னால் இயன்ற அளவுக்கு காலம் நமக்கு நம் முன்னோர்கள் வாயிலாக சொல்லித்தந்ததை பதிய முயற்சிக்கிறேன். தமிழ் என்ற வார்த்தையின் அர்த்தத்தை நானும் புரிய முயற்சித்து விட்டு உங்களுக்கு பதில் அளித்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்து பதிவுகளை தொடருங்கள் நம் தமிழுக்காக...

கருத்துரையிடுக